'மாநகராட்சிப் பணியா ளர்களைத் தன் சொந்த தோட்ட வேலைகளுக் காக, வாரக் கணக்கில் பயன்படுத்தினார்’ என்று கோவை மாநகராட்சி ஆணை யாளர் மீதான புகார்தான் ஏரியாவில் ஹாட்.

கோவை மாநகராட்சி ஆணையாளரான பொன்னுசாமி மீது புகார் கொடுத்ததோடு நில்லாமல், போராட்டத்தில் இறங்கி இருக்கும் தமிழ்ப் புலிகள் அமைப்பு மையக் குழு உறுப்பினரான இளவேனிலிடம் பேசினோம். ''பொன்னுசாமிக்கு தெக்கலூரில் இருந்து சில கிலோமீட்டர்கள் தள்ளி ஆறரை ஏக்கரில் தோட்டம் இருக்கிறது. இந்தத் தோட்டத்தில் தேக்கு, தென்னை மரங்களை நடுவதற்காக கோவை மாநகராட்சியின் 23 மற்றும் 24-வது வார்டுகளில் பணியாற்றும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களைப் பயன்படுத்தி இருக்கிறார். கடந்த மே மாதம் 17-ம் தேதியில் இருந்து ஜூன் 2-ம் தேதி வரை இந்த அதிகார துஷ்பிரயோகம் நடந்திருக்கிறது. காலையில் 6 மணிக்கு இவர்கள் வந்து கையெழுத்துப் போட்டதும், மாநகராட்சியின் லாரி மூலம் 20 துப்புரவுப் பணியாளர்களை ஏற்றிக்கொண்டு கோவையில் இருந்து வெகு தூரத்தில் இருக்கும் அந்தத் தோட்டத்துக்கு கூட்டிச் சென்றிருக்கிறார்கள்.

அங்கே காய்ந்து கிடக்கும் தோப்பை சரி செய்வதற்காக அயராது உழைத்திருக்கிறார்கள். வெயிலுக்கு ஒதுங்கக்கூட இடம் இல்லையாம். கடுமையான வேலை வாங்கிய பிறகு இரவு 7 மணிக்கு மீண்டும்

கொண்டுவந்து கோவையில் இறக்கி விட்டிருக்கிறார்கள். பணியாளர்களை ஒருங்கிணைத்து மாநகராட்சியின் வாகனத்திலேயே அழைத்துப்போனது, மாநகராட்சியின் சுகாதார ஆய்வாளரான ஆண்டி யப்பன். மாநகராட்சி ஊழியர்களை தன் சொந்த வேலைக்குப் பயன்படுத்தும் அதிகாரத்தை பொன்னுசாமிக்கு யார் கொடுத்தது? அதனால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டர் கருணாகரனிடம் புகார் மனு கொடுத்து இருக்கிறோம்'' என்கிறார்.

கடந்த 15-ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட துப்புரவுப் பணியாளர்கள், ''கமிஷனர் வீட்டுத் தோட்டத்துல வேலை பார்க்க எங்களைக் கூட்டிட்டுப்போனது நிஜம் தான். வெளிப்படையா அவர் மேல் புகார் சொன்னா, எங்களுக்குத்தான் பிரச்னை. கலெக்டர் சார் ரகசியமாக் கூப்பிட்டுக் கேட்டா, உண்மையைச் சொல்லத் தயாரா இருக்கோம்'' என்கிறார்கள்.

ஆணையாளர் பொன்னுசாமியிடம் இந்தக் குற்றச்சாட்டு குறித்துப் பேசினோம். ''யாரோ வேணும்னே இப்படி ஒரு வதந்தியைக் கிளப்பி இருக்கிறார்கள். துப்புரவுப் பணியாளர் யாரையும், ஒரு நாள்கூட நான் என் தோட்டப் பணிக்காகப் பயன்படுத்தவில்லை. நான் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நேர்மையாகப் பணியாற்றி வருகிறேன்'' என்று விளக்கம் கொடுத்தார்.

நெருப்பில்லாமல் புகையுமா என்று விசாரிக்க வேண்டியது கலெக்டரின் கடமை.

- எஸ்.ஷக்தி, படங்கள்: வி.ராஜேஷ்