எங்கே பிரச்னை என்றாலும் உடனே பாதுகாப் புக்கு வருபவர்கள் ஆயுதப் படை போலீஸார். ஆனால், அவர்களுக்கே பாதுகாப்பு இல்லை.

திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் தனியாகப் பிரிந்த பிறகு, 1992-ல் தூத்துக்குடி மாவட்டத்துக்குத் தனியாக ஆயுதப் படை பிரிவு உருவாக்கப்பட்டது. வ.உ.சி. கல்லூரி வளாகத்தில் சுமார் 450 வீரர்கள், 50 அதிகாரிகள் என 500 பேர் பணியாற்றி வருகிறார்கள். விடுதி, பயிற்சி மைதானம், ஆயுத வைப்பறை, வாகன இடம் போன்ற வசதிகள் பற்றாக்குறையாக இருப்பதை உணர்ந்த அப்போதைய அரசு, 1998-ம் வருடம் தூத்துக்குடியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள பேரூரணியில் கட்டடம் கட்டிக் கொடுத்தது. ஆனால் தூத்துக் குடியில் இருந்து வெகு தூரத்தில் இருப்பதால் அவசரத்துக்குச் செல்ல முடியாது என்று கருதி, புதிய கட்டடம், பயிற்சிப் பள்ளியாக மாற்றப்பட்டது. ஆனால், வீரர்களுக்கு வேறு இடம் ஒதுக்கப் படாத காரணத்தால், இன்னமும் வ.உ.சி. கல்லூரி வளாகத்தில்தான் இருக்கிறார்கள்.

இதுகுறித்து ம.தி.மு.க-வின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளரும் வழக்கறிஞருமான ஜோயல், ''வ.உ.சி. வளாக வாடகைக் கட்டடம், சில மாதங்களுக்கு முன்னர் இடிந்து விழுந்தது. அப்போது உள்ளே இருந்த பல நவீன ரக ஆயுதங்கள் சேதமாகிவிட்டன. வீரர்கள் ஏகப்பட்ட இன்னல்களை

அனுபவித்துக்கொண்டுதான் அங்கே இருக்கிறார்கள். 450 பேர்கள் பயன்படுத்துவதற்கு இரண்டே கழிவறைகள்தான் இருக்கின்றன என்றால், அது எந்த லட்சணத்தில் இருக்கும்? அதனால் வீரர்கள் காலைக் கடனைக் கழிக்கக்கூட காடு மேடாக அலைய வேண்டியிருக்கிறது. இதில் பெண் வீரர்களின் நிலைமை இன்னும் மோசம். அதனால் பெரும்பாலான ஆயுதப் படை வீரர்களும் அதிகாரிகளும் பக்கத்தில் வாடகைக்கு வீடுகள் எடுத்துத் தங்கி இருக்கிறார்கள். அவசரமான பணியைச் செய்யக்கூடியவர்கள், ஆங்காங்கே தங்கி இருந்தால் எப்படி உடனடியாக ஒன்று சேர முடியும்? போராடும் உரிமை இல்லாத காரணத்தால் போலீஸார் புழுங்கிக்கொண்டு இருக்கிறார்கள். இதே நிலைமை நீடித்தால், இவர்களுக்காக போராட்டம் நடத்தவும் இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்லவும் தயங்க மாட்டோம்'' என்றார்.

இதுகுறித்துப் பேசிய மாவட்ட எஸ்.பி. ராஜேந்திரன், ''ஆயுதப் படை பிரிவினருக்காக பேரூரணியில் விடுதி கட்டப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அங்கு போக மறுத்ததால், அது பயிற்சி பள்ளியாக மாற்றப்பட்டது. ஆயுதப் படை வீரர்கள் ஊர் பக்கத்திலேயே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதுதான் பிரச்னை. கலெக்டர் புதிய இடத்தைத் தேர்வு செய்ததும் அங்கு கட்டடம் கட்ட நிதி ரெடியாக இருக்கிறது'' என்றார்.

மாவட்ட கலெக்டர் ஆஷிஸ்குமார், ''நாங்கள் தேர்வு செய்த இடத்தில் ஒரு வழக்கு இருந்தது. இப்போது அது முடிந்துவிட்டது. இனி பணி வேகமாக நடக்கும்'' என்றார் பொறுப்பாக.

- எஸ்.சரவணப்பெருமாள்

படங்கள்: ஏ.சிதம்பரம்