'தேனி அருகே மேலப்பட்டி கிராமத்தில் வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த பழனிச்சாமியும் தலக்கம்மாளும் காதலித்து, ஊரைவிட்டு ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டார்கள். அதனால் ஊரில் உள்ள ஒரு பிரிவினர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. ஊரைவிட்டு வெளியேற கெடுபிடி செய்கிறார்கள்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல் (044-66808002) தகவல் சொன்னது.

மேலப்பட்டி கிராமத்தில் உள்ள குறிப்பிட்ட குடியி ருப்புப் பகுதிக்குள் சென்றோம். பெண்கள், முதியவர்களைத் தவிர இளைஞர்கள் யாரும் கண்ணில் படவில்லை. பெண்கள் பேசாமல் நழுவுகிறார்கள். வயதான வர்களோ, 'எங்களிடம் எதுவும் கேட்காதீங்க சாமி...’ எனக் கையெடுத்துக் கும்பிடுகிறார்கள். பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் நம்மை தனியே அழைத்துப் பேசினார்.

''ஓடிப்போன காதலர்கள், எதிர் எதிர் வீட்டுக்காரர்கள். ரெண்டு பேருமே மேஜர். இவர்கள் மூன்று

மாதங்களுக்கு முன்பு ஒரு முறை ஊரைவிட்டு ஓடினார்கள். அப்போது பெண்ணின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து, எங்கள் சாதி இளைஞர்களை எல்லாம் தெருவில் ஓட ஓட அடித்தனர். அவமானம் தாங்காமல் எங்கள் இளந்தாரிப் பையன்கள் தப்பித்து வெளியூர் போய்விட்டார்கள். 20 நாட்களில் அந்தக் காதலர்களைக் கண்டுபிடித்து கூட்டி வந்த பிறகுதான் அடி, உதை நின்றது.

அதன் பிறகு அந்தப் பெண்ணை, கரட்டுப் பட்டியில் இருக்கும் அவர்களின் சொந்தக்காரர் வீட்டில் தங்கவைத்தார்கள். காளியம்மன் திருவிழாவுக்கு அந்தப் பெண்ணை அழைத்து வந்தார்கள். இப்போது மீண்டும் அவர்கள் ஓடிவிட்டார்கள். இதனால் கோபமானவர்கள், 'எங்கள் இனத்தில் ஒரு பையன்கூட இருக்கக் கூடாது’ என்று சொல்லி வீட்டுக்குள் நுழைந்து எல்லோரையும் அடித்துப் போட்டார்கள். உடனே நாங்கள் போலீஸில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆனால் அந்தப் பெண்ணை, பழனிச்சாமியின் அப்பா பெத்தன், அம்மா காளியம்மாள், மாமா ஆகியோர்தான் கடத்திச் சென்றதாகப் புகார் கொடுத்திருந்தார்கள். அதனால் இவர்களைக் கைது செய்து ஜெயிலில் போட்டுவிட்டார்கள்.

20 நாட்கள் கழித்து பெத்தன் குடும்பத்தார் ஜாமீன் பெற்று ஊருக்குள் வந்தார்கள். அப்போது, 'பெத்தன் குடும்பத்தை ஊருக்குள் வரவிட்டால்... உங்கள் இனப் பெண்களின் சேலையைப் பிடித்து அவமானம் செய் வோம். அதனால் அவர்களை ஊருக்குள் வரவிடாமல் திருப்பி அனுப்புங்கள்’ என்று எச்சரித்தார்கள். வேறு வழி இல்லாமல் அந்தக் கொடுமையையும் நாங்கள் செய்தோம். அதனால் பெத்தன் குடும்பத்தார் அப்பிபட்டியிலும் அவரது மாமாவின் குடும்பத்தார் ராயப்பன்பட்டியில் இருக்கும் உறவினர் வீடுகளிலும் தங்கி இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில்தான் போலீஸ் எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டருக்கு தலக்கம்மாள் கைப்பட எழுதிய ஒரு கடிதம் வந்திருக்கிறதாம். அதில், 'என் மாமானார் (பெத்தன்) குடும்பத்தினர் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், எனது சாதிக்காரர்களும் போலீஸும்தான் பொறுப்பு. என்னை யாரும் கடத்திச் செல்லவில்லை நான் விருப்பப் பட்டே பழனிச்சாமியுடன் சென்றுள்ளேன். நான் தற்போது நீதிமன்றத்தில் சரண் அடைந்தாலும் என்னையும் என் கணவரையும் வெட்டிக் கொலை செய்து விடுவார்கள்’ என்று எழுதி இருக்கிறாராம். அதனால் மீண்டும் ஊருக்குள் பிரச்னை செய்கிறார்கள். இங்கே இருக்கும் கொஞ்சநஞ்ச பேரும் ஊரைவிட்டு வெளியேறி வருகிறோம்'' என்று பதற்றத்துடன் சொன்னார்.

ஊருக்கு வெளியே பெத்தனை சந்தித்துப் பேசினோம். ''நாங்கள் என்னய்யா தப்பு செஞ்சோம்? என் மகன் செஞ்ச காரியத்தால நாங்க வீடு, வாசலை இழந்து சொந்தக்காரங்க வீட்டில அனாதையாக்

கிடக்கிறோம். எங்க மேல பொய் வழக்குப் போட்டு ஜெயிலில் தள்ளிட்டாங்க. எங்களை அடிச்சு விரட்டுன அந்தப் பெண்ணோட சாதிக்காரங்க மேலேயும் போலீஸ் மேலேயும் புகார் கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் இல்லீங்க...'' என்று உயிர் பயத்தோடு பேசினார்.

மீண்டும் மேலப்பட்டிக்கு வந்தோம். ஊர் சார்பாக பேசிய முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் சேர்மலை, ''நாங்கள் யாரையும் அடித்துத் துன்புறுத்தி ஊரைவிட்டு விரட்டவில்லை. அப்படி யாராவது சொன்னால்... நீங்கள் அப்படியே எழுதிக்கொள்ளுங்கள். அதைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. எங்கள் சாதிப் பெண்ணைக் கடத்தியவர்கள், உடனே பெண்ணை ஒப்படைக்க வேண்டும்'' என்றவர், ஊர் சபையில் இருந்தவர்களைப் பார்த்து, ''என்னப்பா நான் சொல்றது சரிதானே?'' என்று சம்மதமும் வாங்கிக்கொண்டார்.

பெண்ணின் உறவுக்கார இளைஞர்கள் சிலரிடம் பேசினோம். ''ஓடிப்போன தலக்கம்மாளையும் பழனிச்சாமியையும் எங்கு கண்டா லும் இழுத்து வர 12 பேர் கொண்ட கமிட்டியை நியமிச்சிருக்காங்க. எல்லாப் பகுதியிலேயும் தேடிக்கிட்டு இருக்காங்க. கண்டிப்பா புடிச்சுடுவாங்க'' என்று நகர்ந்தார்கள்.

நாம் உடனே இந்த விவகாரத்தை தேனி மாவட்டக் கலெக்டர் பழனிசாமியிடம் கொண்டுசென்றோம். முழு விபரத்தையும் கேட்டுக்கொண்டவர், 'நடவடிக்கை எடுக்கிறேன்’ என்று சிம்பிளாக முடித்துக்கொண்டார்.

காதலர்களுக்கு ஆபத்து ஏற்படாமல் மாவட்ட நிர்வாகம் பார்த்துக் கொள்ள வேண்டும்!

- இரா.முத்துநாகு