Published:Updated:

உணவுச் செலவுக்கு 10 ரூபாய்!

பரிதாபத்தில் வேலூர் வீரர்கள்

பிரீமியம் ஸ்டோரி
##~##
உணவுச் செலவுக்கு 10 ரூபாய்!

வேலூர் சத்துவாச் சாரி... பளு தூக் கும் வீரர்களை உருவாக் கும் மண். அங்கே வீரர்​களுக்குப் பிரச்னை என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்குப் (044-66808002) புகார் வந்தது. 

1997-ம் ஆண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணை யத்தால் உருவாக்கப்பட்ட பளு தூக்கும் பயிற்சி மையத்தின் மா​ணவர் பாலமுருகன் நம்மிடம், ''முதலில் இந்த ஜிம் ஆண்களுக்கு என்று ஆரம்பிக்கப்பட்டது. பிறகு பெண்​களும் ஆர்வமாகப் பயிற்சி பெற வந்தார்கள். ஒவ்வொரு வருடமும் 30 ஆண்களும் 12 பெண்களும் ஒரு பேட்ச் என்று இங்கே பயிற்சி பெறு​கின்றனர். ஏராளமான போட்டிகளில் பங்கு பெறு​கிறார்கள். போட்டி என்று போனால், ஏதேனும் ஒரு பதக்கத்தைப் பெறாமல் யாரும் திரும்புவது இல்லை. ஆனால் இங்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு அரசு காட்டும் சலுகைகள் போதுமானதாக இல்லை.

வீரர்களின் உணவுச் செலவுக்கு என்று தினமும் 10 ரூபாய் தருகிறார்கள். இன்று ஒரு காபி, வடைகூட இந்தப் பணத்தில் சாப்பிட முடியாது. தினமும் பயிற்சி பெறுவதற்கு வசதியாக எனர்ஜி உணவு சாப்பிடுவதற்கே 250 ரூபாய் வரை செலவாகிறது. மேலும் பயிற்சி உடைகள் வாங்குவதற்கு வருடத்துக்கு 300 ரூபாய் மட்டுமே கொடுக்கிறது அரசு. இதை வைத்துக்கொண்டு இரண்டு சாக்ஸ் செட்கூட வாங்க முடியாது.

உணவுச் செலவுக்கு 10 ரூபாய்!

நாங்கள் அரசைக் குறை கூறவில்லை. முதல்வர் அம்மா விளையாட்டுத் துறை மீது மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால், எங்களைப் போன்ற ஏழைகள் இந்தப் போட்டிக்கு அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள். எங்களுக்கு இருக்கும் குறைகளை, அதிகாரிகள் யாரும் அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்வது இல்லை. இந்தப் பிரச்னைகளைத் தீர்த்துவைத்தால், எங்களால் மேலும் பல பதக்கங்கள் பெறமுடியும்'' என்றார்.

இங்கு பயிற்சி பெற்று வரும் அனிதா, ''எங்களுக்கு ஏகப்பட்ட குறைகள் இருந்தாலும், அதைப் பற்றி கவலைப்படாமல் பல பரிசுக் கோப்பைகளை வாங்கி உள்ளோம். அதற்கு எங்களது பயிற்சிக்கூடத்தில் இருக்கும் கோப்பை​களே சாட்சி. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனியாக ஹாஸ்டல் வசதி ஏற்படுத்திக் கொடுத்​தால், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் போன்ற பகுதியில் இருக்கும் திறமையான ஏழை மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு வசதியாக இருக்கும்!'' என்றார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அஜய் யாதவ்விடம் இந்த விஷயத்​தைக் கொண்டுசென்றோம். ''இது​குறித்து எனக்கு எந்தப் புகாரும் வரவில்லை. எனினும் அங்கு பயிற்சி பெறும் மாணவர்களின் எதிர்காலத்தைக் கவனத்தில்கொண்டு, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்!'' என்றார்.

வீரர்களுக்கு மதிப்பு கிடைக்கட்டும்!

- கே.ஏ.சசிகுமார், படங்கள்: ச.வெங்கடேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு