Published:Updated:

கொஞ்சம் விட்டால் கோயிலையே வித்துடுவாங்கப்பா...

திருவாரூர் திடுக்

பிரீமியம் ஸ்டோரி
##~##
கொஞ்சம் விட்டால் கோயிலையே வித்துடுவாங்கப்பா...

'குரு பார்க்க கோடி நன்மை’ என்பார்கள். ஆனால்  குரு பரிகார ஸ்தலத்துக்கே நேரம் சரியில்லையாமே? 

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் அமைந் துள்ளது அபய வரதராஜப் பெருமாள் கோயில். இது நவக்கிரகங்களில் ஒன்றான குரு பரிகார ஸ்தலம். இந்தக் கோயிலுக்குச் சொந்தமான இடத்தைத் தனியாருக்கு விற்றுவிட்டனர் எனக் குற்றம் சாட்டுகின்றனர் உள்ளூர்வாசிகள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் ஆலங்குடி கிளைச் செயலாளர் பாலகிருஷ்ணன், ''இங்கு பரிகாரம் செய்யவும் வழிபடவும் குடும்பத்தோடு வரும் பயணிகள், போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் பெரும் அவஸ்தைப் படுகின்றனர். போதிய சாலை வசதி கிடையாது. பஸ்களும் வேன்களும் நிறுத்து

கொஞ்சம் விட்டால் கோயிலையே வித்துடுவாங்கப்பா...

வதற்குத் தனியாக இடவசதி இல்லை. அமைச்சர்களும் அதிகாரிகளும்கூட கோயிலுக்கு வருகிறார்கள். சிறப்பு பூஜைகளில் பங்குபெறுகிறார்கள். ஆனால் கோயிலுக்கு வசதிகள் செய்துதரத்தான் யாரும் முயற்சிக்கவில்லை. கோயிலில் சிலர் ஊழலில் ஈடுபடுகின்றனர். அதனால் கோயில் நிர்வாகத்தை மேல்நிலை அதிகாரத் தரப்பி னர் உடனே கண்காணிக்க வேண்டும்'' என்றார்.

ஆலங்குடி குருஸ்தல முன்னாள் அறங்காவலரான ஏ.எஸ்.ரவி, ''மெயின் ரோட்டில் இருந்து கோயிலுக்குச் செல் லும் வழியில், சுமார் மூன்று ஏக்கர் நிலம் இருக்கிறது. இது கோயிலுக்குச் சொந்தமானது

கொஞ்சம் விட்டால் கோயிலையே வித்துடுவாங்கப்பா...

என்றாலும் நீண்ட காலமாக தனியார் ஒருவர்தான் பராமரித்து வந்தார். கடந்த ஆட்சி காலத்தில், பல லட்ச ரூபாய் ஆதாயத்துக்காக அந்த இடத்தை வேறு ஒருவருக்கு மாற்றிக்கொடுக்க அதிகாரிகள் முயற்சி செய்தனர். பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பிறகு கோயில் நிர்வாகத்தினர், 'இந்த இடம் கோயிலுக்குச் சொந்தமானது. இதை விற்பனை செய்யவோ, உரிமை மாற்றவோ கூடாது. அப்படிச் செய்தால் அவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அறிவித்தனர். தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் கோயிலுக்குச் சொந்தமான அந்த இடத்தை ரகசியமாகத் தனியாருக்குத் தாரைவார்த்துவிட்டார்கள். இதற்கு ஆளும் கட்சியினரும் அதிகாரத் தரப்பினரும் உடந்தையாக இருந்துள்ளனர். போகிற போக்கைப் பார்த்தால், கோயிலையும் விற்றுவிடுவார்கள் போல் தெரிகிறது'' எனக் கொதித்தார்.

கோயில் நிலம் இப்போது கருப்பையன் என்பவர் பெயரில் இருக்கிறது. அவரிடம் கேட்டோம். ''இந்த நிலம் தங்கவேல் பிள்ளை என்பவர் அனுபோகத்தில் இருந்தது. அவருக்கு இப்போது உடல்நிலை சரியில் லாததால் நிலத்தை என் பெயருக்கு மாற்றிக் கொடுத்து விட்டார். அதற்காக நான் கோவிலுக்கு 25 ஆயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்திருக்கிறேன்'' என்றார்.

ஆலங்குடி குரு பரிகார ஸ்தல உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் சிவராம் குமாரிடம் குற்றச்சாட்டு குறித்து கேட்டோம். ''கோயிலில் பக்தர்களுக்குத் தேவையான அத்தனை வசதிகளும் செய்து வருகிறோம். நீங்கள் குறிப்பிடும் இடத்தை இரண்டு வருடங்களுக்கு முன்பே பெயர் மாற்றம் செய்துவிட்டார்கள். அப்போது நான் பொறுப்பில் இல்லை'' என்றார்.

சரி, அப்புறம்...

- சி.சுரேஷ்

படங்கள்: எஸ்.சிவபாலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு