Published:Updated:

அமைச்சரை அலற வைக்கும் பெரிய குத்தூசி!

தூத்துக்குடி சிக்கல்

பிரீமியம் ஸ்டோரி
##~##
அமைச்சரை அலற வைக்கும் பெரிய குத்தூசி!

.தி.மு.க-வினருக்குப் பத்திரிகையாளர் சின்னகுத்தூசியைப் பிடிக்காது என்பது ஊரறிந்த ரகசியம். இப்போது பெரிய குத்தூசியும் அந்தப் பட்டியலில் சேர்ந்து இருக்கிறார். 

யார் இந்த பெரிய குத்தூசி?

தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் அமைச்சருமான சி.த.செல்லப் பாண்டியன் மற்றும் மேயர் சசிகலா புஷ்பா ஆகியோர் மீது சரமாரி புகார்களைக் கடித மாக எழுதி அலற வைத்திருப்பவர்தான், இந்த பெரிய குத்தூசி!

அப்படி ஒரு கடிதம் நமக்கும் வந்தது. அந்தக் கடிதத்தில், 'அமைச்சர் செல்லப்பாண்டியன், தன் வெற்றிக்காக உழைத்த அ.தி.மு.க. தொண்டர்கள் யாரையும் அருகில் வைத்துக்கொள்ளவில்லை. மாறாக அ.தி.மு.க. கொடியைக் கிழித்தவர்கள், அ.தி.மு.க-வையும் அம்மாவையும் பிடிக்காத தி.மு.க-வினர், அ.தி.மு.க வேட்பாளரைத் தோற்கடிக்க வீடுவீடாக ஏறி இறங்கியவர்கள், அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிக்குப் போகாமல் டிமிக்கி கொடுத்துவிட்டுவரும் பஸ் டிரைவர்கள் போன்றவர்களை அருகில்வைத்துக்கொண்டு இருக்கிறார்.

அமைச்சரை அலற வைக்கும் பெரிய குத்தூசி!

முன்னாள் நகர அவைத் தலைவரான சந்திரசேகர், அவரது மனைவிக்கு டீச்சர் வேலை கேட்க, 'மேலிடத்துக்கு (மேடத்துக்கு?) கொடுக்க .... கொடு’ என்றார் அமைச்சர். இலக்கிய அணியைச் சேர்ந்த

அமைச்சரை அலற வைக்கும் பெரிய குத்தூசி!

நடராஜன் தன் உறவினருக்கு உடற்பயிற்சி ஆசிரியர் வேலை வாங்கித் தரக் கேட்டபோதும் .... கேட்டிருக்கிறார் அமைச்சர். அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தர்மராஜ் ஃபெர்னாண்டோ மூலம், பி.எட். அனுமதி வாங்கித் தர ஒரு கிறிஸ்துவப் பள்ளி நிர்வாகம் கேட்டபோது, அந்த நிர்வாகத்திடம் ஆதாயம் பெற்றுள்ளார். தையல் டீச்சர், டிராயிங் மாஸ்டர், மியூசிக் டீச்சர், கம்ப்யூட்டர் டீச்சர் என்று பலருக்கும் வேலை வாங்கிக் கொடுத்த வகையில் கணிசமான தொகை அமைச்சருக்குக் கிடைத் திருக்கிறது.

அமைச்சரின் ஆதரவுடன் அவரின் அண்ணன் மகன் கனகராஜ் எக்கச்சக்கமாய்

அமைச்சரை அலற வைக்கும் பெரிய குத்தூசி!

சம்பாதிக்கிறார். இவ்வளவு சம்பாதித்தாலும் இவர்களால், எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா, மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் போன்ற விழாக்களில் 35 பேர்களைக்கூட கூட்ட முடிவது இல்லை. இந்த அமைச்சர், 'தி.மு.க. மாவட்டச் செயலாளர் பெரியசாமியை ஓட ஓட விரட்டி அடிப்பேன்... வெட்டுவேன்’னு மேடைக்கு மேடை பேசுகிறார். இதை கேட்டால் சிரிப்புதான் வருது. பெரியசாமியை நேரில் பார்த்தாலே கை, கால் வெடவெடக்கும் இவர், பெரியசாமியை வெட்டுவாரா?'' என்று அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டு உள்ளது.

அடுத்து, 'கடந்த ஆட்சியில் மாநகராட்சியின் வாகன நிறுத்தக் குத்தகை எடுத்திருந்த தி.மு.க. மாவட்ட செயலாளர் பெரியசாமியின் தம்பி செல்லபாண்டி, அவருடைய தம்பி மகன் நாராயணன், தி.மு.க-வைச் சேர்ந்த எஸ்.டி.கணேசன், ஏ.சி.அருணா மகன் லெட்சுமிகாந்த் மற்றும் செண்பகராஜு, சிம்சன் உள்ளிட்ட தி.மு.க. பிரமுகர்களே இந்த ஆட்சியிலும் தொட ரும்படி தீர்மானம் போடப்பட்டு இருக்கிறது. தி.மு.க-வினருக்காகக் குத்தகைத் தொகையைக் குறைத்து, மாநகராட்சிக்கு இழப்பு ஏற்படுத்தி இருக்கிறார்’ என்று தூத்துக்குடி மாநகராட்சியின் மேயர் சசிகலா புஷ்பா மீதும் புகார் இருக்கிறது.

இந்தப் புகார் குறித்து மேயர் சசிகலா புஷ்பாவிடம் பேசினோம். ''தி.மு.க-காரங்க குத்தகையை இடையிலே ரத்து செய்ய சட்டத்தில் இடம் இல்லை. இழப்பு ஏற்படும் வகையில் எதையும் செய்யவில்லை'' என்று படுவேகமாக முடித்துக்கொண்டார்.

அமைச்சர் செல்லப்பாண்டியனிடம் விளக்கம் கேட்டோம். ''அம்மாவுக்கு என்னைப்பற்றி நல்லாவே தெரியும். அம்மாவுக்கு விரோதமாக ஒருபோதும் நான் செயல்பட மாட்டேன். அந்த மனுவில் சொல்லி இருக்கிற மாதிரி யாருக்கும் நான் வேலை வாங்கித் தரவில்லை. மேலிடத்துக்குக் கொடுக்கணும்னு

அமைச்சரை அலற வைக்கும் பெரிய குத்தூசி!

யாரிடத்திலும் நான் பணம் வாங்கவில்லை. அதிலும் கிறிஸ்துவ ஸ்கூல் விவகாரத்துக்குப் பணம் வாங்கியதாகச் சொல்வது ரொம்பவும் அநியாயம். என் அண்ணன் மகன் இரும்புத் தொழில் செய்கிறான். அதில்தான் அவன் சம்பாதிக்கிறான். மற்றபடி அந்தக் கடிதத்தில் சொல்லப்பட்டு இருக்கும் எந்தக் குற்றச்சாட்டும் உண்மை கிடையாது'' என்றார் உறுதியாக.

ஆனால், முன்னாள் அவைத் தலைவரான சந்திரசேகரோ, ''முதல்ல அமைச்சரோட பி.ஏ.தர்மசீலன்தான் ஒரு லட்சம் கேட்டார். அந்த விஷயத்தை அமைச்சர்கிட்ட சொன்னேன். அதுக்கு அமைச்சர், 'ஆமா, மேலிடத்துக்குக் கொடுக்க வேண்டியிருக்கு. அதனால நான்தான் கேட்கச் சொன்னேன்’னு சொன்னார். 'உண்மையான கட்சி நிர்வாகியிடமேயே பணம் கேட்கிறீங்களே? அப்படி ஒரு வேலையே எனக்கு வேண்டாம்னு சொல்லிட்டேன்!'' என்றார்.

தன் உறவினரின் உடற்பயிற்சி ஆசிரியர் வேலைக்காகப் பேசிய நடராஜனும், ''ஆமாம் ஒரு லட்சம் கேட்டாங்க. 50 ஆயிரம் கொடுத்து வேலை வாங்கி இருக்கு...'' என்றார் ரத்தினச் சுருக்கமாக.

பி.எட். காலேஜ் அனுமதிக்கு சிபாரிசு செய்த தர்மராஜ் ஃபெர்னாண்டோ, ''நான் அனுப்பிய கிறிஸ்துவ மதப் பிரமுகர்களிடம் பல லட்சம் வாங்கியது உண்மைதான். பெரிய குத்தூசி என்ற பெயரில் சொல்லப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் அத்தனையும் நூற்றுக்கு நூறு உண்மைதான். அதை அம்மா முன்பு சொல்லவும் தயாராக இருக்கிறேன்!'' என்கிறார்.

இனி, முதல்வர்தான் முடிவு எடுக்க வேண்டும்!

- எஸ்.சரவணப்பெருமாள்

படங்கள்: ஏ.சிதம்பரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு