Published:Updated:

'அந்த' சுகத்துக்காக, பிஞ்சுக் குழந்தை கொலை!

சென்னை அதிர்ச்சி

'அந்த' சுகத்துக்காக, பிஞ்சுக் குழந்தை கொலை!

சென்னை அதிர்ச்சி

Published:Updated:
##~##
'அந்த' சுகத்துக்காக, பிஞ்சுக் குழந்தை கொலை!

னித மனங்கள் எப்படி வக்கிரமாகிக் கொண்டு இருக்கின்றன என்பதற்கு சாட்சி இது! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னை கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகரில் வசிக்கின்றனர் ராஜேஷ் - கோமதி தம்பதி. இவர்களது ஐந்து மாதக் குழந்தை கோகுல், கடந்த புதன் கிழமை இரவு திடீரெனக் காணாமல் போனது. யாரோ கடத்தி விட்டார்கள் என்று பயந்துபோய் ஊரெல்லாம் தேட, மறுநாள் காலை வீட்டின் அருகில் பிணமாகத்தான் கண்டுபிடிக்க முடிந்தது. இந்த கொலைக்கான காரணம்தான், ஏரியாவாசிகளை அதிர வைத்துள்ளது.  

சோகமே உருவாகக் குழந்தையின் படத்தைப் பார்த்தபடி விம்மிக் கொண்டிருந்த கோமதியிடம் பேசினோம். ''என் பையன் கொழுகொழுன்னு ரொம்ப அழகா இருப்பான். அஞ்சு நிமிஷம் கூட அவனை விட்டு பிரிஞ்சு இருக்க மாட்டேன். பக்கத்துல இருக்கிற ஒரு சேர் கம்பெனியில எங்க வீட்டுக்காரர் வேலை பார்க்கிறார். சம்பவம் நடந்த அன்னைக்கு குழந்தைக்குப் பால் கொடுத்துத் தூங்கவெச்சிட்டு, அவர் வர்றதுக்குள்ள சமையலை ஆரம்பிச்சேன். முட்டை வாங்கலாம்னு கடைக்குக் கிளம்பினப்ப என் நாத்தனார் ராஜலட்சுமிகிட்ட, 'குழந்தையைப் பார்த்துக்கோ, இதோ வந்துட றேன்’னு சொல்லிட்டுப் போனேன். வந்து பார்த்தா குழந்தையைக் காணோம். குழந்தையைக் காணோமேன்னு கேட்டேன். 'பக்கத்து வீட்டுல டீக்கடைக்குக் கூப்பிட்டாங்க. போய்ட்டு வந்தேன். எனக்கு தெரியலை’னு சொன்னா. உடனே என் வீட்டுக்காரருக்குப் போன் போட்டு, 'வீட்ல தூங்கிட்டு இருந்த குழந்தையைக் காணலைங்க. எனக்குப் பயமா இருக்கு. நீங்க உடனே வாங்க’னு கூப்பிட்டேன். அவரும் வேலையை அப்படியே போட்டுட்டு ஓடி வந்தார். ராத்திரி பூரா அக்கம் பக்கத்துல தேடினோம். போலீஸ்லயும் கம்ளெயின்ட் கொடுத்தோம். மறுநாள் காலைல எங்க வீட்டுக்காரர் மொட்டை மாடிக்குப் போய் எங்க வீட்டுப் பின்னாடி பார்த்தப்ப, கால்வாயில எங்க குழந்தை பிணமா கிடந்தது. தலை, கை, கால், கண் எல்லாம் காயம். நாங்க யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்ய லையே... எங்களுக்கு ஏன் இப்படி நடந்தது?'' என்று தழுதழுத்தார்.

'அந்த' சுகத்துக்காக, பிஞ்சுக் குழந்தை கொலை!

குழந்தையின் கொலைக்குக் காரணம் நரபலியா... முன் பகையா? என தீவிர விசாரணையில் இறங்கிய போலீஸாருக்கு நாத்தனார் ராஜலட்சுமியின் முன்னுக்குப் பின் முரணான பேச்சு சந்தேகத்தை

'அந்த' சுகத்துக்காக, பிஞ்சுக் குழந்தை கொலை!

ஏற்படுத்தி இருக்கிறது. உடனே, போலீஸ் பாணியில் கடுமையாக விசாரிக்க... கொலை செய்த அரக்கன் வேறு எங்கும் இல்லை குடும்பத்தில் ஒருவன்தான் என்பது தெரிந்தது.

''கோமதி என்னிடம் குழந்தையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டுச் சென்ற கொஞ்ச நேரத்தில், எனது சித்தப்பா கருணாகரன் வீட்டுக்கு வந்தார். குழந்தை கோகுலைத் தூக்கிச் சென்றார். 'யாரிட மாவது நான் வந்ததைச் சொன்னால் வெட்டிக்கொன்று விடுவேன்’ என்று மிரட்டினார். உயிருக்கு பயந்துதான் நான் உண்மையைச் சொல்லாமல் மறைத்தேன்'' என்று கூறி இருக்கிறார் நாத்தனார் ராஜலட்சுமி.

ராஜேஷின் சித்தப்பா கருணாகரன்தான் குற்றவாளி என்பதை உறுதி செய்தவுடன், அவரைக் கைது செய்தது போலீஸ். போலீஸாரிடம் அவர் என்ன சொன்னார் என்று விசாரித்தோம்.

'அந்த' சுகத்துக்காக, பிஞ்சுக் குழந்தை கொலை!

''ராஜேஷின் அம்மா குப்பம்மாள் எனது அண்ண னின் மனைவி. எங்க அண்ணன் கன்னியாகுமரியில் இருக்கிறார். நீண்ட நாட்களாகவே குப்பம்மாளை அடைய வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. அவ்வப்போது செலவுக்குப் பணம் கொடுப்பது... அவர் கேட்ட பொருட்களை வாங்கிக் கொடுப்பது என்று மெள்ள வலை விரித்தேன். ஒரு நாள் இரவு போதையில் குப்பம்மாளை வலுக்கட்டாயமாக உறவுக்கு அழைத்தேன். முதலில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார் குப்பம்மா. அதன்பிறகு அவருக்கு மது ஊத்திக் கொடுத்து சம்மதிக்க வைத்தேன். கடந்த ஓர் ஆண்டாக நாங்கள் ஜாலியாக இருந்து வந்தோம்.

தனிக்குடித்தனம் நடத்தி வந்த ராஜேஷ், திடீரென்று மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு குப்பம்மாவுடன் வந்து வசிக்கத் தொடங்கினார். இது எங்கள் உறவுக்கு இடையூறாக இருந்தது. எனவே, குழந்தையைக் கடத்திப் பயமுறுத்தினால், ராஜேஷ் அங்கே இருந்து வேறு வீட்டுக்குச் சென்று விடுவான் என்று நினைத்தேன். மிரட்டு வதற்காகத் தான் குழந்தையைக் கடத்தினேன். ஆனால், குழந்தையைக் கடத்திச் சென்ற சில மணி நேரத்தில் போலீஸார் தீவிரமாகத் தேடத்தொடங்கி விட் டனர். அதனால், இனி குழந்தையை ஒப்படைத்தால் பெரிய பிரச் னையாகி விடும் என்று பயந்துபோனேன். உடனே, கட்டையால் குழந்தையின் தலையில் அடித்தேன். பின்கழுத்தை நெரித்துக் கொலை செய்து, அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் வீசினேன். என் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, அனைவருடனும் சேர்ந்து நானும் குழந்தையைத் தேடுவது போல் நடித்தேன். ராஜலட்சுமியை மிரட்டி இருந்ததால், என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டார் என்று நினைத்தேன். ஆனால், போலீஸ் விசாரணையில் உளறிக்கொட்டி, என்னை மாட்டி வைத்து விட்டார். காமம் என் கண்ணை மறைத்து விட்டது'' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார்.

ஒரு தவறான உறவு எந்த அளவுக்குக் குடும் பத்தைக் குலைத்து விடும் என்பதற்கு கோகுல் மரணமே சாட்சி!

- தி.கோபிவிஜய்

படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism