Published:Updated:

பயிற்சி பெறாத மருத்துவர்கள், உஷார்!

சென்னையைக் கலக்கிய 'வானவில்' பேரணி

பயிற்சி பெறாத மருத்துவர்கள், உஷார்!

சென்னையைக் கலக்கிய 'வானவில்' பேரணி

Published:Updated:
##~##
பயிற்சி பெறாத மருத்துவர்கள், உஷார்!

ண்ணைக் கவரும் ஆடைகள், வித்தியாச மான அலங்காரங்கள் என்று கடந்த ஞாயிறு மாலை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் கலர்ஃபுல்லாக நடந்தது 'வானவில்’ பேரணி. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆண், பெண் ஓரின ஈர்ப்பாளர்கள், இருபால் உறவில் விருப்பம் உள்ளவர்கள் மற்றும் திருநங்கைகள் அனைவரும் சேர்ந்த எல்.ஜி.பி.டி. அமைப்புகள்தான் (லெஸ்பியன், கே, பை-செக்ஸுவல், டிரான்ஸ்ஜென்டர் என்பதன் சுருக்கம்தான் எல்.ஜி.பி.டி.) இந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இவர்கள் தங்கள் உரிமைகளுக்காக கடந்த நான்கு ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 'வானவில்’ பேரணியை நடத்தி வருகின்றனர்.

300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்தப் பேரணியில், சென்னையைச் சேர்ந் தவர்கள் மட்டுமின்றி தமிழ் நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும், பெங்களூரு, ஹைதராபாத், மும்பை ஆகிய நகரங்களில் இருந்தும் பலர் வந்து கலந்து கொண்டனர். எல்.ஜி.பி.டி. சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, அவர்களை ஆதரிக்கும் குடும்பத்தினர்கள், நண்பர்கள், என பலரும் இவர்களுக்கு ஆதரவாக பேரணியில் கலந்து கொண்டதுதான், ஹைலைட். சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரி ஜெனிஃபர் மெயிண்டேர் உள்ளிட்டக் குழுவினரும், ஜெர்மன் கலாசார மையத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்ட தால், உண்மையான வானவில் போலவே காட்சி அளித்தது பேரணி.

பயிற்சி பெறாத மருத்துவர்கள், உஷார்!

தங்களுடைய உரிமைகளையும் கோரிக்கைகளையும் வலியுறுத்தி பல்வேறு பதாகைகளைப் பிடித்திருந்தார்கள். 'ஓரினச்சேர்க்கை என்பது நோயல்ல’ போன்ற வாசகங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. 74 வயது முதியவர் ஒருவர், 'என்னுடைய மகனின் ஓரின ஈர்ப்பு உணர்வை நான் ஆதரிக்கிறேன்’ என்ற பதாகையைப் பிடித்தபடி வந்திருந்தார். ஒரு மாணவர், 'என்னுடைய 'கே’

பயிற்சி பெறாத மருத்துவர்கள், உஷார்!

ஆசிரியரை நான் ஆதரிக்கிறேன்’ என்ற பதாகையுடன் கலந்து கொண்டார்.

'நாங்கள் ஏன் குழந்தைகளைத் தத்தெடுக் கக் கூடாது?’ என்ற பதாகையைப் பிடித்தபடி வந்திருந்தனர் சென்னை தோஸ்த் அமைப்பைச் சேர்ந்த விக்ராந்த் மற்றும் ரூபேஷ். ''உலக அளவில் 13 நாடுகளில் குழந்தைகளைத் தத்தெடுத்துக்கொள்ள ஓரின ஈர்ப்பாளர்களுக்கு அனுமதி இருக்கிறது. ஆனால், இந்தியச் சட்டத்தைப் பொறுத்தவரை இரண்டு ஆண்கள் அல்லது இரண்டு பெண்கள் ஒன்றாக வாழ்ந்தால் அவர்களைத் தம்பதியாக ஏற்றுக்கொள்வதில்லை. எனவே, அவர்களால் குழந்தைகளைத் தத்தெடுக்க முடிவதில்லை. அவர்களும் குழந்தைகளைத் தத்தெடுக்க அனுமதி வேண்டும் என்று வலியுறுத்தித்தான் அந்தப் பதாகையை ஏந்தி வந்தோம்'' என்றனர்.

வானவில் அமைப்பைச் சேர்ந்த அனிருத்தன் வாசுதேவனிடம் பேசினோம். ''ஓரின ஈர்ப்பு என்பது நம்முடைய நாட்டில் கிடையாது என்பதே இங்கு உள்ளவர்களின் கருத்தாக இருக்கிறது. 'அது தவறு; நம்முடைய ஊரிலும் ஓரின ஈர்ப்பு கொண்டவர்கள் இருக்கிறார்கள்’ என்பதை அவர்களுக்குத் தெரிவிப்பதுதான் இந்தப் பேரணியின் முக்கிய நோக்கம். இப்போது, திருநங்கைகளைப் பற்றிய புரிதல் ஓரளவுக்கு

பயிற்சி பெறாத மருத்துவர்கள், உஷார்!

ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் ஆண், பெண் ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் இருபால் உறவில் விருப்பம் உள்ளவர்களைப் பற்றி வெளியில் தெரிவதில்லை. அவர்களும் இங்கு இருக்கிறார்கள் என்பதை இதன்மூலம் தெரியப்படுத்தி இருக்கிறோம்.

எல்லாப் பிரச்னைகளும் வீட்டில் இருந்துதான் ஆரம்பிக்கின்றன. முதலில் குடும்பத்தினர் எங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களின் வேண்டுகோள். பெரும்பாலான வீடுகளில் பெற்றோர் புரிந்து கொண்டாலும் மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்று நினைத்து எங்களின் உணர்வுகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

இப்போது, ஒழுங்காகப் படிக்காத, பயிற்சி பெறாத மனநல மருத்துவர்கள் கூட்டம் ஒன்று புதிதாகக் கிளம்பி இருக்கிறது. 'உங்களுடைய மகனோ அல்லது மகளோ ஓரின ஈர்ப்பில் நாட்டமுடன் இருக்கிறார்களா? அவர்களை பெண்களின் அல்லது ஆண்களின் மீது விருப்பம் உள்ளவர்களாக நாங்கள் மாற்றிக்காட்டுகிறோம்’ என்று விளம்பரம் செய்கிறார்கள். இதை ஏதோ ஒரு நோய் போன்று உருவகப்படுத்தி, மின்அதிர்வு சிகிச்சை தரு கிறார்கள். இது முழுக்க முழுக்கத் தவறு. ஏனெனில், இந்திய மனநல மருத்துவ இதழ், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் எழுதிய தலையங்கத்தில், 'ஓரின ஈர்ப்பு என்பது நோயல்ல’ என்று குறிப்பிட்டுள்ளது. இதுபோன்ற தவறுகளைத் தடுக்க வேண்டும்.

பல சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வந்த அரவாணிகளுக்கான நல வாரியம், இப்போது சுணக்கத்தில் உள்ளது. அதைப்போக்கி, மீண்டும் அரவாணிகள் நலவாரியத்தைச் சிறப்பாகச் செயல்படச் செய்யவேண்டும். அரவாணிகள் அல்லாமல், மற்ற சிறுபான்மைப் பாலினத்தவர்களையும் சமூகநலத் திட்டங்களில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மிகமுக்கியமாக, குடும்பம், காவல்துறை, கல்வி நிலையங்கள், நீதித்துறை - போன்ற நான்கு அமைப்புகள்தான் மக்களுக்குப் பாதுகாப்புத் தரக்கூடியவை. ஆனால், எங்களைப் பொறுத்தவரை இந்த நான்கு அமைப்புகளாலும்தான் நாங்கள் அதிக வன்முறையைச் சந்திக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும்'' என்றார் அனிருத்தன்.

சகோதரன் அமைப்பின் நிறுவன ரான சுனில் மேனன், ''பாலினச் சிறுபான்மையினர்கள் பலர் தங்களைப் பற்றி வெளியில் சொல்ல முடியாமல், பயத்துடன் மறைந்து வாழ்த்துகின்றனர். தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை எப்படி நிவர்த்தி செய்து கொள்வது, யாரிடம் ஆலோசனை பெறுவது என்று தெரியாமல் தவிக்கின்றனர். 'நாங்கள் இருக்கிறோம்' என்று அவர்களுக்குச் சொல்லும் வாய்ப்பு இந்தப் பேரணி மூலம் கிடைத்திருக்கிறது. பல்வேறு அமைப்புகள் இவர்களுக்கு உதவி செய்வதற்காக உள்ளன. போன் அல்லது மின்னஞ்சல் மூலம் இந்த அமைப்புகளைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம்'' என்றார்.

இவர்களது கோரிக்கையை அரசாங்கம் கவனிக் கட்டும்!

- சி. காவேரி மாணிக்கம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism