Published:Updated:

தலைவரை வந்து பார்க்கச் சொல்லும்மா...

வேதனையில் துடிக்கும் வீரபாண்டி ஆறுமுகம்

தலைவரை வந்து பார்க்கச் சொல்லும்மா...

வேதனையில் துடிக்கும் வீரபாண்டி ஆறுமுகம்

Published:Updated:
##~##
தலைவரை வந்து பார்க்கச் சொல்லும்மா...

'குப்புறத் தள்ளிய குதிரை, குழியும் பறித்ததாம்’ என்பார்கள். அந்த நிலையில்தான் இருக்கிறார் வீரபாண்டி ஆறுமுகம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சேலம் அங்கம்மாள் காலனியில் குடிசைகளை எரித்த வழக்கில் கைது செய்யப்பட்ட நேரத்தில், தன் மீது அரசு இத்தனை காட்டமாக இருக்கும் என்று நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார் அவர். சேலம், புழல், வேலூர் என்று அலைக்கழிக்கப்பட்டது போதாது என்று திடீரென குண்டர் சட்டமும் அவர் மீது பாய்ந்து விடவே... ரொம்பவே நொந்துபோய் இருக்கிறார் ஆறுமுகம். அவருக்கு இருக்கும் ஒரே ஆறுதல் தமிழகம் எங்கும் இருக்கும் தி.மு.க. முக்கிய நிர்வாகிகள், சிறைக்கு வந்து அவரைச் சந்தித்து விட்டுச் செல்வதுதான்.

வேலூர் மத்தியச் சிறை அதிகாரிகள் சிலரிடம் இதுபற்றி விசாரித்தோம். ''சிறைக்குள் அவர் வந்ததில்

தலைவரை வந்து பார்க்கச் சொல்லும்மா...

இருந்தே ரொம்பவும் சோர்வாகத்தான் இருக்கிறார். எப்போதும் உடல் களைப்புடன் காணப்படுகிறார். அவருக்கு இதயப் பிரச்னை இருக்கிறது என்பதால், மிகவும் அமைதியாக இருக்கிறார். இப்போது அவரது கால்கள் வீக்கம் அடைந்து காணப்படுகிறது.

தினமும் காலை 6 மணிக்கே எழுந்து விடுகிறார். வேலூர் வெயில் அவர் உடலுக்கு ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அதிகமாக வியர்வை வருகிறது. சில நேரங்களில் நடப்பதற்கே சிரமப்படுகிறார். உடல்நிலை

தலைவரை வந்து பார்க்கச் சொல்லும்மா...

கொஞ்சம் மோசமாக இருப்பதால், மருந்துகள் அதிகமாக எடுத்துக்கொள்கிறார். டாக்டர்களும் அவரை சந்திக்கிறார்கள். தினமும் பலர் அவரைப் பார்க்க வருகிறார்கள். அந்த நேரத்தில் மட்டும் சந்தோஷமாக, புன்னகையுடன் இருக்கிறார். அவர்களைப் பார்த்து விட்டு வந்தபிறகு, மீண்டும் சோகமாகி விடுகிறார்.

பொழுது போகாத நேரங்களில் புத்தகம் படிக் கிறார். அதன்பிறகு, அமைதியாக அறைக்குச் சென்று விடுவார்.

சிறையில் உள்ள யாரிடமும் அவர் அனாவசியமாகப் பேசுவது இல்லை. மாலையில் காற்று வாங்குவதற்காக சிறிது நேரம் மரத்தடியில் ஒதுங்குகிறார். வெயில் அதிகமாக இருப்பதால், மதிய நேரத்தில் அவர் வெளியே வருவதே இல்லை. ஸ்டாலின் வந்தபோது அவரிடம் பேசி சிரித்துக்கொண்டு இருந்தார். ஆனால், கனிமொழி வந்தபோது, கொஞ்சம் கலங்கிப் போய் விட்டார். கலைஞரிடம் தனது நிலை பற்றி விரிவாக எடுத்துச் சொல்லுமாறு கூறி இருக்கிறார். அவர் கலைஞரை நேரில் பார்க்கத் துடிக்கிறார். அதை வேண்டுகோளாகவும் கனிமொழியிடம் வைத்திருக்கிறார்.

உணவு சம்பந்தபட்ட விஷயங்களில் பரவாயில்லை. நிறையவே அக்கறை எடுத்துக்கொண்டு சாப்பிடுகிறார். வேலூர் வெயில் காரணமாக அவருக்குத் தோலில் அலர்ஜி ஏற்பட்டு மிகவும் அவதிப்படுகிறார். அதனால், நடைப்பயிற்சியை இப்போது மேற்கொள்வது இல்லை. அவருக்கு மற்ற சிறையைவிட வேலூர் சிறை மிகுந்த சிரமத்தைக் கொடுக்கிறது என்பது மட்டும் உண்மை'' என்றனர்.

தலைவரை வந்து பார்க்கச் சொல்லும்மா...

வீரபாண்டி ஆறுமுகத்தைப் பார்த்துவிட்டு வந்த உறவினர் களிடம் பேசினோம். ''அவங்க  மிகுந்த சித்ரவதையை அனுபவிக் கிறாருங்க. கடந்த 19-ம் தேதி அவருக்கு உடம்பு ரொம்பவும் முடியாமப் போச்சு. அதனால்,  அன்றைக்கு யாரையும் பார்க்க விருப்பம் இல்லைனு சொல்லிட் டார்.

சிறை அறையில் இருந்து பார்வையாளர்களைப் பார்க்க குறைந்த பட்சம் 2 கி.மீ. தூரம்  வரவேண்டும். சில அடி தூரம் நடந்தாலே அவருக்கு உடல் களைப்பு ஏற்பட்டு விடும். தினமும் சிரமப்பட்டு நடந்து வந்துதான் எங்களைச் சந்திக்கிறார். அவரது உடல் நிலை மோசமடைந்து கொண்டே வருகிறது. அவருக்கு முதல்வகுப்பில் இடம் தரவில்லை என்கிறார்கள்.

அவர் ஏற்கெனவே எத்தனையோ சிறைகளைப் பார்த்தவர்தான். அப்போது எல்லாம் மிகுந்த தெம்புடனும் மன தைரியத்துடனும் இருந்தார். ஆனால், இப்போது அவரைப் பார்ப்பதற்கே எங்களுக்குச் சங்கடமாக இருக்கிறது. 75 வயதை கடந்த ஒருவரை, அதுவும் உடல்நலம் பாதிக்கப்பட்டவரை, பொய்ப் புகாரில்  சிறையில் அடைத்து சித்ரவதை செய்வதை நாங்கள் மட்டுமல்ல, மக்களும் மன்னிக்க மாட்டார்கள். இதற்கு காலம் தக்க பதிலடி தரும்'' என்று உணர்ச்சிவசப்பட்டுக் கண் கலங்கினார்கள்.

தி.மு.க. நிர்வாகிகள் மீது குண்டர்கள் சட்டம் பாய்ச்சப்படுவதைக் கண்டித்து, சிறை நிரப்பும் போராட்டத்தை கருணாநிதி அறிவித்து இருப்பது வீரபாண்டி ஆறுமுகத்துக்கு பெரும் தெம்பைக் கொடுத்து இருக்கிறதாம். குண்டர் சட்டத்தை உடைக்க என்னென்ன வழிகள் இருக்கின்றன என்று, வழக்கறிஞர்கள் குழு ஆராய்ந்து வருகிறதாம்.

தி.மு.க. நடத்தும் சிறை நிரப்பும் போராட்டம் மூலமாக, சில தலைவர் களாவது வேலூர் சிறைக்குச் சென்று ஆறுமுகத்துக்குக் கம்பெனி கொடுத்தால் சரிதான்!

- கே.ஏ.சசிகுமார்

படங்கள்: ச.வெங்கடேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism