Published:Updated:

பணத்தைக் கிழித்தது, மன நோயாளியா?

திருச்சி விநோதம்

பணத்தைக் கிழித்தது, மன நோயாளியா?

திருச்சி விநோதம்

Published:Updated:
##~##
பணத்தைக் கிழித்தது, மன நோயாளியா?

ஜூன் 23. சனிக்கிழமை. திருச்சி உறையூர் களத்துமேடு பகுதி மக்களுக்கு வித்தியாசமாக விடிந்தது. 'குப்பைத் தொட்டியில் ரூபா நோட்டுங்க கொட்டிக்கிடக்குது டோய்’ என்று தகவல் வேகவேகமாகப் பரவ... ஏரியா மக்களில் பலரும் அந்தக் குப்பைத் தொட்டி முன் ஆஜரானார்கள். துண்டு துண்டாகக் கிழிந்த ரூபாய் நோட்டுகளைக் கண்டு அதிர்ந்தாலும், அள்ளிக் கொண்டனர். எங்காவது கிழியாத நோட்டு கிடைக்காதா என்று பலரும் தொடர்ந்து தேடிக்கொண்டு இருந்தார்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்தப் பகுதியில் பெட்டிக்கடை வைத்திருக்கும் மணி, ''தினமும் ஈஸ்வரிங்கிற பொம்பளைதான், இந்தக் குப்பைத் தொட்டியை நோண்டி, எதையாவது எடுத்துட்டுப் போய் விற்பாங்க.  அவங்கதான் கத்தை கத்தையா ரூபாய் கிழிச்சுப் போட்டிருப்பதை முதல்ல பார்த்தாங்க. இந்தப் பக்கம் நிறைய பேர் வசதி படைச்சவங்களா இருக்கிறாங்க. அவங்கள்ல யாராவதுதான் இப்படிப் பணத்தைக் கிழிச்சுப் போட்டு இருக்கணும். பணத்தைக் கிழிக்காம போட்டிருந்தா, ஏழைகளுக்கோ அரசாங்க கஜானா வுக்கோ போய் சேர்ந்திருக்கும். யாருக்கும் பயன்படாதமாதிரி இப்படி செஞ்சுட்டாங்களே'' என்று வேதனைப்பட்டார்.

பணத்தைக் கிழித்தது, மன நோயாளியா?

அந்த ஏரியாவில் 200 வீடுகளைக் கொண்ட இரண்டு அபார்ட் மென்ட்களும் நிறைய பங்களா டைப்

பணத்தைக் கிழித்தது, மன நோயாளியா?

வீடுகளும் உள்ளன. அரசியல் பிரமுகர்கள், தொழில்அதிபர்கள், கான்ட்ராக்டர்கள், அரசு உயர் அதிகாரிகள் என வளமான வருவாய் வரக்கூடியவர்கள் பலர் இருக் கின்றனர். அவர்களில் ஒருவர்தான் போட்டு இருக்கக்கூடும் என்பது போலீஸாரின் சந்தேகம்.

இதுகுறித்துப் பேசிய முக்கியப் பிரமுகர் ஒருவர், ''கிழிந்த நோட்டு களில் பெரும்பாலானவை 500 ரூபாய் நோட்டுகள்தான். சில 1,000 ரூபாய் நோட்டுகளும், சொற்ப எண்ணிக்கையில் 100, 50 ரூபாய் நோட்டுகளும் இருந்தன. அத்தனை பணத்தையும் மெனக்கெட்டு நான்கு, ஆறு துண்டுகளாகக் கிழித்துப் போட்டிருப்பதைப் பார்க்கும்போது, கோபத்தின் காரணமாக இதை யாராவது செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒரு வேளை அவர் மனநோயால் பாதிக்கப்பட்டவராகவும் இருக்கக்கூடும். வருமான வரித்துறை அல்லது லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டுக்குப் பயந்தும், யாரா வது இதைச் செய்திருக்கலாம்'' என்றார்.

உறையூர் காவல் நிலைய குற்றப்பிரிவில் விசாரித்த போது, ''கிழிந்த நோட்டுகளில் ஒன்றில் 'எஸ்.என். வி.சி.எஃப்’ என்ற முத்திரை உள்ளது. அதை வைத்து, அந்தப் பெயர் கொண்ட நிறுவனத்தைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அபார்ட்மென்ட் வாசிகளை ரகசியமாகக் கண்காணித்து வருகிறோம். நாங்கள் கைப்பற்றிய கரன்ஸிகளின் மதிப்பு மூன்று லட்ச ரூபாய் வரை இருக்கலாம். எப்படியும் பணத்தை வீசியவரைக் கண்டுபிடித்து விடுவோம்'' என்றனர் நம்பிக்கையுடன்.

''ஓர் அனாதை ஆசிரமத்துக்காவது இந்தப் பணம் போய் சேர்ந்திருக்கலாம்'' என்று பலரும் பெருமூச்சு விட்டுச் செல்கிறார்கள்.!

- அ.சாதிக் பாட்ஷா

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism