Published:Updated:

பசிக்கும் வயிறு... கொதிக்கும் மாணவர்கள்!

சேலம் உண்டு உறைவிடப்பள்ளி சீர்கேடுகள்

பசிக்கும் வயிறு... கொதிக்கும் மாணவர்கள்!

சேலம் உண்டு உறைவிடப்பள்ளி சீர்கேடுகள்

Published:Updated:
##~##
பசிக்கும் வயிறு... கொதிக்கும் மாணவர்கள்!

'சேலம் வாழப்பாடியை அடுத்த அருநூத்துமலையில் இருக்கும் உறைவிடப் பள்ளி மாணவர்கள் பேசுகிறோம். எங்களுக்கு ஏகப்பட்ட குறைகள்... உதவி செய்ய வாருங்கள்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66808002) அழைப்பு வந்தது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று 10-ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் விசாரித்தோம். ''நான் ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் மலைக் கிராமத்தில் இருந்து படிக்க வரேன். நடந்து வந்து படிச்சிட்டு சாயந்திரம் நடந்தே போயிடுவோம். எங்க ஸ்கூல்ல 300-க்கும் மேற்பட்டவர்கள் படிக்கிறாங்க. எல்லோருமே என்னை மாதிரி ரொம்ப தூரத்தில் இருந்துதான் வர்றாங்க. நாங்க இங்கே தங்கி, சாப்பிட்டுப் படிக்கத்தான் அரசு, இந்தப் பள்ளியைக் கட்டியிருக்காங்க. ஆனா, எங்களைத் தங்க விடுறது இல்லை. பசியில் நடந்து வருவோம். ஆனா, எப்போதாவதுதான் காலையில் சோறு போடுவாங்க. மற்றபடி மதியம் மட்டும்தான். குழம்பில் காய்கறி, பருப்பு எதுவும் இருக்காது. வெறும் ரசம்தான் ஊத்துவாங்க. வாரத்தில் ஒரு நாள்தான் முட்டை போடுவாங்க. எங்களுக்குக் கழிவறை வசதி, லேப் வசதி, குடி நீர் வசதின்னு எதுவுமே கிடையாது. எங்க ஸ்கூலுக்கு எந்த வாத்தியாருமே ஒழுங்கா வரமாட்டாங்க. போன வருஷம்

பசிக்கும் வயிறு... கொதிக்கும் மாணவர்கள்!

10-ம் வகுப்புப் பரீட்சையை 49 பேர் எழுதி, 20 பேர் மட்டும்தான் பாஸ். இப்படி ஸ்கூல் நடந்தா, நாங்க எப்படி படிச்சு பாஸாக முடியும்?'' என்று சோகமாகக் கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்துப் பேசிய சமூக ஆர்வலர் கனகராஜ், ''சேலம் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் இருக்கிறது. இந்தப் பகுதி மக்களின் வசதிக்காக ஓடைக்காரன் புதூர், மாட்டுக்காரனூர், ஆத்தூர், வெள்ளிகவுண்டனூர், கருமந்துறை, அருநூத்துமலை, கரியக்கோவில் வலது, கோணமடுவு, சூரமங்கலம், அரசு வெல்பர் ஹோம் என்று 10 மலைக் கிராமங்களில்

பசிக்கும் வயிறு... கொதிக்கும் மாணவர்கள்!

உண்டு உறைவிடப் பள்ளிகள், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலமாக செயல்பட்டு வருகிறது.

எந்தப் பள்ளியிலும் கழிவறை கிடையாது, போதுமான ஆசிரியர்களும் கிடையாது. மூன்று வேலை உணவு போடுவதில்லை, யாரையும் தங்க அனுமதிப்பதும் இல்லை. பிள்ளைகளுக்குத் தரவேண்டிய சோப்பு, எண்ணெய் முறைப்படி வழங்குவது இல்லை. அத்தனை பணமும் கொள்ளை போகிறது. மாவட்ட ஆட்சியர்தான் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.  

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசிய தலைமை ஆசிரியர் பாஸ்கரன், ''எல்லாமே பொய்க்குற்றச்சாட்டு, மிகைப்படுத்தி கூறுகிறார்கள். வயதுக்கு வந்த பெண் குழந்தைகளை பாதுகாப்பு இல்லாமல் இங்கே தங்க வைக்க முடியாது. ஆனால், மூன்று நேரமும் உணவு போட்டுத்தான் அனுப்புகிறோம்'' என்றார்.

சேலம் கலெக்டர் மகரபூஷணம், ''அனைத்துப் பள்ளிகளிலும் கழிவறை அமைப்பதற்காக அரசு புதிய திட்டம் தீட்டியுள்ளது. அதன்பிறகு, அத்தனை பிரச்னைகளும் தீர்ந்துவிடும். மூன்று நேரம் உணவு தருவது இல்லை என்ற புகாரை நிவர்த்தி செய்து விட்டோம்'' என்றார்.

கல்வி விஷயத்தில் அரசு இன்னமும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்!

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: க.தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism