Published:Updated:

கோட்டை விட்ட போலீஸ்... சவால் விடும் யோக வாசுதேவன்!

அருப்புக்கோட்டை பரபரப்பு

கோட்டை விட்ட போலீஸ்... சவால் விடும் யோக வாசுதேவன்!

அருப்புக்கோட்டை பரபரப்பு

Published:Updated:
##~##
கோட்டை விட்ட போலீஸ்... சவால் விடும் யோக வாசுதேவன்!

'அருப்புக்கோட்டை முருகன் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்...’ என்று சட்டசபைக் கூட்டத்தொடரில் போலீஸ் மானியக் கோரிக்கையின் போது முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாக அறிவித்தார். சட்டசபையில் இந்த அறிவிப்பு வந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையிலும், ஆளும் கட்சி அருப்புக் கோட்டை யூனியன் சேர்மன் யோக வாசுதேவனை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கைது செய்யாமல் இருப்பது பலத்த முணுமுணுப்பைக் கிளப்பி இருக்கிறது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தி.மு.க. ஆட்சியில் நடந்த அருப்புக்கோட்டை ம.தி.மு.க. பிரமுகர் முருகன் கொலை வழக்கும், அருப்புக்கோட்டை போஸ்ட் மாஸ்டர் லட்சுமணன் கொலை வழக்கும் விருதுநகர் மாவட்டத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டன. இந்தக் கொலை வழக்குகளில் கொலையாளிகளுக்கு ஆதரவாக நடந்துகொண்டதாக அப்போதைய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

கோட்டை விட்ட போலீஸ்... சவால் விடும் யோக வாசுதேவன்!

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு இரண்டு வழக்குகளும் வேகம் பிடித்தன. முதல் கட்டமாக போஸ்ட் மாஸ்டர் லட்சு மணன் கொலை வழக்கைக் கையில் எடுத்த அப்போதைய மதுரை எஸ்.பி. ஆஸ்ரா கர்க், பந்தல்குடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் சாகுல் ஹமீது மற்றும்  மாரியம்மாள் ஆகியோரைக் கைது செய்தார். சாகுல் ஹமீதுவுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆரும் கைதாகி, சமீபத்தில்தான் ஜாமீனில் வந்தார்.

முருகன் கொலை வழக்கு விசாரணை வேகம் எடுக்கத் தொடங்கியதை அறிந்த முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆரின் தீவிர ஆதரவாளரான அருப்புக்கோட்டை யூனியன் சேர்மன் யோக வாசுதேவன், திடீரென்று தி.மு.க-வில் இருந்து விலகி அ.தி.மு.க-வில் ஐக்கி யமானார். கொலை வழக்கில் இருந்து தப்பிக்கவே அவர் ஆளும் கட்சிக்குத் தாவியதாகப் பேச்சு எழுந்தது.

இதற்கிடையே, முருகன் கொலை வழக்கு தொடர்பாக யோக வாசுதேவனின் உறவினர் அழகு ராமானுஜத்தை கடந்த ஏப்ரல் மாதம் 18-ம் தேதி கைது செய்த சி.பி.சி.ஐ.டி. போலீஸார் அவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றனர். அதன் அடிப்படையில் யோக வாசுதேவன், அவரது தம்பி பாண்டுரங்கன், உறவினர் நொண்டி சீனி ஆகிய மூன்று பேரையும் குற்றவாளிகளாகச் சேர்த்து, கைது நடவடிக்கையில் இறங்கினர்.

யூனியன் அலுவலகத்துக்குச் சென்ற சி.பி.சி.ஐ.டி. குழு, யோக வாசுதேவனைக் கைது செய்ய வந்திருப்பதாகச் சொல்லவும், 'நீங்கள் போங்கள். நான் பின்னாடியே வருகிறேன்’ என்று நம்பிக்கை கொடுத்த யோக வாசுதேவன், குடும்பத்துடன் தலைமறை வாகிப் போனார். அதோடு, அவரது தம்பி பாண்டுரங்கன் குடும்பமும் எஸ்கேப்.

யோக வாசுதேவனைக் 'கோட்டை’ விட்டதை அடுத்து, சி.பி.சி.ஐ.டி-யின் டி.ஐ.ஜி. ஸ்ரீதர், புதிய குழு ஒன்று அமைத்து, அதனிடம் யோக வாசுதேவனைக் கைது செய்யும் வேலையை ஒப்படைத்தார். முதல்

கோட்டை விட்ட போலீஸ்... சவால் விடும் யோக வாசுதேவன்!

கட்டமாக யோக வாசுதேவனின் இரண்டு வங்கிக் கணக்குகளையும் முடக்கிய போலீஸார், ஒரு வங்கிக் கணக்கை மட்டும் முடக்காமல் இருந்தனர். அதில் அவர் பணம் எடுக்கும்போது  கண்டுபிடித்து விடலாம் என்று போலீஸ் திட்டம் போட்டது. ஆனால், அந்த வங்கிக் கணக்கில் இருந்து இதுவரை பணம் எதுவும் எடுக்கப்படவில்லை. செல்போன் சிக்னல் மூலம் தேடும் முயற்சியும் தோல்வி. தலைமறைவாக இருந்தபடியே உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீனுக்கு இரண்டு முறை மனுத்தாக்கல் செய்தார் யோக வாசுதேவன். அவை, தள்ளுபடி ஆனது. 'யோக வாசுதேவனை போலீஸ்தான் தப்பிக்க விட்டுள்ளது. வேண்டும்என்றே கைது செய்யாமல் கண்ணாமூச்சு காட்டுகிறார்கள்’ என்று போலீஸ் மீது புகார்மழை பொழிகிறார்கள் மக்கள்.

இதுகுறித்துப் பேசுபவர்கள், ''இப்போது தி.மு.க. தரப்பு, அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி யோக வாசுதேவனின் தலைமறைவு வாழ்க்கைக்கு உதவி செய்கிறது. கொலை வழக்கில் தி.மு.க. மாஜிக்கு உதவிய வக்கீல்கள்தான் இப்போது யோக

கோட்டை விட்ட போலீஸ்... சவால் விடும் யோக வாசுதேவன்!

வாசுதேவனுக்கு முன் ஜாமீன் கிடைக்க ஏற்பாடு செய்கிறார்கள் என்பதே இதற்கு ஆதாரம். முன்ஜாமீன் கிடைத்ததும் விரைவில் தி.மு.க-வுக்குத் தாவினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. இவர் போலீஸுக்கு சவால் விடும் வகையில் தலை மறைவாக இருக்கிறார். ஆனால், போலீஸ் சீரியஸாகத் தேடுவதாகத் தெரியவில்லை'' என்று கிசுகிசுக்கின்றனர்.

சி.பி.சி.ஐ.டி., துரத்தல் காரணமாக யோக வாசுதேவனின் பதவிக்கும் சிக்கல் உண்டாகி இருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கவுன்சில் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், யோக வாசுதேவன் தலைமறைவாக இருப்பதால் யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம் நடத்தப்படவில்லை. இதனால், வளர்ச்சிப் பணிகள் முடங்கிப்போய் உள்ளன.

இதுதொடர்பாக பேசிய கலெக்டர் பாலாஜி, ''அருப்புக்கோட்டை யூனியன் கவுன்சிலர் கூட்டத்தை நடத்தாமல் இருப்பதைத் தொடர்ந்து, விளக்கம் கேட்டு யூனியன் தலைவர் யோக வாசுதேவனுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம். அவர் தலைமறைவாக இருப்பதால் அவரது ஆத்திப்பட்டி வீட்டுக்கதவில் ஷோகாஸ் நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது. வளர்ச்சிப் பணிகள் பாதிக்காமல் இருப்பதற்காக அருப்புக்கோட்டை யூனியன் துணைத்தலைவர் மூலம் கவுன்சிலர்கள் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதேநேரம் யோக வாசுதேவன் குறித்து துறை ரீதியாகத் தனியாக விசாரணை நடத்தவும் உத்தரவு இடப்பட்டுள்ளது'' என்றார்.

சி.பி.சி.ஐ.டி-யின் எஸ்.பி. ராஜேஸ்வரி, ''யோக வாசுதேவனைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அவர் வழக்கில் இருந்து தப்ப முடியாது. விரைவில் அவரை கைது செய்வோம்'' என்றார்.

வாசுதேவன் தி.மு.க-வில் இணையும் முன்பாவது கைது செய்யுமா போலீஸ்?

- எம்.கார்த்தி

படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism