Published:Updated:

'புலியோட ஆட்டத்தைப் பார்க்கப் போறீங்க..!'

வேலூரில் வெளுத்து வாங்கிய துரைமுருகன்

'புலியோட ஆட்டத்தைப் பார்க்கப் போறீங்க..!'

வேலூரில் வெளுத்து வாங்கிய துரைமுருகன்

Published:Updated:
##~##
'புலியோட ஆட்டத்தைப் பார்க்கப் போறீங்க..!'

சோர்ந்து போயிருந்த வேலூர் தி.மு.க. உடன்பிறப்புகளுக்கு உற்சாக டானிக் கொடுத்திருக் கிறது, தி.மு.க-வின் அவசர செயற்குழு கூட்டம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முன்னாள் அமைச்சரும், காட்பாடி சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் தான் கூட்டத்துக்குத் தலைமை. ஜெகத்ரட்சகனின் பெயர் போஸ்டர்களில் இருந்தும் அவர் வரவில்லை. வேலூர் மாவட்டத்தில் உள்ள நகர, ஒன்றிய, இளைஞர் மன்ற நிர்வாகிகளைப் பேச அழைத்தனர். அவர்கள் ஒவ்வொருவருமே, ''எங்களால் முடிஞ்ச வரைக்கும் ஆளுக்கு 3,000 பேரையாவது அழைச்சுட்டு வந்து சிறையை நிரப்புவோம்'' என்று கிளிப் பிள்ளையைப் போன்று சொன்னதையே திரும்பத்திரும்ப சொன்னார்கள். வாலாஜா இளைஞர் அணிப் பொறுப்பாளர் ஒருவர், ''இந்த ஆட்சி வந்ததும் என் அப்பா மீது கேஸ் போட்டு உள்ளனர். நானே நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளேன். அதனால் நான் நிச்சயமாக 5,000 பேரை அழைத்து வந்து சிறையை நிரப்புவேன்'' என்று கொந்தளித்தார்.

'புலியோட ஆட்டத்தைப் பார்க்கப் போறீங்க..!'

வேலூர் மாவட்டச் செயலாளரான காந்தி பேசும் போது, ''இப்போது நடப்பது இடிஅமீனைவிட கொடூரமான ஆட்சி. இந்த ஆட்சியில் விலைவாசி எப்படி ஏறி இருக்கிறது என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும். மக்களுக்கு நன்மை செய்வதை விட்டுவிட்டு, நம்மைக் கொடுமைப்படுத்தி வருகிறார் அந்த அம்மையார். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தலைவரைக் கைது செய்தபோது நாம் எப்படித் துடித்தோம், போராடினோம். ஆனால் இந்த முறை கலைஞரின் உண்மையான தோழர்களைக் கைது செய்து உள்ளார்கள். நாம் பொறுமை இழக்கக் கூடாது. நீங்கள் சொல்வது போன்று அதிக எண்ணிக்கையில் ஆட்களைக் அழைத்து வரவேண்டிய அவசியம் இல்லை. ஒரு கிளைக்கு ஐந்து பேரைக் அழைத்து வந்தாலே போதும். ஏன் என்றால் வேலூர் மத்தியச் சிறையில் அவ்வளவு இடம் இல்லை'' என்று தன் பங்குக்குப் பேசி விட்டு அமர்ந்தார்.

'புலியோட ஆட்டத்தைப் பார்க்கப் போறீங்க..!'

துரைமுருகன் பேச எழுந்தபோது தொண்டர் களுக்குப் பசி மயக்கம். ஆனாலும், கலைந்துபோகாமல் உற்சாகமாக இருந்தார்கள். ''தி.மு.க. தலைவர் கலைஞர், விஜயாலய சோழன் போன்றவர். போர்க் களத்தில் எதிரிகளோடு சண்டை போட்டுக்கொண்டு இருந்தபோது அவர், தனது இரண்டு கால்களையும் இழந்துவிட்டார். ஆனாலும் தனது வீரம் தளராமல், 'எனக்கு இரண்டு கால்கள் போனால் என்ன? இரண்டு கைகள் இருக்கின்றன’ என்று எதிரிகள் அனைவரையும் வீழ்த்தினார். இப்போது உடல்நிலை காரணமாக, என் தலைவர் கலைஞர் நடக்க முடியாமல் இருக்கிறார். ஆனாலும் அவரது பலம் இன்னும் குறையவில்லை. எப்போதும் எதிரி களுக்கு சிம்மசொப்பனமாக விளங்குவார். சிறை நிரப்பும் போராட்டம் என்றதும் அந்த அம்மையார் ஜெயலலிதா 10 முதல் 15 பேர் வரை தான் வருவார்கள் என்று நினைத்துக்கொண்டு இருப்பார். அந்த அம்மையாருக்கு இப்போது ஓர் உண்மையைச் சொல்கிறேன். தமிழகம் முழுக்க இருக்கும் அனைத்துச் சிறைகளும் நிச்சயமாக நிரம்பும்.

அம்மையாரே.. உங்கள் ஆட்சியில் எங்கு திரும்பி னாலும் கொலை, கொள்ளை போன்றவை அதிகமாகி இருக்கிறது. எங்கள் கட்சியினர் பலரையும் பொய் வழக்குப் போட்டு சிறைக்கு அனுப்புவதையே உங்களது வாடிக்கையாகக்கொண்டு இருக்கிறீர்கள். எங்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்கு போடும் ஜெயலலிதா மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன? 200 முறைக்கு மேல் வாய்தா வாங்கியவர்தானே நீங்கள்! நாங்கள் உங்களைப் போன்று கோழைகள் கிடையாது. தி.மு.க-காரன் வீட்டில் இருக்கும் ஈ., எறும்புக்குக்கூட பயம் இருக்காது. ஜெயலலிதா அம்மையாரே, தூங்கிக் கொண்டு இருந்த புலியைத் தட்டி எழுப்பி விட்டீர்கள். புலியின் ஆட்டத்தை இனி பார்க்கப் போகிறீர்கள். ஜூலை 4-ம் தேதி படையைத் திரட்டிக் காட்டுகிறோம்.'' என்று சீறி முடிக்க... கூட்டத்தில் கைதட்டல்கள் அடங்க ரொம்ப நேரம் ஆனது.

வேலூர் சிறையை நிரப்புறாங்களானு பார்ப் போம்!

-கே.ஏ.சசிகுமார், படங்கள்: ச.வெங்கடேசன்      

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism