Published:Updated:

பூட்டிய தொழிற்சாலைகளுக்குள் வில்லங்கம்!

கரூர் கவலை

பூட்டிய தொழிற்சாலைகளுக்குள் வில்லங்கம்!

கரூர் கவலை

Published:Updated:
##~##
பூட்டிய தொழிற்சாலைகளுக்குள் வில்லங்கம்!

'கரூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்த இரண்டு அரசு நிறுவனங்கள் தற்போது மூடப் பட்டுக்கிடக்கின்றன. அந்த நிறுவனங்களின் மதிப்பு வாய்ந்த இயந்திரங்களை யார் யாரோ திருடுகிறார்கள். அங்கே சமூக விரோதச் செயல்களும் நடைபெறுகின்றன’ என்று  தகவல் வரவே, விசாரணையில் இறங்கினோம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அண்ணா தொழிற்சங்க கரூர் மாவட்ட முன்னாள் செயலாளர் நாகராஜன் நம்மிடம் விரிவாகப் பேசினார். ''மாயனூரில் இருக்கும் டான்செம் தொழிற்சாலை 1984-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் 8.5 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டது. அங்கு ஆஸ்பெட்டாஸ் ஷீட்டுகளும், சிமென்ட் குழாய்களும் தயாரிக்கப்பட்டன. அந்த ஆலைக்கு என்றும் சிக்கல் வரக் கூடாது என்ற நல்ல நோக்கத்தில், 'உற்பத்திப் பொருட்களை குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சி என்று அரசுத் திட்டங்களுக்கு மட்டுமே விற்கவேண்டும்; தனியாருக்கு விற்க அனுமதி இல்லை’ என்று அரசு ஆணை போடப்பட்டது. இங்கு தயாரிக்கப்பட்ட பொருட்கள் தரமாகவும் உறுதியாகவும் இருந்ததால், பிற மாநில அரசுகளும்கூட அரசுத் திட்டங்களுக்காக ஆர்டர் கொடுத்து வாங்கிச் சென்றார்கள். அதனால், ஆலையின் லாபம் வருடாவருடம் பல மடங்கு அதிகரித்தது.

பூட்டிய தொழிற்சாலைகளுக்குள் வில்லங்கம்!
பூட்டிய தொழிற்சாலைகளுக்குள் வில்லங்கம்!

இந்த நிலையில் 1996-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு, முந்தைய அரசு ஆணையை மாற்றியது. அதன்படி, உற்பத்தியாகும் பொருட்களில் அரசின் தேவைக்குப் போக மீதத்தை தனியாருக்கு விற்கலாம் என்றது. அப்போது முதல் நிறுவனம் நஷ்டத்துக்கு மாறியது.

ஆலையைத் தனியா ருக்குத் தாரைவார்ப்பதற்காகத்தான் இப்படி நடக்கிறது என்று நாங்கள் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தினோம். 1998-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு, தனியார்மயத்துக்கு

பூட்டிய தொழிற்சாலைகளுக்குள் வில்லங்கம்!

இடைக்காலத் தடை ஆணையும் பெற்றோம். இந்த நேரத்தில் ஆலையில் வேலை செய்த பலர் கட்டாய நீக்கம் செய்யப்பட்ட னர். அதனால், அடுத்து வந்த அ.தி.மு.க. அரசால் இந்த ஆலையை இயக்க முடியவில்லை.

ஆலையில் உள்ள ஒவ்வொரு இயந்திரமும் பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. அதனால், சமூக விரோதிகள் ஆலையின் சுவர் ஏறிக் குதித்து, இயந்திரங்களின் உதிரிப் பாகங்களை எடுத்துச் சென்று விற்று சம்பாதிக்கிறார்கள். பேருக்கு மட்டுமே இரண்டு செக்யூரிட்டிகள் இருப்பதால், அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும் பலர் இந்த ஆலையின் உள்ளே உட்கார்ந்து மது அருந்துவது, சீட்டு விளையாடுவது போன்ற காரியங்களிலும் ஈடுபடுகின்றனர். இது எல்லாமே தெரிந்தும் காவல் துறையினரும் கண்டுகொள்வது இல்லை. இதை அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு, மீண்டும் ஆலை இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அது முடியாது என்றால், இயந்திர பாகங்களையும் இடத்தையும் விற்பனை செய்தாவது, அரசின் பிற திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம்.

பூட்டிய தொழிற்சாலைகளுக்குள் வில்லங்கம்!

அரவக்குறிச்சியில் உள்ள மலைக் கோவில் கூட்டுறவு நூற்பாலைக்கும் இதே கதிதான். காமராஜர் முதல்வராக இருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட ஆலை இது. இங்கு இருக்கும் இயந்திரங்களில் பெரும் பாலானவை ஜப்பான், சீனா வில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. நல்ல லாபத்தில் இயங்கிய இந்த ஆலையிலும் தி.மு.க. ஆட்சியில்தான் நஷ்டக் கணக்கு காட்டப்பட்டது. அதையும் நாங்கள் எதிர்த்ததால், நிரந்தரப் பணியாளர்களுக்கே சம்ப ளத்தை மூன்று, நான்கு மாதங்கள் என இழுத்தடித்து தாமதமாகக் கொடுத்தனர். பலர் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டனர். அதனால் 2003-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஆலை மூடப்பட்டது. அங்கு பணியாற்றிய தொழி லாளர்களுக்கு இன்னும் சம்பள நிலுவை கிடைக்கவே இல்லை. அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக் கிறது. இந்த ஆலையிலும் உபகரணங்களைக் களவாடு வதும், சட்ட விரோதச் செயல்கள் நடப்பதும் வாடிக்கையாக நடக்கிறது. ஆலை அமைந்திருக்கும் 56 ஏக்கர் நிலத்தையும் அரசு கையகப்படுத்தி பயனுள்ள விஷயங்களுக்குப் பயன்படுத்த லாம்'' என்றார்.

தி.மு.க. தரப்பிலோ, ''நஷ்டத்தில் ஓடிய ஆலை களை எங்கள் ஆட்சியில் சிரமப்பட்டாவது நடத்தி வந்தோம். ஆனால், அவற்றை இழுத்து மூடி தொழிலாளர்கள் வயிற்றில் அடித்ததே அ.தி.மு.க. அரசுதான்!'' என்கிறார்கள்.

தமிழகத் தொழில் துறையின் கீழ் வரும் டான்செம் ஆஸ்பெட்டாஸ் ஆலை பற்றி அந்தத் துறையின் அமைச்சர் தங்கமணியிடம் சொன் னோம். ''டான்செம் தொழிற்சாலை வளாகத்தில் சமூக விரோதச் செயல்களா? உடனே அதுபற்றி அதிகாரிகளை விசாரிக்கச் சொல்கிறேன். ஒரு நாள் நானே நேரில் வந்து ஆலையைப் பார்வையிட்டு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கிறேன்'' என்றார்.

தமிழகக் கைத்தறித் துறையின் கீழ் வரும் மலைக்கோவிலூர் கூட்டுறவு நூற்பாலையைப்பற்றி அந்தத் துறையின் அமைச்சர் சுந்தர்ராஜனிடம் பேசினோம். ''அரசாங்கப் பொருட்களைத் திருடுவது சட்டப்படி குற்றம். இந்தச் செயலில் அதிகாரிகள் சிலரே உடந்தையாகவும் இருக்க வாய்ப்பு உண்டு. இதை உடனே சரிசெய்கிறேன். அங்கு பணிசெய்த நிரந்தரப் பணியாளர்களின் நிலுவை சம்பளம் வழங்குவது குறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டுபோய் இருக்கிறேன். அதற்கான நிதி வந்ததும், அவர்களுக்கு சம்பளம் உரிய முறையில் வழங்கப்படும்'' என்றார்.

கரூர் எஸ்.பி சந்தோஷ்குமார் கவனத்துக்கு விஷயத்தைக் கொண்டுசென்றோம். ''இதுவரை எங்களுக்கு எந்த புகார்களும் வரவில்லை. அரசுப் பொருட்களைத் திருடுவது தண்டனைக்குரிய குற்றம். அந்த இரண்டு ஆலைகளைச் சுற்றியும் போலீஸாரை இரவு ரோந்து அனுப்ப ஏற்பாடு செய்கிறேன். யார் தவறு செய்தாலும், சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்'' என்றார்.

சீக்கிரம்!

- ஞா.அண்ணாமலை ராஜா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism