Published:Updated:

''இவளை அடிச்சிட்டு வா, செலவை நான் பார்த்துக்குறேன்!''

சகோதரனைத் தூண்டினாரா சங்கரன்கோவில் எம்.எல்.ஏ.?

''இவளை அடிச்சிட்டு வா, செலவை நான் பார்த்துக்குறேன்!''

சகோதரனைத் தூண்டினாரா சங்கரன்கோவில் எம்.எல்.ஏ.?

Published:Updated:
##~##
''இவளை அடிச்சிட்டு வா, செலவை நான் பார்த்துக்குறேன்!''

ங்கரன்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பின ரான முத்துசெல்வி மீது வரதட்சணைப் புகார் எழுந்து இருப்பதுதான் லேட்டஸ்ட் ஹாட். இந்த விவகாரம் முதல்வரின் கவனத்துக்கும் எடுத்துச் செல்லப்பட்டு இருப்பதால், அதிர்ந்து போய் இருக்கி றார்கள் எல்.எல்.ஏ-வின் உறவினர்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முன்னாள் அமைச்சர் கருப்பசாமி மறைவுக்குப் பிறகு, சங்கரன்கோவில் தொகுதிக்கு எம்.எல்.ஏ. ஆனார் முத்துசெல்வி. இவரது சகோதரர் இளைய ராஜாவின் மனைவி சமுத்திரக்கனிதான் முத்துசெல்வி மீது புகார் கொடுத்திருக்கிறார்.

சமுத்திரக்கனியை சந்தித்துப் பேசினோம். ''நெல்லைக்கு பக்கத்தில் இருக்கும் பள்ளமடை கிராமம்தான் என்னோட சொந்த ஊர். 2010 மே மாதம் எனக்கும் முன்னாள் எம்.எல்.ஏ-வான சங்கரலிங்கத்தின் மகன் இளையராஜாவுக்கும் கல்யாணம் நடந்துச்சு. 15 பவுன் நகையும், 70 ஆயிரம்

''இவளை அடிச்சிட்டு வா, செலவை நான் பார்த்துக்குறேன்!''

ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசையும் வரதட்சணையா கொடுத்தாங்க. எனது கணவர், மாமனார், மாமியாருடன் கூட்டுக்குடும்பமா ஆறு மாசம் இருந்தேன். ஆரம்பத்தில் என்னை எல்லோரும் நல்லாத்தான் கவனிச்சாங்க. என் கணவர் எந்த வேலைக்கும் போக மாட்டார். அதனால் நான் விவசாய வேலைகளுக்குப் போனேன்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு எங்களை தனிக் குடித்தனம் வெச்சாங்க. திடீர்னு ஒருநாள் மாமனார் சங்கரலிங்கமும் மாமியார் ராஜம்மாளும்

''இவளை அடிச்சிட்டு வா, செலவை நான் பார்த்துக்குறேன்!''

வீட்டுக்கு வந்தாங்க. அவங்க என்கிட்ட, 'என் மகனோட நீ குடும்பம் நடத்தணும்னா, உங்க வீட்டில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரதட்சணை வாங்கிட்டு வா’ன் னாங்க. 'திடீர்னு அவ்வளவு பணத்துக்கு எங்கே போவோம்’னு நான் கேட்டதும், என் மாமனாருக்குக் கோபம் வந்துருச்சு. 'என்னையவே எதிர்த்துப் பேசுறியா... பணம் கொண்டு வர முடியலைன்னா, திரும்பி வராதே’னு சத்தம் போட்டார். என் மாமியார் ராஜம்மாளும், 'பணம் வாங்காம வந்தா, மண்ணெண்ணெய் ஊத்தி தீ வெச்சிருவேன். என் மக எம்.எல்.ஏ-வா இருக்கா. அதனால், எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது’னு சொன்னார். அதனால் பயந்து போய் ஊருக்கு வந்துட்டேன். என் கணவரையும் பார்க்க விடாம செஞ்சுட்டாங்க. அதனால, சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அதுக்குப் பிறகு பல விதத்தில் எனக்கு கொலை மிரட்டல் வந்திச்சு. அதனால், 'எனது உயிருக்குப் பாதுகாப்பு வேண்டும்’னு நெல்லை மாவட்ட கலெக்டர்கிட்ட மனு கொடுத்தேன். முதல்வரின் தனிப் பிரிவுக்கும் புகார் அனுப்பி இருக்கேன். இந்த அபலைப் பெண்ணின் குரல் முதல்வரின் காதுக்கு எட்டினால், நிச்சயம் நல்லது நடக்கும்'' என்றார் கண்ணீர் மல்க.

அருகில் இருந்த அவரது தாயார் சரஸ்வதி, ''கல்யாணம் நடந்த ஆறு மாசத்துலயே என் மக வீட்டுக்கு வந்துட்டா. வீட்டுக் காரரை என் மக பார்க்கப் போனப்ப, 'இவளை அடிச்சுத் துரத்திட்டாங்க. நம்ம குடும்பத்தை அசிங்கப் படுத்தின இவளை அடிச் சிட்டு வா... செலவை நான் பார்த்துக்குறேன்’னு என் மருமகன் கிட்ட அவங்க அக்கா முத்துசெல்வி எம்.எல்.ஏ. சொல்லி இருக்காங்க. வாழ வேண்டிய பொண்ணுக்கு எதிரா ஒட்டுமொத்தக் குடும்பமும் இருக்குதே...'' என்று கதறினார்.

''இவளை அடிச்சிட்டு வா, செலவை நான் பார்த்துக்குறேன்!''

இந்த விவகாரம் குறித்துப் பேசிய பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த தேவேந்திரன், ''பாதிக்கப்பட்ட சமுத்திரக்கனி, எனது அக்கா மகள். இந்தப் பெண்ணை கல்யாணம் முடிச்சதே, ஏதோ ஒரு ஏமாத்துற விஷயம்தான். ஒரு முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டுக் கல்யாணம் எவ்வளவு ஆடம்பரமா நடக்கும்? ஆனா, இந்தக் கல்யாணம் கோயில்ல வெச்சு சிம்பிளா நடந்தது. போட்டோ, வீடியோகூட எடுக்கல. பொதுவா கிராமங்களில் யாருக்காவது கல்யாண தோஷம் இருந்தால், வாழைக்குத் தாலிக் கட்டி அதை வெட்டிப் போட்டுட்டு, நிஜமான பெண்ணை கல்யாணம் செய்வாங்க. இங்கே வாழைக்கு பதிலா சமுத்திரக்கனியின் வாழ்க்கையை பாழாக்கிட்டாங்கன்னுதான் நினைக்க வேண்டி இருக்கு'' என்று கொதித்தார்.

இது பற்றி எம்.எல்.ஏ. முத்துசெல்வியிடம் கேட்டபோது, ''இந்த விவகாரத்துக்கும் எனக்கும் துளிகூட சம்பந்தம் கிடையாது. எதுவாக இருந்தாலும் எனது தந்தையிடம் பேசிக்கொள்ளுங்கள்'' என்றார்.

இளையராஜாவைத் தொடர்பு கொள்ள முடியாததால் சங்கர லிங்கத்திடம் பேசினோம். ''அந்தப் பொண்ணுக்கு தண்ணீரைப் பார்த்தாலே வலிப்பு வந்துரும். அவங்க குடும்பத்தினர் இதை மறைச்சு கல்யாணம் செஞ்சுட்டாங்க. அதுதான் பிரச்னை. எங்க வீட்டுல ஏழு கல்யாணம் நடந்திருக்கு. இதுவரை நான் வரதட்சணை கொடுத்ததும் கிடையாது; வாங்கியதும் கிடையாது.

என்னோட மூத்த மனைவியின் மகன்தான் இளையராஜா. அவனுக்கும் முத்துசெல்விக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. முத்துசெல்விக்கு அரசியலில் பொறுப்பு எதுவும் கிடைச்சுடக் கூடாதுன்னு சிலர் சதி செய்றாங்க. இந்த அளவுக்குப் பிரச்னை வந்த பிறகு எனது மகனை அந்தப் பெண்ணுடன் வாழவைக்க முடியாது. எனது மகன் சார்பில் விவாகரத்து வழக்குத் தொடர இருக்கிறோம்'' என்றார் காட்டத்துடன்.

சமுத்திரக்கனியின தாயார் சரஸ்வதியையை மீண்டும் தொடர்புகொண்டு வலிப்பு நோய் குறித்துக் கேட்டோம். ''எனது மகளுக்கு எந்த நோயும் இல்லை. அவங்களுக்கு வசதி வாய்ப்பு வந்திருச்சு. அதனால், எதை வேணும்னாலும் சொல்வாங்க'' என்றார் அழுகையுடன்.

வலிப்பு இருப்பதாகவே வைத்துக் கொண் டாலும், அதற்காக ஒரு பெண்ணை விரட்டுவது நியாயம்தானா?

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism