Published:Updated:

ஒரு புறம் எதிர்ப்பு.... மறு புறம் எரிபொருள்!

கூடங்குளம் இறுதிக்கட்ட நிலவரம்

ஒரு புறம் எதிர்ப்பு.... மறு புறம் எரிபொருள்!

கூடங்குளம் இறுதிக்கட்ட நிலவரம்

Published:Updated:
##~##
ஒரு புறம் எதிர்ப்பு.... மறு புறம் எரிபொருள்!

கூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடங்க இருக்கும் நிலையில், அணு உலைக்கு எதிரான மாநாடு பிரமாண்டமாக நடத்தப் படவே, மீண்டும் பரபரப்பு தொற்றி உள்ளது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டின் ஒத்துழைப்புடன் 14,500 கோடி ரூபாய் மதிப்பில் அணு மின்நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதல் அணு உலையில், கடந்த மே மாத நிலவரப்படி 99.36 சதவிகிதப் பணிகள் நிறைவடைந்து இருப்பதாக அணு சக்திக் கழகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறது. இரண்டாவது அணு உலைக்கான பணிகள் இதுவரை 94.75 சதவிகிதம் முடிவடைந்து இருப்பதாகவும், இந்த உலை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் மின் உற்பத்தியைத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் சூழலில், அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவினரும் தொடர்ந்து தங்கள் எதிர்ப்பைத் தீவிரமாகவே பதிவு செய்து வருகின்றனர்.

கூடங்குளம் அணு உலையை முற்றிலுமாக கைவிட வலியுறுத்தி ஜூலை 1-ம் தேதி இடிந்தகரையில் 'அணு உலைக்கு எதிரான எழுச்சி மாநாடு’ நடைபெற்றது.

ஒரு புறம் எதிர்ப்பு.... மறு புறம் எரிபொருள்!

தமிழ் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ்த் தேசிய பொதுவுடைமை கட்சித் தலைவர் மணியரசன், ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர்  மல்லை சத்யா, தியாகு, வடிவேல் ராவணன் போன்ற பல்வேறு அமைப்பினரும் அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

ஒரு புறம் எதிர்ப்பு.... மறு புறம் எரிபொருள்!

மாநாட்டில் பேசிய பழ.நெடுமாறன், ''இங்குள்ள அதிகாரிகள் அரசுக்குத் தவறான தகவல்களை தெரிவிக்கிறார்கள். அதனால் அவர்கள் கொடுக்கும் குறிப்பை வைத்துக் கொண்டு அரசாங்கம் இந்த

ஒரு புறம் எதிர்ப்பு.... மறு புறம் எரிபொருள்!

விஷயத்தை கணிக்கக் கூடாது. முதல்வர் ஜெயலலிதா இந்த மக்களை நேரில் சந்தித்துப் பேச வேண்டும். அப்போதுதான் அவர்களின் பிரச்னை என்ன என்பது தெரியவருமே தவிர, அதிகாரிகள் சொல்வதைக் கேட்டு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்கக் கூடாது'' என்று வலியுறுத்தினார்.

இன்றைய நிலவரம் குறித்து போராட்டக் குழுவைச் சேர்ந்த புஷ்பராயனிடம் பேசினோம். ''எங்களைப் பொறுத்தவரை அணு உலையை எதிர்த்து உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்பதோடு மட்டும் அல்லாமல் சட்டரீதியான போராட்டத்தையும் நடத் துறோம். அணு உலைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் மூலம் எங்களுக்குப் பல ஆவணங்களை தர மறுத்த மத்திய அரசாங்கமும் அணு சக்திக் கழகமும், இப்போது அந்த ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பித்து இருக்கிறார்கள். எங்கள் போராட்டம் சரியான இலக்கில் செல்வதற்கான சாட்சி இது!'' என்று படபடத்தார்.

ஒரு புறம் எதிர்ப்பு.... மறு புறம் எரிபொருள்!

இதுவரை மத்திய அரசை மட்டுமே கடுமையாக விமர்சித்து வந்த போராட்டக் குழுவினர் இப்போது தமிழக அரசைக் கண்டித்து மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். இது பற்றி பேசிய போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான சுப.உதயகுமாரன், ''அணு மின் நிலையத்தைத் தொடங்குவதற்கு முன்பாக சுற்றிலும் இருக்கும் மக்களுக்குப் பாதுகாப்பு ஒத்திகை நடத்த வேண்டும் என்பது சர்வதேச விதிமுறை. ஆனால் நக்கநேரி என்கிற கிராமத்தில் ஒத்திகை நடத்தியதாகக் கணக்குக் காட்டி இருப்பது கண்டிக்கத் தகுந்தது. 'விபத்து நேர்ந்தால் ஈரத் துணியை முகத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்’ என்பதை போபால் மக்களுக்குச் சொல்லிக் கொடுத்து இருந்தால் பெருமளவு உயிர் இழப்பைத் தடுத்திருக்க முடியும். அதே தவறை இங்கேயும் செய்ய அரசாங்கம் துணை போகிறது. தமிழக மக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையில் இருந்து தமிழக அரசும் தவறுகிறது. அதனால்தான் தமிழக அரசையும் கண்டித்தோம்!'' என்றார்.

அணு மின்நிலைய செயல்பாடு குறித்து இந்திய அணு சக்தி கழக செயல் இயக்குநரான என்.நாகாய்ச் தெரிவிக்கையில், ''அணு உலையில் மின் உற்பத்தியைத் தொடங்க ஏதுவாக எரிபொருள் நிரப்பும் பணிக்கு முந்தைய ஆய்வுகளை ஜூன் 30-ம் தேதி தொடங்கி உள்ளோம்.  இந்த ஆய்வு இரண்டு வாரத்தில் முடிவடையும். அந்த ஆய்வறிக்கையை அணு சக்தி ஒழுங்குமுறை வாரியத்திடம் சமர்ப்பிப்போம். அதனைப் பரிசீலித்து அந்த ஆணையம் அனுமதி அளித்ததும் எரிபொருளை நிரப்பும் பணி தொடங்கும்!'' என தெரிவித்தார்.

இரண்டு புறத்திலும் தீவிரம் குறையாமலே இருக்கிறது.

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism