Published:Updated:

திண்டிவனத்தில் நேரடி மோதல் ஆரம்பம்!

சீண்டும் அ.தி.மு.க.... திமிறும் பா.ம.க.

##~##
திண்டிவனத்தில் நேரடி மோதல் ஆரம்பம்!

மைச்சர் சி.வி.சண்முகத்தின் மீது நடந்த தாக்குதல் மற்றும் முருகானந்தம் கொலை ஆகியவற்றுக்கான சி.பி.ஐ. விசாரணை உச்சக்கட்டத்தை நெருங்கி இருக்கும் நேரத்தில், அ.தி.மு.க., பா.ம.க. தொண்டர்கள் முறுக்கேறி நிற்பதால் திகைத்து நிற்கிறது திண்டிவனம்! 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கடந்த 2006 மே 8-ம் தேதி, தமிழக சட்டமன்றத் தேர்தல் பரபரப்பாக நடந்தது. அன்று இரவு சி.வி.சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் திண்டிவனம் மொட்டையர் தெருவில் உள்ள அவரது வீட்டு முன் நின்று பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல் சி.வி.சண்முகத்தைக் கொலை வெறியோடு தாக்க முயல... அங்கு நின்ற கார் ஒன்றின் கீழே படுத்துத் தன்னைக் காத்துக்கொண்டார். அப்போது, அவரது உறவினரும் அ.தி.மு.க. தொண்டருமான முருகானந்தத்தை அந்தக் கும்பல் வெட்டிச் சாய்த்தது. இந்தக் கொலை சம்பந்தமாக டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், மருமகன் பரசுராமன், ராமதாஸின் தம்பி சீனுவாசன், பா.ம.க. வேட்பாளர் கருணாநிதி, பிரதீபன், ரகு உள்ளிட்ட பா.ம.க-வைச் சேர்ந்த 21 பேர் மீது ரோசனை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் சி.வி.சண்முகம்.

திண்டிவனத்தில் நேரடி மோதல் ஆரம்பம்!

அந்தச் சமயத்தில், முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட ரகு என்பவர் மர்மமான முறையில் இறந்து விட்டார். அதன்பிறகு இரண்டு முறை, 'சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்’ என்று சி.வி.சண் முகம், உயர் நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததன் காரணமாக, அந்த வழக்கு சில மாதங்களுக்கு முன் சி.பி.ஐ. கைக்கு மாறி யது.

அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், கூலிப்படையைச் சேர்ந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். சி.பி.ஐ-யின் அடுத்த கட்ட நடவடிக்கையாக மருத்துவர் ராமதாஸின் தம்பி சீனுவாசனும், பா.ம.க. மாநிலத் துணைத்தலைவர் கருணாநிதியும் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மார்ச் 2-ம் தேதி ராமதாஸின் உதவியாளர் நடராஜனிடமும், பேரன் பிரதீபனிடம் விசாரித்த சி.பி.ஐ. போலீஸார், 11, 12 ஆகிய தேதிகளில் ராமதாஸிடமும் விசாரணை நடத்தினர். மார்ச் 19-ம் தேதி குற்றவாளிகள் பயன்படுத்திய காரையும் உறுதி செய்திருந்தனர்.

இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன், தங்களது இடைக்கால அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பித்து விட்டு, தங்களது இறுதி விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய 90 நாட்கள் அவகாசம் கேட்டிருந்தது சி.பி.ஐ.

இந்த நேரத்தில் ராமதாஸின் அக்காள் மருமகனும் முன்னாள் எம்.பி-யுமான தன்ராஜ், வானூர் ஒன்றிய பா.ம.க-வின் முன்னாள் செயலாளரும் ராமதாஸின் மனைவி சரஸ்வதியின் அக்கா மகனுமான சிவக் குமாரையும் கைது செய்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தனர் சி.பி.ஐ. போலீஸார்.

திண்டிவனத்தில் நேரடி மோதல் ஆரம்பம்!

விசாரணை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்திருக்கும் இந்த வேளையில், கடந்த 8-ம் தேதி அ.தி.மு.க. - பா.ம.க. இடையே பலத்த மோதல் ஆரம்பம் ஆகியுள்ளது. ஏரியாவெங்கும் பதட்டம் நிலவவே, இரண்டு தரப் பினரும் போலீஸிடம் புகார் செய்தனர். இப்போது, திண்டி வனம் முழு வதும்

போலீஸ் பாது காப்பு போடப் பட்டு இருக் கிறது. அ.தி.மு.க- வினர் தரப்பில் பேசியபோது, ''எங்கள் அமைச் சரின் உறவினர் முருகானந்தம் கொலை வழக்கு சி.பி.ஐ. கைக்கு மாறியதும், அந்தக் கொலைக்குக் காரணமானவர்களை வரிசையாகக் கைது செய்தனர். பெரிய தலைகளும் அடுத்துக் கைதாகலாம் என்ற சூழ்நிலையில், பா.ம.க-வினருக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டு உள் ளது. இதை பொறுத்துக்கொள்ள முடியாமல்தான், எங்களிடம் வீணாக வம்பு செய்ய ஆரம்பித்துள்ளார்கள்.

கடந்த 4-ம் தேதி பா.ம.க. கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் என்ற பெயரில் கூட்டம் நடத்தியவர்கள், சம்பந்தமே இல்லாமல் எங்கள் அமைச்சர் பெயரைச் சொல்லி அசிங்கமான வார்த்தைகளில் விமர்சனம் செய்தனர். அதேபோன்று, கடந்த 8-ம் தேதி அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் இங்குள்ள மைதானம் ஒன்றில் மது அருந்துவதைப் பார்த்த பா.ம.க. நகரச் செயலாளர் ஜெயராஜ் கண்டித்திருக்கிறார். அதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதோடுவிடாமல், அ.தி.மு.க. பிரமுகரின் வீட்டில் நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கி உள்ளனர். உடனே, இதுகுறித்து போலீஸிடம் புகார் செய்தோம்.

இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் அன்று மாலை சென் னைக்குக் கிளம்பிக்கொண்டு இருந்த எங்கள் அமைச்சர் சி.வி.சண்முகத்தைப் பார்த்து சில பா.ம.க-வினர் கெட்ட வார்த்தைகளால் திட்டி இருக்கின்றனர். அதைக்கேட்டு காரில் இருந்து அமைச்சர் இறங்க, அவரது பாதுகாப்புப் படையினர் பா.ம.க-வினரைப் பிடிக்க ஓடியிருக்கின்றனர். ஆனால், அதற்குள் பா.ம.க-வினர் தப்பி விட்டனர். அந்தச் சமயத்தில் அமைச்சரின் கார் மீது  கல்வீசி விட்டதாகத் தக வல் பரவியது. இதனால், ஆத்திரம் அடைந்த நாங்கள் பா.ம.க. நகரச் செய லாளர் ஜெயராஜின் அலுவலகத்தை அடித்து நொறுக்கி விட்டோம். அவர்கள் எப்படித்தான் இடையூறு செய்தாலும் முருகானந்தம் கொலைக்குக் காரண மானவர்களைக் கைது செய்யாமல் விட மாட்டோம்'' என்றனர்.

பா.ம.க. மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் செந்தமிழ்ச்செல்வன், ''அ.தி.மு.க-வைச் சேர்ந்த தீபக் என்பவர் பள்ளிக்கூட மைதானத்தில் அமர்ந்து குடித்துக்கொண்டு இருந்தார். அதைப் பார்த்த எங்கள் நகரச் செயலாளர் ஜெயராஜ் கண்டித்தார். பள்ளி மைதானத்தில் குடிக்கக் கூடாது என்று கண்டிப்பதில் என்ன தவறு? இதற்காக அ.தி.மு.க-வினர் திரண்டு வந்து ஜெயராஜின் வீட்டை அடித்து நொறுக்குவது ஆளும் கட்சியினரின் அத்துமீறல் செயல். தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீஸில் புகார் கொடுத்து இருக்கிறோம்'' என்றார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய திண்டிவனம் டி.எஸ்.பி. குப்புசாமி, ''மோதல் குறித்து இரு தரப்பிலும் விசா ரித்து வருகிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பையும் அதிகப்படுத்தி இருக்கிறோம்'' என்றார்.

அரசியல் காழ்ப்புஉணர்ச்சி எங்கே கொண்டுபோய் நிறுத்துமோ?

- அற்புதராஜ்