Published:Updated:

எல்லை மீறும் கோவை பெண் நிர்வாகி யார்?

ஸ்டாலின் 'அப்செட்' விசிட்

##~##
எல்லை மீறும் கோவை பெண் நிர்வாகி யார்?

தெற்கே அண்ணனின் ஆளுகை என்பதால், சேலம் தவிர்த்த மேற்கு மண்டலத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார் ஸ்டாலின். ஆனால், சமீபத்தில் கோவை மற்றும் நீலகிரிக்கு சுற்றுப் பயணம் வந்த ஆ.ராசாவுக்கு வழங்கப்பட்ட அதீத வரவேற்பு ஸ்டாலினை யோசிக்க வைத்துவிட்டதாம். விளைவு..? கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தார் ஸ்டாலின்.   

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கடந்த 10-ம் தேதி காலையில் கோவைக்கு விமானத்தில் மனைவி துர்காவுடன் வந்த ஸ்டாலின், நேராகத் தாராபுரம் சென்றார். ஈரோடு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராக இருந்த சத்யா பழனிகுமார் மகளின் திருமணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்பதால், இந்த திடீர் விசிட்டும் வாழ்த்தும். சத்யா வீட்டில் ஒரு கப் காபி குடித்து விட்டு, மீண்டும் கோவை நோக்கிப் பயணித்தவர் லீ மெரிடியன் ஹோட்டலில் லஞ்ச் முடித்த பிறகு, முத்து விழா கொண்டாடும் கோவையின் முன்னாள் எம்.பி-யான இராமநாதனின் வீட்டுக்குச் சென்று அவரை

எல்லை மீறும் கோவை பெண் நிர்வாகி யார்?

வாழ்த்தினார். கூடவே, கோவை மாநகர தி.மு.க. அவைத்தலைவர் மெட்டல் மணியின் மனைவி இறந்ததற்கு ஆறுதலும், தலைமைச் செயற்குழு உறுப்பினர் மெட்டல் கண்ணப்பனின் அம்மா இறந்ததற்குத் தேறுதலும் சொல்லிவிட்டு இரவே சென்னைக்கு ஃப்ளைட் ஏறிவிட்டார்.

மேற்கு மண்டலத்தில் தனது செல்வாக்கை ஸ்திரப்படுத்திக் கொள்ளும் நோக்கில் வந்த ஸ்டாலின், அங்கே கட்சிக்குள் கோஷ்டிஅரசியல் தாண்டவமாடுவதைக் கண்டு நொந்து விட்டார். ஸ்டாலினை அப்செட் ஆக்கிய விவகாரங்களைப் பற்றி பேசும் தி.மு.க. சீனியர்கள், ''கோவை மாவட்டத்தில் பொங்கலூரார் டீம், வீரகோபால் டீம், பொன்முடி டீம், அருண்குமார் டீம், கண்ணப்பன் டீம், இராமநாதனின் தனி ஆவர்த்தனம் என்று கட்சி பீஸ் பீஸா பிளவுபட்டுக் கிடப்பது தெரிஞ்ச கதைதான். இந்தத் தடவை கோவை மாநகர அளவில் விசிட் வந்த தளபதியோட கண் முன்னாடியே இந்தப் பூசல் பெரிய அளவில் வெடிச்சது.

எல்லை மீறும் கோவை பெண் நிர்வாகி யார்?

தளபதிக்காக மாஜி அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, லீ மெரிடியன் ஹோட்டலில் முதலிலேயே ரூம் போட்டு வெச்சுட்டார். இந்த விவரம் தெரியாம தளபதி வழக்கமாத் தங்கும் தி ரெசிடென்ஸி ஹோட்டல் முன்னாடி வரவேற்பு பேனரை வெச்சுட்டுக் காத்திருந்தார் மாநகரச் செயலாளர் வீரகோபால். ஆனால், தளபதி அந்தப் பக்கம் போகாததால், வீரகோபால் செம அப்செட். தாராபுரம் போயிட்டு கோவை திரும்பியதும் மு.இராமநாதனோட வீட்டுக்கு மட்டும் போய் வாழ்த்து சொல்றதாகத்தான் தளபதியோட புரோகிராம் இருந்துச்சு. ஆனா ,இவ்வளவு பெரிய மாநகரத்தில் அவர் வீட்டுக்கு மட்டும் போனா... இராமநாதன் ஓவரா பந்தா பண்ணிப்பார்னு நினைச்ச பொங்கலூராரோட ஆளுங்க... இதுக்கு ஆப்பு வைக்க நினைச்சாங்க. அப்போதான் மெட்டல் மணி மற்றும் மெட்டல் கண்ணப்பன் வீட்டுல துக்கங்கள் நடந்தது நினைவுக்கு வந்திருக்கு. ஆக, இராமநாதன் வீட்டுக்கு வந்த கையோட இந்த ரெண்டு இடங்களுக்கும் தளபதி வந்துட்டார்னா நல்லாயிருக்குமேனு சொல்லியிருக்காங்க. இதைப் பொங்கலூரார் பக்குவமா தளபதிகிட்ட சொல்லவும்... அவரும் ரெண்டு வீடுகளுக்கும் வர்றேன்னு சொல்லிட்டார்.

இதோட கோஷ்டிச் சண்டை முடியலை. இராமநாதன் வீட்டில் இருந்து சில அடிகள் முன்னாடியே பொங்கலூராருடைய தீவிர ஆதரவாளரான ராஜேந்திர பிரபு மிகப்பெரிய பட்டாளத்தைத் திரட்டிட்டு வந்து நின்னுட்டார். இராமநாதன் வீட்டுக்குத் தளபதி போறதுக்கு முன்னாடியே அவரை அன்போட நிறுத்தி, பூரண கும்ப மரியாதை கொடுத்து அசத்திட்டார். தளபதி நகர்ந்ததும் இந்தக் கூட்டம் கலைஞ்சு போயிடுச்சே தவிர, இராமநாதன் வீட்டுப் பக்கம் வரவே இல்லை. இது போதாதுன்னு மெட்டல் மணியோட வீட்டுல பொங்கலூராரின் மொத்த ஆதரவாளர்களும் கும்பல் கும்பலாக குவிஞ்சு நின்னு தளபதியை எதிர்கொண்டு தங்களோட மெஜாரிட்டியைக் காண்பிச்சுட்டாங்க. தன் கண் முன்னாடியே இந்த பூசல்கள் எல்லாம் வெளிப்படையாத் தாண்டவமாடுறதை பார்த்து அப்செட்டான தளபதி, 'ஒத்துமையா கட்சி வேலையைப் பாருங்கய்யா’ என்று பொத்தாம் பொதுவாக அட்வைஸ் செய்திருக்கிறார்.

ஹோட்டலில் தளபதி ஓய்வெடுத்த நேரத்தில், சில புகார் பத்திரங்களும் வாசிக்கப்பட்டது. அதில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த எங்க கட்சி பெண் நிர்வாகி ஒருவர் கோவை மேயரும், அ.தி.மு.க. மாநகர் மாவட்டச் செயலாளருமான செ.ம.வேலுசாமி வரைக்கும் செல்வாக்கு வெச்சிருக்கிறதா ஒரு முக்கியப் புகார் போயிருக்குது. எதிர்க்கட்சி உறுப்பினராச்சேனு செ.ம.வேலுசாமி கண்டுக்காமத் தவிர்த்தாலும்கூட, இந்தம்மா ரொம்பவே நட்பு பாராட்ட முயற்சி பண்றதை ஆதாரத்தோட தளபதியிடம் போட்டுக் கொடுத்திருக்குது ஒரு டீம். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு ரொம்பவே டென்ஷனாகி இருக்கிறார் தளபதி. அநேகமா அந்தம்மா மேலே கூடிய சீக்கிரம் ஒழுங்கு நடவடிக்கை வரும்'' என்றார்கள்.

உடன்பிறப்புகளை உற்சாகப்படுத்துவதற்காக விசிட் செய்த ஸ்டாலின், கோஷ்டி பூசலைக் கண்டு நிலைகுலைந்து திரும்பியிருக் கிறார்!

- எஸ்.ஷக்தி,   ம.சபரி

படம்: வி.ராஜேஷ்