Published:Updated:

பரணி... பரணி... தாமிரபரணி!

மணல் மாஃபியாவிடம் இருந்து விடுதலை!

##~##
பரணி... பரணி... தாமிரபரணி!

தோழர் நல்லகண்ணுவின் வழக்குக்குப் பிறகு தாமிரபரணி ஆற்றுக்கு நல்ல காலம் பிறந்தது என்றுதான் சொல்ல வேண்டும்! 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மாணவர்கள், காவல் துறை ஆணையர், கலெக்டர் என்று பலரும் ஆற்றை ஆற்றுப்படுத்துவதில் தீவிரமாகி இருக்கிறார்கள். கடந்த வாரம் முதல் ஆற்றில் அத்துமீறிக் கட்டப்பட்ட வீடுகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையும் அரங்கேறி வருகிறது.

நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் தாமிரபரணி ஆறு, பொதிகை மலையில் உற்பத்தி ஆகிறது. பல்லாயிரம் ஹெக்டேர் பாசனத்துக்கு வாய்ப்பாக இருக்கும் இந்த ஆறு 120 கி.மீ. தூரம் பாய்ந்து சென்று, முடிவில் கடலில் கலக்கிறது. சமீப காலமாக ஆற்றைப் பராமரிப்பதில் யாரும் ஆர்வம் காட்டாததால், சாக்கடை, ஆயில் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைக் கூளங்கள் என சாக்கடையாக மாறிப்போய் இருந்தது.

கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு நடத்திய சட்டப் போராட்டத்தின் காரணமாக மணல் திருட்டு ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், சட்டத்தை ஏய்த்து இப்போதும் மணல் திருட்டு தொடர்கிறது.

பரணி... பரணி... தாமிரபரணி!

இதுபற்றி தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் ஜோசப் கென்னடி, செயலாளர் அய்.கோபால்சாமி ஆகியோர், ''நமது மாநிலத்தில் உருவாகி நமது மாநிலத்துக்கு உள்ளேயே முடிவடையும் ஒரே ஆறு தாமிரபரணி. பக்கத்து மாநிலங்களில் உற்பத்தியாகும் ஆறுகளில் இருந்து தண்ணீரைப் பெறுவதற்காக ஒருபக்கம் போராடுகிறோம். ஆனால் நம்மிடம் இருக்கும் இந்த வற்றாத ஜீவநதியை அழிப்பதற்காக மணல் மாஃபியாக்கள் செய்துவரும் அடாவடிகளை சத்தம் இல்லா மல் வேடிக்கை பார்க்கிறோம்.

பரணி... பரணி... தாமிரபரணி!

இதே நிலைமை தொடர்ந்தால், அடுத்த சந்ததியினருக்கு நாம் தாமிரபரணி என்கிற ஆற்றுக்குப் பதில் கழிவுநீர் சாக்கடை ஓடை யைத்தான் விட்டுச்செல்ல வேண்டி இருக்கும். வழிநெடுகிலும் மணலில் இயற்கையாக வடிகட்டப்பட்டு, சுத்தமாக ஓட வேண்டிய இந்த ஆறு சீரழிந்துவிட்டது.

அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப் பட்டதால் ஆற்றில் ஆங்காங்கே ஆழம் அதிகரித்து குளிக்கச் செல்லும் அப்பாவிகள் பலர் உயிர் இழக்கும் நிலைமையும் உருவாகி இருக்கிறது. ஆற்றை ஆக்கிரமித்து ஏராளமான செங்கல் சூளைகளும் அனுமதி இல்லாமல் செயல் பட்டு வருகின்றன. ஆற்றின் ஓரத்தில் நிறைய வீடுகள் கட்டப்பட்டுவிட்டன. இதை எல்லாம் தடுக்க வேண்டிய அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதுதான் வேதனை.

மணல் திருடர்களால் சில தடுப்பு அணைகள் ஆட்டம் கண்டுவிட்டன. குடிநீருக்காகத் தோண்டப் பட்ட உறை கிணறுகளைச் சுற்றி மணல் அள்ளப் பட்டதால், அவற்றில் பல தகர்ந்துவிட்டன. நெல்லை மாநகரப் பகுதியில், ஆற்றின் ஓரத்தில் இருந்த மணல் திட்டுக்கள் காணாமல்போயின. 30 வருடங்களுக்கு முன்பு வரை ஆற்றோரத்தில்தான் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. பல தலைவர்கள் பேசிய இடம் இப்போது குப்பைத் தொட்டி யாக மாறிவிட்டது. ஆற்றின் ஓரமாக வசிக்கும் கிராம மக்களைச் சந்தித்த எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஆற்றில் கழிவுகளைக் கலக்காமல் பாதுகாப்பது எப்படி என்பதுகுறித்து விழிப்பு உணர்வுப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த இயக்கத்தில் பல அமைப்புகள் இணைந்து செயலாற்றி வருகின்றன'' என்றனர்.

பரணி... பரணி... தாமிரபரணி!

மக்களிடம் ஏற்பட்ட இந்த மாற்றத்தைக் கண்ட பொதுப் பணித் துறையினரும் வருவாய் துறையினரும் அதிரடியாக களம் இறங்கி கரை யோரத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டு இருந்து 500-க்கும் அதிகமான வீடுகளை புல்டோசர் மூலம் இடித்துத் தரைமட்டம் ஆக்கினர்.

இதற்கு முன்னர் சில முறை அதிகாரிகள் புல்டோசருடன் சென்றபோது மக்கள் முற்றுகை இட்டதால் பணிகளைச் செய்ய முடியாமல் திரும்ப வேண்டியதானது. ஆனால் இப்போது ஆக்கிரமிப்பை அகற்றும்படி மக்களே வலியுறுத்தி யதால், ஆக்கிரமிப்பாளர்கள் அமைதியாக ஒதுங்கிக் கொண்டதைக் கண்டு அதிகாரிகள் ஆச்சர்யப் பட்டனர்.

சிக்கலே வராவிட்டால் எப்படி?

அ.தி.மு.க-வை சேர்ந்த மேயரிடம் சென்று ஆக்கிரமிப்பாளர்கள் முறையிட, மேயர் விஜிலா சத்யானந்த், துணை மேயர் கணேசன் ஆகியோர் நெல்லை மாவட்ட ஆட்சியர் செல்வராஜைச் சந்தித்து, ஆக்கிரமிப்பு வீடுகளை இடிப்பதை உடனே தடுத்து நிறுத்துங்கள்’ என்று குறுக்கிட்டனர்.  ஆனால், கலெக்டர் செல்வராஜ் திட்டமிட்டபடி ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டதோடு, கூடுதல் போலீஸாரையும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தி எந்த அசம்பாவிதமும் இல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றி இருக்கிறார்.

நெல்லையில் தொடங்கிய இந்த சிறு நெருப்பு, தமிழகம் முழுவதும் பெருநெருப்பாக பற்றி எரிந்து நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களைச் சுட்டு எரித்தால் நல்லது.

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்