Published:Updated:

போலீஸை ஏமாற்றிய போலி போலீஸ்!

வேலூர் வில்லங்கம்

பிரீமியம் ஸ்டோரி
##~##
போலீஸை ஏமாற்றிய போலி போலீஸ்!

ரோகிணி... வேலூர் காவல் துறை யினர் அதிகம் உச்சரிக்கும் பெயர். 'நான் ஏமாந் தேன்... நீயுமா?’ என்ற ரீதியில் ஒருவரை ஒருவர் துக்கம் விசாரிக்கிறார்கள்.  போலீஸாக நடித்து மோசடி செய்த காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டு இருக்கும் ரோகிணி யார்? 

''தயவுசெஞ்சு அந்தப் பொண்ணை எங்க சொந்தம்னு சொல்லாதீங்க. எங்க குடும்பத்தையே தலைகுனிய வச்சுட்டா. சின்ன வயசுல இருந்தே அவ நடவடிக்கை சரியில்லீங்க. வீட்டுல அவளுக்கு அதிகமா செல்லம் கொடுத்துட்டாங்க. பக்கத்தில் இருக்கிற கவர்மென்ட் ஸ்கூல்லதான் படிச்சா. அவளுக்கு ஒரே அண்ணன். அந்தப் பையன் ரொம்பத் தங்கமானவன். ஆனா இந்தப் பொண்ணு, எப்பவும் யார் பேச்சையும் கேட்காம அடங்காமத்தான் திரியும். எட்டாவ துக்கு மேல படிக்க மாட்டேன்னு சொல்லிட்டா. அதுக்கப்புறம் கெட்ட சகவாசம் அதிகமாச்சு. பணம் மட்டுமே வாழ்க்கைனு இருந்தா. நாங்களும் எவ் வளவோ சொல்லிப் பார்த்தோம். அவ கேட்கலை. எட்டு வருஷத்துக்கு முன்னால ஒருநாள் திடீர்னு வீட்டை விட்டுப் போயிட்டா. அதுக்கு அப்புறம் ரோகிணியைத் தேடிப் பார்த்தோம். கண்டுபிடிக்க முடியலை.

போலீஸை ஏமாற்றிய போலி போலீஸ்!

அவங்க அம்மா இறந்த பிறகு வந்தா. பக்கத்தில் இருக்கிற தொரப்பாடியில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தா. ஒரு பொண்ணு என்னல்லாம் செய்யக் கூடாதோ, அதை எல்லாம் செஞ்சா. அதனால அப்பவே நாங்க அவளைத் தலை முழுகிட்டோம். அதுக்கப்புறம் அவ எங்கே போனா... என்ன ஆனான்னு தெரியாது. இப்போதான், அவளை கைது பண்ணியிருக்காங்கன்னு பேப்பரைப் பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டோம். இதுக்கு மேல எங்களுக்கு எதுவும் தெரியாதுங்க'' என்று நழுவினார்கள் உறவினர்கள்.

ரோகிணியைக் கைது செய்து விசாரித்து வரும் பாகாயம் எஸ்.ஐ. தீபாவிடம் பேசினோம். ''காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கடந்த 11-ம் தேதி வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் ரோகிணி என்பவரைப் பற்றி ஒரு புகார் கொடுத்தார். போலீஸ் யூனிஃபார்முடன் சென்னை கடற்கரையில் அவருக்கு அறிமுகமாகி இருக்கிறார் ரோகிணி.  அவரிடம், 'நான் ஆயுதப்படைப் பிரிவில் வேலை பார்க்கிறேன்’ என்று சொல்லி நம்பவைத்து இருக்கிறார். இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமாகி இருக்கிறது. போலீஸில் வேலை வாங்கித் தர முடியும் என்று ரோகிணி நம்பிக்கை தர, அதை நம்பி 25 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்திருக்கிறார் வெங்கடேசன். ஒரு கட்டத்தில் வேலை கிடைக்கவில்லை என்றதும் பணத்தைக் திருப்பிக் கேட்டிருக்கிறார். பணமும் கிடைக்கவில்லை என்றதும் போலீஸில் புகார் கொடுத்து விட்டார்.

அப்போதுகூட வெங்கடேசனுக்கு ரோகிணியைப் பற்றிய உண்மை தெரியவில்லை. அதனால்தான், தன்னை ஒரு பெண் போலீஸ் ஏமாற்றி விட்டதாகப் புகார் கொடுத்து இருந்தார். நாங்கள் ரோகிணியைப்

போலீஸை ஏமாற்றிய போலி போலீஸ்!

பிடித்து விசாரித்த பிறகுதான், இரண்டு வருடங்களுக்கும் மேலாக போலீஸாக நடித்ததை ஒப்புக்கொண்டார். போலீஸ் வேடம் போட்டு வேறு யாரிடம் எல்லாம் பணம் மோசடி செய்திருக்கிறார் என்று விசாரித்து வருகிறோம்''  என்றார்.

வேலூர் எஸ்.பி. அலுவலக வட்டாரத்தில் விசாரித்தோம். ''இதுவரை எட்டு பேர் ரோகிணி மீது புகார் கொடுத்து இருக்கிறார்கள். வேலூரைச் சேர்ந்த உண் மையான போலீஸ்காரர்கள் சிலரே, பணம் கொடுத்து ஏமாந்து இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் புகார் கொடுப்பது சந் தேகம்தான். வேலை வாங்கித் தரு கிறேன், டிரான்ஸ்ஃபர் செய்து தருகிறேன் என்று சொல்லி காவல் துறை உயர்அதிகாரிகள் பெயரைச் சொல்லி பணமோசடி செய்து இருக்கிறார். இரண்டு வருடங்களாக வேலூரில் போலீஸ் யூனிஃபார்மில் சுற்றி இருக்கிறார். பல உயர் அதிகாரிகளையும் ஏமாற்றி இருக்கிறார். வேலூர் புது பஸ் ஸ்டாண்ட் அருகே இருக்கும் லாட்ஜ்களில் மாதக்கணக்கில் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கி இருந்தார், ஆனால் எங்கேயும் வாடகை கொடுக்கவில்லை. போலீஸிடம் எப்படி வாடகை கேட்பது என்று ஏமாந்து இருக்கிறார்கள். வெங்கடேசன் மட்டும் புகார் கொடுக்கவில்லை என்றால், நிச்சயம் அவரைப் பிடித்திருக்கவே முடியாது'' என்று பெரு மூச்சு விட்டனர்.

போலீஸாரை மட்டு மின்றி சில அரசியல் புள்ளிகளையும் ரோகிணி ஏமாற்றியதாகத் தகவல் வந்திருக்கிறதாம். ஆனால், விஷயம் வெளியே தெரிந் தால் பெயர் கெட்டுவிடும் என்று அவர்கள் அமைதி காக்கிறார்களாம்.

இரண்டு வருடங்களாக தங்கள் மத்தியில் ஒரு போலி போலீஸ் உலவு வதைக்கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்குப் பிஸியாக இருந்திருக்கிறது வேலூர் போலீஸ். கண்டு பிடித்தது ஒன்று இரண்டுதான். இன்னும் எத்தனை இருக்கோ?

போலீஸை ஏமாற்றிய போலி போலீஸ்!

- கே.ஏ.சசிகுமார்

படங்கள்: ச.வெங்கடேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு