Published:Updated:

''கொடிகட்டிப் பறக்குது குழந்தை பிச்சைத் தொழில்!''

முதல்வர் தொகுதி பகீர்

பிரீமியம் ஸ்டோரி
##~##
''கொடிகட்டிப் பறக்குது குழந்தை பிச்சைத் தொழில்!''

ஸ்ரீரங்கம் - தமிழகத்தின் நம்பர் ஒன் தொகுதி. அதாங்க... முதல்வரின் தொகுதி. ஆனால், அங்கு பார்க்கும் காட்சிகள்... 

ஸ்ரீரங்கம், திருச்சி ஜங்ஷன், பேருந்து நிலையம் என மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் எல்லாம் இப்போது நிறைய சிறுவர்கள் பிச்சை கேட்டு மொய்க்கத் தொடங்கி உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோ£ர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். திடீரென இவர்கள் எப்படி இங்கு வந்தனர்?

குழந்தைகள் உதவி மையத்தின் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆல்பர்ட், ''இங்கே நம் ஏரியா சிறுவர்களைவிட, வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகமாகப் பிச்சை எடுக் கிறாங்க. இந்தக் குழந்தைகள் பெரும்பாலும் அஸ்ஸாம், பீகார், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து வர்றாங்க. இதுக்காகவே நம் ஊரில் ஏஜென்ட் கள் இருக்காங்க. ஏழ்மையில் கஷ்டப்படும் வீட்டுக் குழந்தைகளைக் கூட்டி வந்து, இங்கே பிச்சை எடுக்கவிட்டு சம்பாதிக்கிறாங்க. அவங்க குடும்பத்துக்கு வருஷத் துக்கு நாலாயிரமோ அஞ்சாயிரமோ தர்றாங்க. இப்படி பசங்களைக் கூட்டி வந்து பிச்சை எடுக்கக் கூடாதுனு அறிவுரை சொல்லி, பலரை ஊருக்கு ரயில் ஏத்தி அனுப்பி இருக்கிறோம். ஆனால், திரும்பவும் இங்கேயே வந்துடுறாங்க. கொஞ்ச நாளைக்கு முன்னால ஒரு ஏஜென்ட்டைப் பிடிச்சு ரிமாண்ட் செய்தாங்க. ஆனாலும் எதுவும் மாறலை. பசங்ககிட்டேயும் எவ்வளவோ பேசியாச்சு. திருச்சி இல்லைன்னா... வேற ஏரியாவில் போய் பிச்சை எடுப்போம்னு சொல்றாங்க'' என்றார் கவலையுடன்.

''கொடிகட்டிப் பறக்குது குழந்தை பிச்சைத் தொழில்!''
''கொடிகட்டிப் பறக்குது குழந்தை பிச்சைத் தொழில்!''

வடநாட்டுச் சிறுவர்களிடம் யாராவது எதையாவது கேட்க முற்பட்டால்... தமிழ் தெரியாததைப் பயன்படுத்தி நழுவி விடுகிறார்கள். இவர்கள் ஒரு ரகம் என்றால், நம்ம ஊர்க்குழந்தைகள் பிச்சை எடுப்பது ஏன் என்பது அதைவிட அதிர்ச்சியான விஷயம். அதையும் ஆல்பர்ட்டே சொல்கிறார்.

''திருச்சியில் நாகமங்கலம் பக்கத்தில் இருக்கும் காந்தி நகரில்  10 வயது வரையிலான குழந்தைகளைப் பிச்சை எடுக்க பயன்படுத்துறாங்க. இதை ஒரு தொழிலாவே செய்றாங்க. கைக்குழந்தைகளுக்கு சில பேர் மயக்க மருந்து கொடுத்து, பிச்சை எடுக்கும் கொடுமையும் நடக்குது.  அப்பத்தான் அந்தக் குழந்தை அடிக்கடி அழுது தொல்லை கொடுக்காமல் இருக்கும். அது தவிர பிச்சை எடுக்கிறதுக்காக குழந்தைகளை வாடகைக்கு விடும் கொடுமையும் நடக்குது'' என்றார்.

நாகமங்கலம் ஏரியா முதல்வரின் ஸ்ரீரங்கம் தொகுதியில்தான் இருக்கிறது. குறி சொல்வதும் குடுகுடுப்பை அடிப்பதும்தான்

''கொடிகட்டிப் பறக்குது குழந்தை பிச்சைத் தொழில்!''

இந்த ஏரியாவில் இருக்கும் பெரும்பாலான ஆண்களுக்குத் தொழில். இப்போதெல்லாம் உள்ளூரில் தொழில் அவ்வளவாக இல்லை. அதனால், தொழிலுக்காக மாதக்கணக்கில் வெளியூர் சென்றுவிடுகிறார்கள். ஆக, குடும்பப் பொறுப்பு மொத்தமும் பெண்கள் கையில்தான். பெண்கள்தான் வேறு வழி இல்லாமல் இந்த மாதிரியான தவறான காரியங்களை முன்னெடுத்துச் செய்கிறார்களாம்.

சீர்திருத்த முயற்சிகள் ஏதும் நடக்கிறதா என்று கேட்டால், ''மாதாமாதம் அரசு சார்பாகக் கூட்டம் நடத்துகிறோம். ஊர்த் தலைவர்கள், பெண்கள், ஏரியா போலீஸ் எல்லாம் கூடிப்பேசுகிறோம். பிச்சை எடுப்பதை தொழில் மாதிரி செய்தால், குழந்தைகளை சிறையில் அடைத்து விடுவோம் என்று மிரட்டினோம். அதையும் மீறி செய்கிறார்கள்.

பெற்றோர் உள்ள குழந்தைகளைக் காப்பகத்தில்  வளர்க்க சட்டத்தில் இடம் இல்லை. அந்த ஏரியாவுக்கு அரசு சார்பா ஒரு பள்ளிக்கூடம் கட்டிக்கொடுத்து, எல்லா குழந்தைகளும் பள்ளிக்கூடம் போகணும்னு சொல்லியாச்சு. இன்னும் முயற்சி எடுத்துட்டுத்தான் இருக்கோம்'' என்கிறார் ஆல்பர்ட்.

நாகமங்கலம் குழந்தைகள் அதிக மாக இருக்கும் மத்தியப் பேருந்து நிலையம் பக்கம் சென்றோம். போகிற வருகிறவர்களிடம் காலில் விழுவது, சட்டையைப் பிடித்து இழுப்பது, சிக்னலில் குறுக்கே நிற்பது என்று விறுவிறுப்புடன் நடக்கிறது பிசினஸ். 'ஸ்கூலுக்கு ஃபீஸ் கட்டப் பணம் இல்லை’, 'அப்பா இல்லை’, 'அம்மாவுக்கு உடம்பு சரியில்லை’ என வித விதமாகக் காரணம் சொல்பவர்கள், கேமராவைக் கண்டதும் தலை தெறிக்க ஓடுகிறார்கள்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் பிச்சை எடுக்கும் வடநாட்டுக் குழந்தைகள் ஒரு படி மேலே சென்று, நோட்டீஸ் கொடுத்து பிச்சை எடுக்கிறார்கள். 'எங்கள் ஊர் குஜராத். அங்கே பூகம்பம் ஏற்பட்டதால் வீடு, நிலம் எல்லாவற்றையும் இழந்துவிட்டு குடும்பத்தோடு இங்கே வந்துவிட்டோம். தங்களால் இயன்றதைத் தந்து உதவுங்கள்’ என்பதே அந்த நோட்டீஸின்கோரிக்கை.

இவை அனைத்தையும் அப்படியே மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயஸ்ரீ முரளிதரன் கவனத்துக்குக் கொண்டு சென்றோம்.  ''தகவலுக்கு நன்றி. விரைவில் நடவடிக்கை எடுத்துவிட்டு, உங்களுக்குத் தகவல் தருகிறேன்'' என்று சொன்னார்.

அப்படியே நடக்கட்டும்!

- ஆ.அலெக்ஸ் பாண்டியன்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு