Published:Updated:

திருச்சி மேடையில் நீயா... நானா?

முட்டி மோதிய எம்.பி-க்கள்

பிரீமியம் ஸ்டோரி
##~##
திருச்சி மேடையில் நீயா... நானா?

க்களுக்குச் சேவை செய்வதில்தான் போட்டி இருக்க வேண்டும். ஆனால், பெயர் வாங்குவதற்கான போட்டி திருச்சியில் நடந்து கொண்டு இருக்கிறது!

 திருச்சியில் கடந்த 14-ம் தேதி நடந்த திருச்சி - திருநெல்வேலி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலின் தொடக்க விழா,  அரசியல் மோதலையும் கிளப்பி விட்டது. தமிழக அமைச்சர் சிவபதி, தொகுதி எம்.பி-யான குமார், எம்.எல்.ஏ-வான பரஞ்ஜோதி, மேயர் ஜெயா போன்ற அ.தி.மு.க-வினர் கலந்து கொண்ட இந்த விழாவில், தி.மு.க-வைச் சேர்ந்த  ராஜ்யசபா எம்.பி. சிவாவும் கலந்து கொள்ளவே, படபட பட்டாசாகி விட்டது விழா.

முதல்நாள் இரவே தி.மு.க-வினர், 'பெரும் பாடுபட்டு இந்தத் திட்டத்தை திருச்சிக்குக் கொண்டுவந்த திருச்சி சிவா அவர்களுக்கு நன்றி!’ என்று ஏரியா முழுக்க போஸ்டர் ஒட்டிவிட, விழாவுக்கு வந்த அ.தி.மு.க-வினர் ஏகத்துக்கும் அப்செட்.

திருச்சி மேடையில் நீயா... நானா?

அ.தி.மு.க-வினர் நிரம்பிய மேடையில் தனிஆளாக மேடை ஏறி, கடைசி வரை புன்னகை முகத்துடன் உட்கார்ந்து இருந்தார் திருச்சி சிவா. அ.தி.மு.க-வினர் மாற்றி மாற்றி மத்திய அரசையும், முந்தைய தி.மு.க. அரசையும் குறை சொல்லியும் கண்டு கொள்ளாமல் இருந்தார். அதனால், விழா முடியும் வரை... மேடையில் 'புகை’ மயம்தான். எப்படியோ எந்தப் பிரச் னையும் இல்லாமல் விழா நடந்து முடிந்த பிறகுதான்... ரயில்வே நிர்வாகத்துக்கு நிம்மதி ஏற்பட்டது.

திருச்சி மேடையில் நீயா... நானா?

மேடையில் கொந்தளித்த எம்.பி. குமாரிடம் பேசினோம் 'இந்தத் திட்டத்துக்காக நாடாளு மன்றத்தில் நான் 12 முறை பேசி இருக்கேன். தொடர்ந்து, மூன்று பட்ஜெட் தொடரிலும் வலியு றுத்தி இருக்கேன். எல்லாத்துக்கும் ஆதாரம் இருக்கு, திருச்சி பிரச்னைக்காக மட்டும் இல்லைங்க, விழுப்புரம் - திண்டுக்கல், திருச்சி - பெங்களூரு திட்டங்களையும் தொடர்ந்து வலியுறுத்திட்டு இருக்கேன். மத்திய அரசு தென் மாநிலங்களைக் கண்டுக்கிறதே இல்லை. இப்படிப்பட்ட திட்டங்களைக் கஷ்டப்பட்டு கொண்டுவர்றது நாங்க. ஆனா, இவர் திடீர்னு 'நான்தான் கொண்டுவந்தேன்’னு போஸ்டர் ஒட்டுறார். இதை மக்கள் நம்பவே மாட்டாங்க'' என்றார் வேகமாக.

இதுகுறித்துப் பேசும் திருச்சி சிவா, ''கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய ரயில்வே அமைச்சரிடம் பேசி கடிதம் கொடுத்திருக்கேன். அதன் அடிப்படையில்தான் இந்தத் திட்டம் வந்து உள்ளது. இது நான் கொண்டுவந்த திட்டம்தான். அதனால் எனக்கு உரிமை கொண்டாட முழுத் தகுதியும் இருக்கிறது. மக்களுக்கான திட்டத்தை அறிவிக்கும் விழா மேடையில் எதுக்காக அரசியல் பேசணும்? நான் திட்டத்தைப்பத்தி மட்டும்தான் பேசினேன். அவங்களோ, 'மாநில அரசின் கோரிக் கைகளை மத்திய அரசு நிராகரிக்கிறது’னு சொல் றாங்க. பிறகு எப்படி இந்தத் திட்டத்தை மட்டும் கேட்டு வாங்கினாங்களாம்? இப்போ நான்தான், திருச்சி - பெங்களூரு ரயிலுக்காகவும் பேசிட்டு இருக் கேன். அது வந்ததும், அதையும் அவங்கதான் கொண்டு வந்ததா சொல்வாங்க பாருங்க'' என்கிறார் காரமாக.

ஆஹா... அடுத்த சிக்கலுக்கு இப்பவே ரிசர் வேஷனா?

- ஆ.அலெக்ஸ் பாண்டியன்

படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு