Published:Updated:

முதல்வரின் வாக்குறுதியை முடக்கும் அ.தி.மு.க.!

தூத்துக்குடி நெருக்கடி

பிரீமியம் ஸ்டோரி
##~##
முதல்வரின் வாக்குறுதியை முடக்கும் அ.தி.மு.க.!

'தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறு தியை நிறைவேற்ற வேண்டும்’ என்றுதான் போராட்டம் நடக்கும். ஆனால், தூத்துக்குடியிலோ, 'வாக்குறுதியை நிறை வேற்ற வேண்டாம்’ என்று அ.தி.மு.க-வினரும் தி.மு.க-வும் இணைந்து செயலாற்றுகிறார்கள். இவர்களுக்கு எதிர்க் குரல் கொடுக்கிறது காங்கிரஸ். 

என்னதான் நடக்கிறது தூத்துக்குடி யில்?

கடந்த சட்டமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களின்போது பிரசாரத்துக்கு வந்த ஜெயலலிதா, 'தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்போம்’ என்று வாக்குறுதி அளித்தார். வெற்றி பெற்றதும் அதற்கான திட்ட வேலைகளைத் துரிதப்படுத்தவும் உத்தரவு போட்டார். அதன்படி கடந்த டிசம்பர் மாதம் மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. உடனே பைபாஸ் சாலையில் பேருந்து நிலையத்துக்கான இடத்தை கலெக்டர் தேர்வு செய்தார். ஆனால் பல மாதங்கள் ஆன பிறகும் அந்த வேலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

முதல்வரின் வாக்குறுதியை முடக்கும் அ.தி.மு.க.!

இந்த நிலையில் கடந்த மாதம் 29-ம் தேதி நடந்த மாநகராட்சிக் கூட்டத்தில் 'இரண்டு பேருந்து நிலையங்கள் இருக்கின்றன. மூன்றாவதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் தேவை இல்லை’ என்று தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே கொந்தளிக்க வேண்டிய அ.தி.மு.க. கவுன்சிலர்கள்... மௌனமே சம்மதம் என்று அமைதி காத்ததுதான் ஆச்சர்யம். அதனால் மேயர், 'கவுன்சிலர்களின் எண்ணம் அரசுக்குத் தெரிவிக்கப்படும்’ என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து கலெக்டரும், 'மாநகராட்சி எடுக்கும் முடிவுதான் இறுதியானது’ என்று கருத்து தெரிவித்தார். அதனால், இப்போது ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அம் புட்டுத்தான் என்பதுதான் நிலைமை.

முதல்வரின் வாக்குறுதியை முடக்கும் அ.தி.மு.க.!

ஒருங்கிணைந்த பஸ் நிலையம் வேண்டாம் என்று போராடும் பழைய பஸ் ஸ்டாண்ட் வியாபாரிகள் சங்கத் தலைவர் அன்னராஜனிடம் பேசி னோம். ''நகரம்னு இருந்தா நெருக்கடி இருக்கத்தான் செய்யும்.  ரோட்ல போற நாலு டூ வீலரைப் பார்த்து நெருக்கடினு சொல்றாங்க. நகருக்கு வெளியில் பஸ் ஸ்டாண்ட் போனால், பிறகு ஒன்றிரண்டு டவுன் பஸ்களை மட்டும்தான் விடுவாங்க. மக்களுக்குச் சிக்கல். எங்களுக்கும் வியாபாரம் பாதிக்கும். அதுக்குப் பதிலா இப்போ பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் இருக்கும் பஸ் டெப்போவை எடுத்துட்டு, அந்த பஸ் ஸ்டாண்டையே விரிவுபடுத்தலாம். இந்தக் கோரிக்கையை மேயர் சசிகலா புஷ்பாவிடம் வெச் சிருக்கோம். அவங்களும் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியனும் ஏத்துக் கிட்டாங்க. ஆனா, மேலிடத்தில் தெரிவிக்க முடியலை. முதல்வர் வாக் குறுதி கொடுத்த திட்டம் என்பதால் பயப்படுறாங்க. அதனால்தான், நாங்க மக்களிடம் கையெழுத்து வாங்கி மனுக்களை முதல்வருக்கு அனுப்பி வருகிறோம்'' என்றார்.

முதல்வரின் வாக்குறுதியை முடக்கும் அ.தி.மு.க.!

'ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் வேண்டும்’ என்று கலெக்ட ருக்கும் முதல் அமைச்சருக்கும் கோரிக்கை வைக்கும் நகர காங்கிரஸ் கட்சியின் தலைவர் முரளிதரன், ''பஸ் ஸ்டாண்ட் புது

முதல்வரின் வாக்குறுதியை முடக்கும் அ.தி.மு.க.!

இடத்துக்கு மாறினால் தொழில் பாதிக்கும் என்ற பயத்தில்தான், அந்தத் திட்டத்தைக் கெடுக்கப் பார்க்கிறாங்க. நகரின் வெளிப் பகுதியில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமையும்போது, போக்குவரத்து நெருக்கடி தவிர்க்கப்படும். நகரமும் வேகமாக வளரும். தூத்துக்குடி நகருக்குள் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்குத் தகுந்த இடம் இல்லை. பஸ் டெப்போவை எடுத்துட்டு விரிவு செய்தாலும் போதாது.

தூத்துக்குடியில் வாழும் பல லட்சம் மக்களின் நலனை சில

முதல்வரின் வாக்குறுதியை முடக்கும் அ.தி.மு.க.!

வியாபாரிகள் எப்படி நிர்ணயம் பண்ண முடியும்? அவங்க சுயநலத்துக்காக ஒட்டு மொத்த மக்களும் காலம்காலமாத் துன்பத்தை அனுபவிக்கணுமா? புது பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் தி.மு.க. மாவட்டச் செயலாளர் பெரியசாமிக்குக் கடைகள் இருக்கின்றன. அது பாதிக்கப்படும் என்ற அச்சத்தில்தான், அந்தக் கட்சிக்காரங்க எதிர்க் கிறாங்க. அ.தி.மு.க-காரங்களும் அவர்களுடன் 'கூட்டு’ சேர்ந்துகொண்டு திட்டத்தை முடக்கப் பார்ப்பதுதான் வேதனை'' என்றார் சூடாக.

வியாபாரிகளோடு மேயரிடம் மனு கொடுக்கச் சென்ற அ.தி.மு.க-வின் முன்னாள் மாவட்டச் செயலாளரான ஹென்றியிடம் பேசினோம். ''ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் வேணும். ஆனா அது சிட்டிக்கு உள்ளேயே இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கத்தான் நானும் போனேன். வேண்டாம்னு சொல்வதற்கு இல்லை'' என்றார்.

மேயர் சசிகலாபுஷ்பா, ''சிட்டிக்குள் இருக்கணும்னு சிலரும் வெளியே கொண்டு போகணும்னு சிலரும் கோரிக்கை வைக்கிறாங்க. ஏதாவது ஒரு இடத்தில் நிச்சயமா ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் வரும். நிதிக்காகத்தான் வெயிட்டிங். மற்றபடி அவங்க சொல்றதுபோல வியாபாரிகளுக்கோ, தி.மு.க-வின் கோரிக்கைக்காகவோ நாங்க தாமதம் பண்ணலை'' என்றார்.

கலெக்டர் ஆஷிஷ் குமார், ''தூத்துக்குடி நகருக்குள் ஒருங் கிணைந்த பஸ் நிலையம் அமைக்க பைபாஸ் ரோட்டில்தான் இடம் இருக்கிறது. அதில் 17 ஏக்கரைக் கொடுக்கலாம். மாநக ராட்சி நிர்வாகம் கேட்டால், அதற்கான வேலைகளை உடனே முடித்துக் கொடுக்க மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்கிறது'' என்றார்.

மக்களுக்கு எது தேவை என்பதை யார்தான் பார்ப் பார்களோ?

- எஸ்.சரவணப்பெருமாள், படங்கள்: ஏ.சிதம்பரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு