கோயில் சிலைகளைக் கடத்தி வெளிநாட்டில் விற்று காசு பார்க்கும் சுபாஷ் கபூர் கைது செய்யப்படவே... இந்துப் பெருமக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். ஆனால், மீண்டும் சிலை திருட்டு தொடரவே... அதிர்ந்து நிற்கிறார்கள்.

கடந்த 2008-ம் ஆண்டு அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான், சுத்தமல்லி சிவன் கோயில்களில் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 26 ஐம்பொன் சிலைகள் காணாமல் போயின. இந்த வழக்கில்தான், சுபாஷ் கபூரை வெளிநாட்டில் இருந்து கைது செய்து கொண்டுவந்துள்ளது போலீஸ்.

கபூர் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்துப் பேசினார் ஓரு போலீஸ் அதிகாரி, ''முதலில் ஸ்ரீபுரந்தானைச் சேர்ந்த ரத்தினத்தை சந்தேகத்தின் பேரில் கைது செய்தோம். அவரை விசாரித்தபோது, விருதுநகரைச் சேர்ந்த பார்த்திபன், மதுரையைச் சேர்ந்த ஸ்ரீராம், விழுப்புரத்தைச் சேர்ந்த மாரிச்சாமி, ராஜபாளையத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் பிச்சுமணி ஆகியோருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அந்த நான்கு பேரையும் கைது செய்து விசாரித்ததில், புதுச்சேரியைச் சேர்ந்த சஞ்சீவி அசோகன் மூலம், திருடப்பட்ட சிலைகள் அனைத்தும் ஹாங்காங் வழியாக அமெரிக்காவுக்குப் போனது தெரியவந்தது. கேரளாவில் பதுங்கி இருந்த சஞ்சீவியைக் கைது செய்து விசாரித்தோம்.

சஞ்சீவி அசோகனுக்கு, அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் 'ஆர்ட் ஆஃப் பார்ட்’ எனும் கேலரியை வைத்திருக்கும் பஞ்சாப்பைச் சேர்ந்த சுபாஷ் சந்திரகபூர் என்பவர் ஆன்லைன் மூலம் 1.30 லட்சம் ரூபாய் டிரான்ஸ்ஃபர் செய்திருப்பதைக் கண்டுபிடித்தோம். கடத்தப்பட்ட பழைய சிலைகளைப் பொற்கொல்லர் பிச்சுமணி மூலம் புதிது போல மெருகேற்றி, போலி ரசீது தயார் செய்து தமிழக கஸ்டம்ஸ் அதிகாரிகளின் கண்ணில் மண்ணைத் தூவி, அமெரிக்காவுக்கு அனுப்பி உள்ளனர். அந்தச் சிலைகளை சுபாஷ் சந்திரகபூர், ஐரோப்பிய நாடுகளில் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததையும் கண்டுபிடித்தோம்.

சிலைகளைக் கடத்தி விற்பதில் கில்லாடியான கபூர், சஞ்சீவி அசோகன் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த பிச்சுமணி, பார்த்திபன், மாரிச்சாமி போன்ற லோக்கல் திருடர்களுடன் நெட்வொர்க் வைத்திருக்கிறார். பாழடைந்து கிடக்கும் தமிழக கோயில்களில் இருந்து ஐம்பொன் சிலைகளைத் திருடி அனுப்புவதுதான், இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அசைன்மென்ட். அதற்குக் கபூர் பல லட்ச ரூபாய் கூலி கொடுக்கவே, சிலை திருட்டு ஜரூராக நடந்திருக்கிறது.

கபூரின் கேலரியில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் அனைத்தும் கடத்தப்பட்ட சிலைகள் என்பதை போலீஸார் கண்டுபிடித்ததும் அவர் ஜெர்மனிக்குத் தப்பி விட்டார். கபூரை, அந்த நாட்டு தூதரக உதவியுடனும் இன்டர்போல் போலீஸின் உதவியோடும் ஜெர்மன் சிறையில் அடைத்தனர். 10 மாதங்களாக ஜெர்மன் சிறையில் இருந்த கபூரை, முறைப்படி அழைத்துவந்து அரியலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ராஜ்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்திருக்கிறோம்'' என்றார்.

இந்த வழக்கு குறித்துப் பேசும் கபூரின் வழக்கறிஞரான கிங்ஸ்டன் ஜெரால்ட், ''கபூர் மிகப் பெரிய பணக்காரர். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர். அவர் விற்பனை செய்துள்ள அனைத்து சிலைகளுக்கும் முறையான ஆவணங்களை

வைத்துள்ளார். ஒரு சிலை வழக்கில் அவரைக் கைது செய்வதற்காக அமெரிக்க அரசாங்கத்திடம் அனுமதி வாங்கியுள்ள தமிழக போலீஸ், மேலும் ஒரு வழக்கை அவர் மீது போட்டிருக்கிறது. இது சட்டத்துக்குப் புறம்பானது. எல்லா வழக்குகளையும் பொய் வழக்கு என்று நிரூபிப்போம்'' என்றார்.

இந்த நிலையில் கடந்த ஜூலை 1-ம் தேதி தூத்தூர், நதியனூர் கொள்ளிடக்கரையில் உள்ள விஸ்வநாதர் கோயிலில் ஐந்து கற்சிலைகளும் ஜூலை 8-ம் தேதி, திருமானூர் அருகே உள்ள, கள்ளூர் பெருமாள் கோயிலில் நான்கு கற்சிலைகளும் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளன. கடந்த 13-ம் தேதி அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் தென்கச்சிப் பெருமாள் நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட மேக்குடி கிராமத்திலுள்ள சப்த கன்னியர் கோயிலில் நடந்த கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டு உள்ளது.

இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் குறித்துப் பேசும் அரியலூர் மாவட்ட பி.ஜே.பி. இளைஞரணி தலைவர் ஜெயக்குமார், ''அரியலூர் மாவட்டத்தில், பழம்பெரும் கோயில்கள் அதிகம். இங்குதான் தமிழகத்திலேயே அதிகமாக சிலைகள், கோபுர கலசங்கள், உண்டியல்கள் திருடப்பட்டு உள்ளன. இந்தத் திருட்டுகளில் சர்வதேசத் தொடர்பு இருப்பது இப்போது நிரூபணமாகி இருக்கிறது. கபூரைக் கைது செய்ததால் மட்டும் திருட்டுப் பிரச்னை முடிந்துவிடாது. எனென்றால் இதுவரை அரியலூரில் நடந்துள்ள கோயில் திருட்டுகளில் ஸ்ரீபுரந்தான் வழக்கைத் தவிர எதிலும் குற்றவாளிகளைக் கைது செய்ய முடியவில்லை.

சிலைகள் மட்டுமில்லாமல் இருடியம் தாது உள்ள கோபுரக் கலசங்களும் நல்ல விலைக்குப் போவதால், பல கோபுரக் கலசங்கள் திருடப்பட்டு வருகின்றன. இங்கே திருடப்படும் சிலைகள் வெளிநாடுகளில் ஐந்து கோடி ரூபாய் வரை விலை போகிறது. இந்தத் திருட்டு இனியாவது நடைபெறாமல் இருப்பதற்காக, அறநிலையத் துறை மூலம் கோயில்களில் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு ஒன்றைத் தனியாக உருவாக்க வேண்டும்'' என்றார்.

நல்ல யோசனைதான்!

- சி.ஆனந்தகுமார், படங்கள்: எம்.ராமமி