Published:Updated:

திருச்சியில் தேய்கிறதா பா.ம.க.?

கிடுகிடு புகார்

பிரீமியம் ஸ்டோரி
##~##
திருச்சியில் தேய்கிறதா பா.ம.க.?

திருச்சி பா.ம.க. உள்குழப்பத்தில் இருக்கிறது! 

'மாநில நிர்வாகிகள் கண்ணதாசன், உமாநாத் ஆகியோரின் அதிகாரப் போக்கால் திருச்சியில் கட்சி தேய்கிறது’ என்று எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள், மாநகர பா.ம.க. நிர்வாகிகள்.

என்னதான் நடக்கிறது?

''ஐந்து ஆண்டுகளுக்கு முன் பா.ம.க-வுக்கு இரண்டு வார்டுகளில் மட்டுமே நிர்வாகிகள் இருந்தனர். அறிவுச்செல்வன்(சமீபத்தில் விபத்தில் சிக்கி இறந்தவர்!) வந்த பிறகு, கட்சியை வளர்க்கும் விதமாக சுறுசுறுப்பான நபர்களைத் தேடி அழைத்து வந்து பொறுப்பு கொடுத்தார். அவரது ஆதரவாளரான திலீப்குமாருக்கு மாநகரச் செயலாளர் பொறுப்பு வழங்கினார். 40 வார்டுகளில் நிர்வாகிகள்

திருச்சியில் தேய்கிறதா பா.ம.க.?

நியமிக்கப்பட்டு... கட்சி வேகமாக வளர்ந்தது. வன்னியர் அல்லாதவர்களும் பொறுப்புகளில் அமரவைக்கப்பட்டனர்.

ஆனால் மாநிலத் துணைத் தலைவரான கண்ணதாசனும் உமாநாத்தும் இதை விரும்பவில்லை. அதனால் கிளைக் கழக நிர்வாகிகளை அவமானப்படுத்தும் வகையில் செயல்படுகிறார்கள். கட்சி நிகழ்ச்சிகளின்போது முன்னாள் நிர்வாகிகளை அழைக்க மறுக்கிறார்கள். யாருக்கும் மரியாதை கொடுப்பதும் இல்லை. இதனால் முன்னாள் மாநில துணைச் செயலாளரான முத்து, ஸ்ரீரங்கம் நகரச் செயலாளராக இருந்த ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கட்சியைவிட்டே வெளியேறிவிட்டனர். திருச்சிக்கு டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி  ஆகியோர் வரும்போது

திருச்சியில் தேய்கிறதா பா.ம.க.?

அவர்களைப் பார்ப்பதற்குக்கூட கட்சி நிர்வாகிகளை  அனு மதிக்க மறுக்கிறார்கள். அதனால் பலரும் கட்சி யில் இருந்து வெளியேறி வருகிறார்கள்'' என்றார் பெயரை மறைத்துப் பேசிய ஒரு வட்டச் செயலாளர்.

இது குறித்துப் பேசிய மாநகரச் செயலாளர் திலீப்குமார், ''மதுக் கடைகளுக்குப் பூட்டு போடும் போராட்டம் நடந்தபோது, மிகவும் தாமதமாகவே கண்ணதாசன் வந்தார். இதனால் ஒரு மணி நேரம் நடைபெறுவதாக இருந்த போராட்டம் 10 நிமிடங்களில் முடிந்துவிட்டது. அதன் பிறகு மதுவின் கொடுமையை விளக்கும் துண்டுப் பிரசுரம் கொடுப்பதையும் தடுத்துவிட்டார். வேறு எதையும் சொல்ல விரும்பவில்லை'' என்றார்.

குற்றச்சாட்டு குறித்து கண்ணதாசனிடம் கேட்டோம். ''என்னால் கட்சிக்குக் கொண்டு வரப்பட்டவர்தான் திலீப்குமார். என் மீது சொல்லப்படும் அனைத்துக் குற்றச்சாட்டுகளும் பொய்யானது. மது ஒழிப்புப் போராட்டத்தின்போது துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்க போலீஸ் அனுமதி கொடுக்கவில்லை. அதனால்தான் தடுத்தேன். என்னை கட்சியில் இருந்து வெளியேற்றத் திட்டமிடுகிறார்கள். ஆனால், நான் உண்மையாகத்தான் உழைத்து வருகிறேன்'' என்றார்.

மாநிலத் துணைப் பொதுச் செயலாளரான உமாநாத், ''மாநகரச் செயலாளர் திலீப்குமார், கிளைக் கழக நிர்வாகி களை தன்னிச்சையாக அடிக்கடி மாற்றினார். இது கட்சியின் சட்டதிட்டங்களுக்கு எதிரானது என்பதால் எதிர்ப்பு தெரிவித்தேன். அதனால்தான் அவர் என் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார். அவர்களின் குற்றச்சாட்டில் துளிகூட உண்மை இல்லை'' என்றார் ஆவேசமாக.

சண்டையில கிழியாத சட்டை உண்டா?

- அ.சாதிக் பாட்ஷா

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு