Published:Updated:

திருவரங்க டாஸ்மாக் திருவானைக்காவல் போனதா?

வைணவ, சைவ சர்ச்சை

பிரீமியம் ஸ்டோரி
##~##

முதல்வரின் தொகுதியான திருவரங்கத்தில் கிளம்பி இருக்கும் டாஸ்மாக் விவகாரம், பலத்த

திருவரங்க டாஸ்மாக் திருவானைக்காவல் போனதா?

சர்ச்சைகளைக் கிளப்பி இருக்கிறது! 

முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றவுடன், திருவரங்கத்தில் இருந்த அனைத்து மதுக் கடை களையும் அகற்றுவதற்கு உத்தரவிட்டார். அதன்படி அத்தனை மதுக் கடைகளும் ஊரில் இருந்து அகற்றப்பட்டன. வைணவ தலத்தில் மதுக் கடை இல்லாதது நல்லதுதான் என்று பாராட்டப்பட்டது. ஆனால், அத்தனை கடைகளும் திருவானைக்காவலுக்கு இடம் பெயர்ந்ததுதான் வேதனை. ஏற்கெனவே நான்கு கடைகள் இருக்கும் நிலையில், மேலும் புதிதாக ஒரு கடையைத் திறக்க முயற்சி நடக்கவே, 'இனியும் பொறுப்பது இல்லை’ என்று பொங்கி எழுந்திருக்கிறார்கள் சைவர்கள்.

இந்தப் பிரச்னை குறித்து இந்து முன்னணி முன்னாள் தலைவர் ரவிக்குமார், 'முதல்வர் திருவரங்கத்தில் மதுக் கடைகள் வைக்கக் கூடாது என்று உத்தரவிட்டதால், புற்றீசல் போல அனைத்துக் கடைகளும் திருவானைக்காவல் பகுதிக்கு வந்துவிட்டன. அதனால் போக்குவரத்தும் அதிகமாகி... விபத்துகளும் பெருகி விட்டன. திருவரங்கத்தைப் போலவே திருவானைக்காவலும் முக்கியமான புண்ணியஸ்தலம். வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் குடியிருப்புப் பகுதி களுக்கு அருகே மதுக் கடை அமைக்கக் கூடாது என்பது அரசு ஆணை. ஆனால் தொடர்ந்து இங்கே புதிய புதிய கடைகள் முளைத்தவண்ணம் உள்ளன. வைணவ திருத்தலத்தில் மதுக் கடைகள் இருக்கக் கூடாது என்றால், சைவ திருத்தலத்தில் மட்டும் இருக்கலாமா?

திருவரங்க டாஸ்மாக் திருவானைக்காவல் போனதா?

அத்தியாவசியத் தேவையான நியாய விலைக் கடையைக் கொண்டுவரப் போராட்டம் செய்தாலும்...

திருவரங்க டாஸ்மாக் திருவானைக்காவல் போனதா?

கிடைப்பது இல்லை. ஆனால் மதுக் கடைகள் மட்டும் கேட்காமலே வருகின்றன. மக்கள் தொகையைக் கருத்தில்கொண்டு ரேஷன் கடைகளை அமைப்பதாகக் கூறும் அரசு, பாரபட்சம் இன்றி மதுக் கடைகளை மட்டும் தொடர்ந்து வருவது ஏன்... அத்தனை கடைகளையும் மூடும் வரை விட மாட்டோம்'' என்று கொட்டித் தீர்த்தார்.

புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க இருக்கும் இடத்தில் மக்கள், முற்றுகை இட்டார்கள். தகவல் அறிந்து தாசில்தார் ரெங்கராஜன் மற்றும் டாஸ்மாக் மண்டல மேலாளர் அய்யப்பன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன் பிறகே, திறக்கப்பட இருந்த கடை அதிரடியாக மூடி சீல் வைக்கப்பட்டது. இந்த வெற்றியைத் தொடர்ந்து திருவானைக்காவலில் அமைந்துள்ள அனைத்து மதுபானக் கடைகளையும் மூடக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள்.

மதுக் கடைகள் வேண்டாம் என்று மக்கள் முடிவெடுப்பது மகத்தான  விஷயம்!

- ஆ.அலெக்ஸ் பாண்டியன்

படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு