ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

ஒரு டாக்டர் மிருகம் ஆகிறார்!

மதுரை மாணவிக்கு நேர்ந்த கொடூரம்

##~##
ஒரு டாக்டர் மிருகம் ஆகிறார்!

ல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் கதைதான்! 

மதுரை காளவாசல் அருகே உள்ள சொக்கலிங்க நகரில் வசிப்பவர் டாக்டர் சங்கர நாராயணன். எம்.பி.பி.எஸ்., எம்.டி. படித்த இவர், தன் வீட்டோடு இணைந்த பிரமாண்ட கட்டடத்தில் 20 படுக்கைகள் கொண்ட கே.கே. மருத்துவமனையை நடத்தி வருகிறார்.

சோழவந்தான் பகுதியில் ப்ளஸ் டூ படிக்கும் ஒரு மாணவி காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த 27-ம் தேதி இவரது மருத்துவ மனையில் அட்மிட் ஆனார். அந்த மாணவியிடம்தான், தன் வக்கிர புத்தியைக் காட்டி இருக்கிறார் டாக்டர் சங்கரநாராயணன்.

மாணவியின் தாத்தா அழகுமலையிடம் பேசினோம். 'உடம்புக்கு முடியாத புள்ளையை, அரை மயக்கத்துல வெச்சுக் கெடுத்துட்டாருங்க அந்த டாக்டர். அந்தஆளை கடவுள் மாதிரி நினைச்சிருந்தோம். அந்த மனு சனுக்குள்ள இப்பிடி ஒரு வெறிபிடிச்ச நாய் இருக்குன்னு எங்களுக்குத் தெரியாமப்போச்சே' என்றார் கண்ணீருடன்.

ஒரு டாக்டர் மிருகம் ஆகிறார்!

போலீஸார், மற்றும் செவிலியர்களிடம் நடந்ததை விசாரித்தோம். 'ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட

ஒரு டாக்டர் மிருகம் ஆகிறார்!

மூன்றாவது நாள் (30-ம் தேதி) மாலை 4.30 மணிக்கு அறையில் அந்த மாணவி மட்டும் தனியே இருப்பதைப் பார்த்தார் டாக்டர். உடனே, தரைத்தளத்தில் உள்ள தனது ஓ.பி. அறையில் இருந்து உள்நோயாளிகள் அனுமதிக் கப்பட்டிருக்கும் முதல்மாடிக்குப் போய் மாணவியை நெருங்கி 'வயிற்று வலி இப்போது எப்படி இருக்கிறது?’ என்று கேட்டிருக்கிறார். பேசியபடியே ஆடையை விலக்கிப் பார்த்திருக்கிறார். பிறகு, சோதனை செய்வது போல், கையை அவள் வயிற்றின் மீது படர விட்டிருக்கிறார். சம்பந்தம் இல்லாத பகுதிக்கு அவரது கை நகர்வதைக் கண்டு, கையைத் தட்டிவிட முயற்சி செய்திருக்கிறாள் சிறுமி. அவர் மேலும் தொடரவே, தன் பலத்தை எல்லாம் ஒன்று திரட்டி டாக்டரின் முகத்தில் அறைந்திருக்கிறாள். ஆனால், காம வெறி தலைக்கேறிய டாக்டர், அந்தச் சிறுமியின் உடலில் ஊசி குத்திய இடத்தில் பலமாக அழுத்தவே அரை மயக்கத்துக்குப் போய் விட்டாள். அதன்பிறகு பலாத்காரம் செய்துள்ளார்.

மயக்கம் தெளிந்த மாணவி அழ ஆரம்பித்ததும், 'இதுவும் ட்ரீட்மென்ட்தான். ஒனக்கு அடிக்கடி வயித்து வலி வருதுல்ல. இப்படிச் செஞ்சா வராது’ என்று சொல்லிவிட்டு, 'கை, காலைக் கழுவிட்டு வா’ என்று அனுப்பிவிட்டு தன்னுடைய அறைக்குப் போய்விட்டார்.

மாணவியின் அழுகை சத்தத்தைக் கேட்டு, நர்ஸ் ஒருவர் அறைக் குள் போய் விசாரித்திருக்கிறார். அப்போது, நடந்ததை எல்லாம் அந்த மாணவி சொல்ல, அவளோடு சேர்ந்து அந்த நர்ஸும் அழுதிருக்கிறார்.

மாணவி, நர்ஸிடம் சொன்னதை தெரிந்துகொண்ட டாக்டர், மீண்டும் ரவுண்ட்ஸ் போவது போல மாடிக்குப் போய் மாணவி யிடம், 'வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன்’ என்று மிரட்டியிருக்கிறார். அதன்பிறகு, திடீரெனக் காலில் விழுந்து அழுவதுபோல் பாசாங்கு செய்திருக்கிறார். ஆனாலும், அந்த

ஒரு டாக்டர் மிருகம் ஆகிறார்!

மாணவி தாங்க முடியாமல் தன்னுடைய அக்காவிடம் நடந்த விவரங்களைச் சொல்ல, அவர்களின் காலிலும் விழுந்திருக்கிறார். 'புகார் செய்தால் உங்களுக்கும்தானே அசிங்கம்’ என்று அவர்கள் மனதை மாற்ற முயற்சி செய்திருக்கிறார். ஆனால், மாணவியின் குடும்பத்தாரால் இந்தக் கொடூரத்தைத் தாங்க முடியாமல் போலீஸுக்குப் போய்விட்டார்கள்'' என்று சொல்கிறார்கள்.

போலீஸ் உதவி கமிஷனர் கணேசன் தலைமையிலான போலீஸார், தேடி வரும்போது ஆஸ்பத்திரியில் டாக்டர் இல்லை. மொபைல் நம்பருக்குத் தொடர்பு கொண்டபோதும், அவர் எடுக்கவில்லை. ஆனால், செல்போன் டவர் மூலம் ஆய்வு செய்தபோது, அந்த செல்போன் ஆஸ்பத்திரி வட்டாரத்தில்தான் இருப்பது உறுதியானது. உடனே, ஆஸ்பத்திரியை போலீஸார் சோதனையிட்டனர். வி.ஏ.ஓ. சாந்தி, டாக்டரின் மைத்துனர் ஆகியோர் முன்னிலையில் ஒவ்வொரு பூட்டாக உடைத்து வீட்டுக்குள் தேடுதல் வேட்டை நடத்தினர். ஹால், படுக்கை அறைகளை உடைத்துப் பார்த்தவர்கள் அடுத்து ஐந்தாவது அறையான ஸ்டோர் ரூமை உடைத்துப் பார்த்தனர். அங்கே அவர், ஒரு தட்டில் சோறு சாப்பிட்டுவிட்டு, பக்கத்திலேயே தலையணையைப் போட்டுப் படுத்துக்கிடந்தார். டாக்டரைக் கைது செய்யும் போது இரவு 10.45 மணி.

இதுபற்றி ஏ.சி. கணேசனிடம் கேட்டபோது, 'அவர் தற்கொலை செய்திருப்பாரோ என்ற எண்ணத்தில்தான் வீட்டுக் கதவை உடைத்துப் பார்த்தோம். ஆனால், வேர்த்து விறுவிறுக்க ஸ்டோர் ரூமில் பதுங்கியிருந்தார். 'தவறு செய்யவில்லை என்றால் ஏன் நீங்கள் இப்படிப் பதுங்க வேண்டும்? எங்களுக்குப் போன் செய்தால் நாங்களே உங்களை மீட்டு இருப்போமே?’ என்று கேட்டதும், 'ஏதோ சபலத்தில் அப்படி செய்துவிட்டேன்’ என்று அரைகுறையாக குற்றத்தை ஒப்புக்கொண்டார். 17 வயது கூட பூர்த்தி அடையாத அந்தச் சிறுமியை பலவந்தப்படுத்தி டாக்டர் கற்பழித்திருப்பது விசா ரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அவர் மீது கற்பழிப்பு, அடைத்து வைத்தல், கொலை மிரட்டல் போன்ற பிரிவுகளின் கீழ் எஸ்.எஸ்.காலனி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்' என்றார்.

குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் இவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரும் வழக்கு ஒன்றும் மதுரை கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. இப்போது டாக்டர் சங்கரநாராயணன் கைது செய்யப்பட்டு இருப்பதால், மேலும் பல பாலியல் குற்றச்சாட்டுக்கள் வெளிவரும் என்று காவல் துறையினர் காத்திருக்கிறார்கள்.

- கே.கே.மகேஷ்

படங்கள்: பா.காளிமுத்து