Published:Updated:

கொள்ளை போனதா தங்க நாணயங்கள்?

மாந்தோப்பு பள்ளி பகீர்

கொள்ளை போனதா தங்க நாணயங்கள்?

மாந்தோப்பு பள்ளி பகீர்

Published:Updated:
##~##
கொள்ளை போனதா தங்க நாணயங்கள்?

ள்ளியில் இருந்தது தங்க நாணயமா என்ற விலை மதிப்பான சர்ச்சை இது! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ளது மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. மாந்தோப்பு ஸ்கூல் என்று அழைக்கப்படும் இந்தப் பள்ளி, 60 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. இந்தப் பள்ளியில் இருந்து விலை மதிப்பு மிக்க பண்டைய நாணயங்கள் காணாமல் போய் விட்டதாக திடுக்கிடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது!

இதுகுறித்து நம்மிடம் பேசிய பள்ளியைச் சேர்ந்த சிலர், ''மன்னர்களின் வரலாற்றை கற்பிக்கும்போது அவர்கள் காலத்தில் புழக்கத்தில் இருந்த நாணயங்களையும் மாணவர்களுக்குக் காண்பித்தால் நன்றாக இருக்கும் என்ற நோக்கில், எழும்பூர் மியூசியத்தில் இருந்து 32 நாணயங்கள் இந்தப் பள்ளிக்கு என பிரத்யேகமாகப் பெறப்பட்டன. குப்தர்கள், சாளுக்கியர்கள், ராஜபுத்திரர்கள், மொகலாயர்கள், விஜயநகரப் பேரரசர், சோழர்கள், பாண்டியர்கள் என பல மன்னர்களின் ஆட்சியில் பயன்படுத்தப்பட்ட தங்க, வெள்ளி நாணயங்கள் அடங்கிய பொக்கிஷம் அது. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக யார் இருக்கிறாரோ அவரே அதைப் பாதுகாப்பாக வைத்து இருப்பார். காலப்போக்கில் மாணவர்களுக்கு நாணயங்கள் காண்பிக்கப்படுவது நிறுத்தப்பட்டது.

கொள்ளை போனதா தங்க நாணயங்கள்?
கொள்ளை போனதா தங்க நாணயங்கள்?

கடந்த மாதம் வரை இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக ராமராசு என்பவர் பொறுப்பு வகித்து வந்தார். அவரது பதவிக் காலம் முடிந்து, கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக புதிய தலைமை ஆசிரியர் பானுமதியிடம் பொறுப்பை ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். 'பொறுப்பை ஒப்படைக்கவில்லை என்றால் இணை ஆணையரிடம் புகார் செய்வேன்’ என்று பானுமதி எச்சரித்த பிறகு, கடந்த 25-ம் தேதி ஆசிரியர்கள் முன்பு பொறுப்பை ஒப்படைத்தார். டூல்ஸ் பதிவேட்டில் உள்ள பண்டைய நாணயங்கள் அடங்கிய சிறு பெட்டியைக் கொடுத்து, இதில் 15 தங்க நாணயங்கள், 12 வெள்ளி நாணயங்கள், 2 செம்பு நாணயங்கள் இருக்கின்றன என்று  பதிவேட்டில் கையெழுத்து வாங்கிக்கொண்டு அந்த அறையை விட்டு அவசரமாக வெளியேறினார். இதில் சந்தேகமடைந்த புதிய தலைமை ஆசிரியை பானுமதி அருகில் உள்ள பொற்கொல்லரை அழைத்து வந்து நாணயங்களை சோதிக்க... தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களுக்குப் பதிலாக போலி பித்தளை நாணயங்கள் வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் பானுமதி முறையிட... பெண் உதவி ஆய்வாளர் ஒருவர் நேரில் வந்து விசாரணை நடத்தினார். முன்னாள் தலைமை ஆசிரியர் ராமராசு, உதவி ஆய்வாளரின் கேள்விகளுக்குப் பதில் கூறாமல், 'கல்வித் துறை உயர் அதிகாரிகள் புகார் கொடுத்தால் மட்டுமே நீங்கள் என்னைக் கேள்வி கேட்க முடியும்’ என்று தெனாவெட்டாகப் பதில் கூறி இருக்கிறார்.

கொள்ளை போனதா தங்க நாணயங்கள்?

தங்க நாணயங்கள் எங்கே போனது என்று ராமராசுவுக்கு நிச்சயம் தெரியும். அவரை விசாரித்து பல கோடி மதிப்புள்ள நாணயங்களை மீட்க வேண்டும். தற்போது காவல் துறையினரும் என்ன காரணத்தாலோ மொத்த விவகாரத்தையும் மூடி மறைக்க முயல்கிறார்கள்'' என்று அதிர வைத்தனர்.

முன்னாள் தலைமை ஆசிரியர் ராமராசுவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். ''எனக்கு முன்பு இருந்த பள்ளி தலைமை ஆசிரியர் என்னிடம் கொடுத்த நாணயங்கள் அடங்கிய பெட்டியை அப்படியே புதிய தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்து இருக்கிறேன். யார் தலைமை ஆசிரியராக இருந்தபோது நாணயங்கள் மாறியது என்று எனக்குத் தெரியாது'' என்றார்.

சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி யிடம் இது குறித்து கேட்டபோது, ''எனது கவனத் துக்கும் இந்த விவ காரம் வந்தது. நான் கூட ஏதோ பெரிய அளவில் கொள்ளை என்று முதலில் பயந்துவிட்டேன். மாநகராட்சி விஜிலென்ஸ் அதிகாரிகளை அனுப்பி உடனடியாக விசாரணை நடத்தச் சொன்னேன். அந்தக் காலத்திலேயே எழும்பூர் மியூசியத்தில் இருந்து ஒரிஜினல் நாணயங்களைக் கொடுக்கவில்லையாம். டம்மி காயின்தான் கொடுத்து இருக்கிறார்கள். இது தெரியாத சிலர்தான், வேண்டும் என்றே புரளியைக் கிளப்பி விடுகிறார்கள்'' என்று புன்னகைத்தார்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரி மோகன்ராஜோ, ''புதிய தலைமை ஆசிரியை பானுமதி கொடுத்த புகாரை மத்தியக் குற்றப் பிரிவுக்கு மாற்றல் செய்துள்ளோம். தங்க நாணயம் என்று சொல்லித்தான் முன்னாள் தலைமை ஆசிரியர் அந்தப் பெட்டியைக் கொடுத்துள்ளார். விசாரணை நடந்து வருகிறது. தவறு நடந்தது உறுதி எனில் நிச்சயம் நடவடிக்கை இருக்கும்'' என்றார்.

என்னவே நடக்குது... மர்மமா இருக்குது!

- தி.கோபிவிஜய்

படம்: ச.இரா.ஸ்ரீதர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism