Published:Updated:

அ.தி.மு.க-வில் இருப்பவர்களே... அ.தி.மு.க-வில் இணைவார்களா?

முதல்வரை ஏமாற்றினாரா மாவட்டச் செயலாளர்?

அ.தி.மு.க-வில் இருப்பவர்களே... அ.தி.மு.க-வில் இணைவார்களா?

முதல்வரை ஏமாற்றினாரா மாவட்டச் செயலாளர்?

Published:Updated:
##~##
அ.தி.மு.க-வில் இருப்பவர்களே... அ.தி.மு.க-வில் இணைவார்களா?

ற்கெனவே திருமணம் முடித்த ஒருவருக்கு முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் திருமணம் நடந்த பரபரப்பு அடங்குவதற்குள், சொந்தக் கட்சிக்காரர்களையே மீண்டும் கட்சிக்குள் சேர்த்ததாக சர்ச்சை கிளம்பிவிட்டது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த 1-ம் தேதி நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க., காங்கிரஸ் மற்றும் சுயேச்சையான உள்ளாட்சிப் பிரதிநிதிகள் 60 பேர் கொடநாடு பங்களாவில் ஜெயலலிதாவை சந்தித்து தங்களை அ.தி.மு.க-வில் இணைத்துக்கொண்டனர். இதுகுறித்துப் பேசும் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர், ''அன்றைக்கு அம்மா முன்னிலையில் கட்சியில் சேர்ந்த உதகை ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களான பெள்ளி போஜன், துரைராஜ் இருவருமே, பல மாதங்களுக்கு முன்பே போயஸ் தோட்டத்தில்வைத்து இணைந்தவர்கள்தான். உதகை ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினரான ஷர்மிளா ஏற்கெனவே ஊட்டியில் முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன் முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்துவிட்டார். பாலகொலா ஊராட்சி மன்றத் தலைவர் மணி, கடநாடு ஊராட்சி மன்றத் தலைவர் சிவகுமாரும் ஏற்கெனவே கட்சியில் இணைந்துவிட்டவர்கள்தான். ஜெகதளா பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் லட்சுமி நிகழ்ச்சி நடந்த தினம் கொடநாடு பங்களாவுக்குப் போகவே இல்லை. ஆனால் அவர் பெயர் லிஸ்டில் இருந்ததால், கணக்கு காட்டுவதற்காக வேறு ஒருவரைக் கூட்டிப் போயிருக்கிறார்கள். இப்படி எத்தனை முறை கட்சியில் சேர்வார்களோ... இது அம்மாவை திட்டமிட்டு ஏமாற்றிய செயல். இப்படிப்பட்ட காரியத்தை செய்தது எங்க கட்சியின் மாவட்டச் செயலாளர் அர்ஜுனன்தான்'' என்றார்கள் அழுத்தமாக.

அ.தி.மு.க-வில் இருப்பவர்களே... அ.தி.மு.க-வில் இணைவார்களா?
அ.தி.மு.க-வில் இருப்பவர்களே... அ.தி.மு.க-வில் இணைவார்களா?

முன்னரே அ.தி.மு.க-வில் இணைந்துவிட்டதாகச் சொல்லப்படும் துரைராஜிடம் பேசினோம். ''நான், பெள்ளிபோஜனெல்லாம் சென்னைக்குப் போய் போயஸ் தோட்ட பங்களாவுல அம்மா முன்னிலையில் சேர்ந்தது உண்மைதான்'' என்றார். ஷர்மிளாவோ, ''புத்திசந்திரன் மாவட்டச் செயலாளரா இருந்தப்ப, அ.தி.மு.க-வுல இணைஞ்சுட்டேன். ஆனா இந்த வாட்டி அம்மா முன்னாடி இணைஞ்சப்பதான் உறுப்பினர் கார்டு தந்தாங்க'' என்றார். மற்ற நபர்களும் இதே ரீதியில்தான் தலையை ஆட்டுகிறார்கள்.  

நீலகிரி மாவட்ட அ.தி.மு.க-வை இந்த விவகாரம் ஆட்டிப்படைப்பது போதாது என்று, எதிர்க் கட்சியினர் இன்னொரு புகைச்சலைக் கிளப்பி இருக்கிறார்கள். அது, நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. மகளிர் அணிச் செயலாளரான சகுந்தலா காணாமல்போன விவகாரம். ஏலச் சீட்டு நடத்தி பலரிடம் கணிசமான பணம் வசூல் செய்திருந்த சகுந்தலா, கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் குடும்பத்தோடு தலைமறைவு ஆகிவிட்டார். இவரிடம் பணத்தை இழந்த பொதுமக்கள் கடும் ஆத்திரத்தில் இருக்கிறார்கள். இவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த சிலர், ''அவர் அ.தி.மு.க-வில் முக்கியப் பொறுப்பில் இருந்த

அ.தி.மு.க-வில் இருப்பவர்களே... அ.தி.மு.க-வில் இணைவார்களா?

காரணத்தால்தான், தைரியமாக சீட்டுப் போட்டோம். அவர் தலைமறைவாகி பல மாதங்கள் ஆன பிறகும் போலீஸ் தரப்பில் இருந்தும் கட்சி தரப்பில் இருந்தும் நடவடிக்கை எடுக்கவே இல்லை. சகுந்தலா காணாமல்போன விவகாரம் இதுவரை அ.தி.மு.க. மேலிடத்துக்குத் தெரியுமா என்பதே புதிராக இருக்கிறது. ஏனென்றால் காணாமல்போனவரைத் தேடவும் இல்லை... புதிய நபரை அவருக்குப் பதிலாக நியமிக்கவும் இல்லை. அம்மாவின் கட்சிக்காரர் என்பதை நம்பி ஏமாந்துவிட்டோம்'' என்று கண்ணீர் சிந்துகிறார்கள்.

இந்த விவகாரங்கள் குறித்து நீலகிரி மாவட்டச் செயலாளரான அர்ஜுனனிடம் கேட்டோம். ''அம்மா முன்னிலையில் 60 பேர் இணைந்ததில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. துரைராஜ், பெள்ளிபோஜன், ஷர்மிளா உள்ளிட்ட எல்லாருமே கொடநாட்டில்தான் அம்மா முன்னாடி இணைஞ்சு ஆசீர்வாதமும், உறுப்பினர் அட்டையும் வாங்கிட்டாங்க. எங்க கட்சியில் சேர்வதற்கு விருப்பப்பட்டதாலோ அல்லது அனுதாபியாக இருப்பதால் மட்டும் உறுப்பினர் ஆகிவிட முடியாது. முறையான மெம்பர்ஷிப் கார்டு வாங்கியிருக்க வேண்டும். ஒரு வேலையில் சேர்வதற்கு பலரும் மனசார விருப்பப்படலாம், ஏங்கலாம். ஆனால் அப்பாயின்ட்மென்ட் கடிதம் கிடைத்தால்தானே வேலையில் சேர முடியும். அதுமாதிரித்தான் இதுவும்.  இந்த விஷயத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. அந்த 60 பேரிடமும் பல கேள்விகள் கேட்டு ஆராய்ந்து, படிவங்களில் கையெழுத்து வாங்கிய பிறகுதான் கட்சியில் சேர்த்திருக்கிறோம்'' என்று விளக்கம் கொடுத்தவர் அடுத்து, ''நான் மாவட்டச் செயலாளர் ஆகி சில மாதங்கள்தான் ஆகின்றன. சகுந்தலா விஷயத்தில் என்ன நடந்திருக்கிறது என்று தகவல் திரட்டிவருகிறோம். கூடிய சீக்கிரம் அம்மாவோட கவனத்துக்கு அந்த ஃபைல் போகும். அதன் பிறகு, தேவையான நடவடிக்கையை அம்மா எடுப்பார்கள்'' என்றார்.

- எஸ்.ஷக்தி, படம்: வி.ராஜேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism