Published:Updated:

வேலூர் மாநகராட்சிக்கு கடைசி இடம்!

வெடிக்கிறார் காங்கிரஸ் கவுன்சிலர்

வேலூர் மாநகராட்சிக்கு கடைசி இடம்!

வெடிக்கிறார் காங்கிரஸ் கவுன்சிலர்

Published:Updated:
##~##
வேலூர் மாநகராட்சிக்கு கடைசி இடம்!

'தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சிகளின் செயல்பாடுகளை ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பாக ஒரு குழு ஆராயும். அதில் முதல் இடத் தைப் பிடிக்கும் சிறந்த மாநகராட்சிக்கு 25 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும்’ என்று கடந்த மாதம் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து இந்த அறிவிப்பு வந்தது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதல்வர் இன்னமும் குழு அமைக்கவில்லை. ஆனாலும் அப்படி ஒரு போட்டி வந்தால் வேலூர் மாநகராட்சியின் நிலை என்னவாக இருக்கும்? வேலூர் மாநகராட்சி உறுப்பினராக இருக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சீனிவாச காந்தியிடம் கேட்டோம். ''கடந்த மூன்று மாதங்களாகவே, 'நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை’ என்று வேலூர் மாநகராட்சி மேயர் கார்த்தியாயினி மேடைக்கு மேடை பேசி வருகிறார். ஆனால் இவர் மேயராகப் பொறுப்பேற்று இந்த மாநகராட்சிக்கு என்ன செய்திருக்கிறார் என்பதைப் பற்றி வாயே திறப்பது இல்லை. ஏனென்றால் எல்லாமே வேதனைதான்.

வேலூர் மாநகராட்சிக்கு கடைசி இடம்!

அரசு மக்களுக்குச் செய்யவேண்டிய முதல் கடமை குடிநீர். அதைக்கூட முறையாகத் தராமல், கிணற்று நீரை சுத்திகரிக்காமல் அப்படியே தருகிறார்கள். 15 நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர்

வேலூர் மாநகராட்சிக்கு கடைசி இடம்!

கிடைக்கிறது. தரமற்ற தண்ணீர் என்பதால், மூன்றே நாட்களில் அதில் புழு வந்துவிடுகிறது. குடிக்கும் நீரில் கழிவு நீரும் கலந்துவரும் கொடுமை வேலூர் மாநகராட்சியில் அனேக இடங்களில் நடக்கிறது. மாநகராட்சிக்கு என்று ஒரு தண்ணீர் லாரிகூட கிடையாது. மாநகராட்சிக் கூட்டங்களில் நாங்கள் கேட்கும் நேரத்தில் எல்லாம், 'பரிசீலனை செய்யப்படும்’ என்று ஒரே வரியில் முடித்துவிடுகிறார். அதன் பிறகு, அதைப் பற்றி நினைத்தும் பார்ப் பது இல்லை. மேயர் அறையில், மாநகராட்சிக் கூட்ட அரங்கில், மேயர் கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சிகளில் எல்லாம் மேயரின் கணவருக்கு என்னதான் வேலை இருக்குமோ தெரியவில்லை. எப்போதும் நிழல் மாதிரியே நிற்கிறார். கட்சிப் பொறுப் பில் இருக்கிறார் என்றால் கட்சி நிகழ்ச்சிகளில் மட்டும்தானே கலந்து கொள்ள வேண்டும்? முதல்வர் ஜெயலலிதா 'பதவியில் இருக்கும் பெண்கள் தன்னிச்சையாக, சிறப் பாகச் செயல்பட வேண்டும்’ என்று கூறுகிறார். ஆனால் வேலூர் மாநகராட் சியிலோ அப்பட்டமாக அதிகாரத் துஷ்பிரயோகம் நடக்கிறது.

ஒரு நகராட்சியானது மாநகராட்சி அந்தஸ்தைப் பெற்ற ஆறு மாத காலத் துக்குள் கார்ப்பரேஷன்

வேலூர் மாநகராட்சிக்கு கடைசி இடம்!

பள்ளியை அமைக்கவேண்டும். மாநகராட்சி நீச்சல் குளம், முறையான சாலை வசதி போன்றவையும் ஏற்படுத்த வேண்டும். ஆனால் வேலூர் மாநகராட்சியில் அதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இப்போது அ.தி.மு.க. கவுன்சிலர்களாலேயே மேயரை சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால் பொதுமக்கள் மத்தியிலேயே மேயரும் கவுன்சிலர்களும் மரியாதைக் குறைவான வார்தைகளால் திட்டிக்கொள்கிறார்கள். இவர்கள் சண்டை போடுவதைப் பார்க்கவா மக்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்தார்கள்?

சத்துவாச்சாரி பகுதி எப்போதும் குப்பைமேடாகவே இருக் கிறது. மற்ற பகுதிகளிலும் குப்பைக்குப் பஞ்சம் இல்லை. மாதம் ஒரு முறை மன்றக் கூட்டம் போடுகிறார்கள். அங்கே, மக்கள் பிரச்னைகளைப் பற்றி பேசவிடுவதே இல்லை. மீறிப் பேசினால் கூட்டத்தை ரத்து செய்கிறார்கள். மாநகராட்சி மேயர் பதவி என்பது மக்கள் கொடுத்த உன்னதமான பணி. அது எம்.எல்.ஏ., அமைச்சர், முதல்வர் பதவியைப் போன்று மரியாதைக்கு உரியது. ஆனால், அந்தப் பதவியின் அருமை தெரியாமல் கார்த்தியாயினி இருக்கிறார்.

மாநகராட்சி அலுவலகம் உள்ளே போய் பாருங்கள். 50 சதவிகிதத்துக்கு மேல் நாற்காலிகள் காலியாக இருக்கும். இதுவரைக்கும் அந்தப் பணியிடங்களை நிரப்புகிற எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை.  வேலூர் புதுப் பேருந்து நிலையத்தின் அருகே அமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடையை முதல்வரின் ஒப்புதலோடு வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் திறந்துவைப்பதாக ஆறு மாதமாகவே சொல்லிக் கொண்டு இருக்கிறார். அதுவும் நடக்கவில்லை.  மாநகராட்சி உறுப்பினர்களின் கருத்துக்களைச் செவி கொடுத்துக் கேட்கும் எண்ணம் மேயருக்கு வரவேண்டும். அப்போதுதான் அவர்கள் என்ன சொல்கிறார்கள்... அதில் உள்ள ப்ளஸ், மைனஸ் புரியும். முதல்வர் நடத்தப்போகும் வாக்கெடுப்பில், வேலூர் மாநகராட்சிக்குத் தரத்தில் கடைசி இடம்தான் கிடைக்கும். முதல்வரின் சாட்டையடி வேலூர் மாநகராட்சிக்குத் தேவை'' என்று கொந்தளித்தார்.

இதுகுறித்து வேலூர் மாநகராட்சி மேயர் கார்த்தியாயினியிடம் பேசினோம். ''நான் தன்னிச்சையாகத்தான் செயல்படுகின்றேன். மக்களிடம் சென்று நேரடியாகக் குறைகளைக் கேட்கிறேன். அலுவலக ஊழியர்கள் பற்றாக்குறை குறித்து தலைமைக்கு அனுப்பி உள்ளேன். அதேபோல எரிவாயு தகன மேடையும் கூடிய விரைவில் திறக்கப்படும். குடிநீர்ப் பிரச்னையும் விரைவில் தீர்க்கப்படும். வேலூரை மாதிரி நகராட்சியாக நான் உருவாக்கிக் காட்டுவேன்'' என்றார்.

செயலில் காட்டுங்கள்!

- கே.ஏ.சசிகுமார், படங்கள்: ச.வெங்கடேசன்,

கா.முரளி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism