Published:Updated:

சரசுவதி மகால் நூலகத்துக்கு ஆபத்து!

தஞ்சை அலறல்

சரசுவதி மகால் நூலகத்துக்கு ஆபத்து!

தஞ்சை அலறல்

Published:Updated:
##~##
சரசுவதி மகால் நூலகத்துக்கு ஆபத்து!

'உலகப் புகழ்பெற்ற தஞ்சை சரசுவதி மகால் நூலகம் செயல்படாமல் கிடக்கிறது’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66808002) ஓர் ஆதங்கக் குரல்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தஞ்சையை ஆண்ட நாயக்கர்கள் காலத்தில், 'சரசுவதி பண்டார்’ என்ற பெயரில் இங்கு சுவடிகள் சேமிக்கப் பட்டன. பின்னர் ஆட்சிக்கு வந்த இரண் டாம் சரபோஜி மன்னரால், 1918-ம் ஆண்டு சரசுவதி மகால் என பெயர் மாற்றம் பெற்று மருத்துவம், ஜோதிடம் போன்ற அரிய நூல்கள் சேமிக்கப்பட்டன. தற்போது தமிழ், மராத்தி, சமஸ்கிருதம் உள்பட 10 மொழிகளில் சுமார் 69 ஆயிரம் நூல்களும் 39 ஆயிரம் ஓலைச் சுவடி களும் இருக்கின்றன. மேலும் சோழர் கால மதிப்பு மிக்க பொருட்களும் இங்கே இருக்கின்றன. ஆனால், பராமரிப்பே இல்லாமல் கிடக்கின்றன. ஓலைச் சுவடிகளைப் புதுப்பிக்கும் பணிகள் இப்போது நடைபெறவே இல்லை. முக்கியமான ஆவணங்களையும் அவ்வப்போது சிலர் திருடிச் சென்றுவிடுகிறார்கள் என்று குற்றச்சாட்டு!

சரசுவதி மகால் நூலகத்துக்கு ஆபத்து!

இதுகுறித்து சரசுவதி மகால் நூலகர் சங்க முன்னாள்  தலைவர் அடைக்கல சாமியைச் சந்தித்தோம்.

சரசுவதி மகால் நூலகத்துக்கு ஆபத்து!

''தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரைத் தலைவராகக் கொண்ட 13 பேர்கொண்ட ஆளுமைக் குழு சரசுவதி மகாலை நிர்வகிக்கிறது. இந்த நூலகத்தையும் பணிகளையும் கவனிக்க வேண்டிய இயக்குனர் பதவி 20 வருடங்களாகக் காலி யாக உள்ளது. வருடம்தோறும் சரபோஜி மன்னர் பிறந்த நாளன்று புத்தகங்கள் வெளியிடுவார்கள். ஆனால் கடந்த ஆண்டு விழாவே நடக்கவில்லை. இங்கு அச்சகம் உள்ளது என்றாலும், பணியாளர்கள் இல்லை என்பதால், வெளியே பணம் கொடுத்து அச்சிடுகின்றனர். ஆண்டுதோறும் நடைபெற வேண்டிய ஆளுமைக் குழு கூட்டமும், நிதிக் குழுக் கூட்டமும் ஐந்து ஆண்டுகளாகக் கூட்டப்படவில்லை.

1968-ம் ஆண்டு நவரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட கிருஷ்ணர் ஓவியம் திருடுபோனது. கடந்த 2006-ம் ஆண்டு பழைமைமிக்க 'புதிய ஆகமங்களின் முதலாம் பங்கு’ என்ற நூல் திருடப்பட்டது. பாதுகாப்புக் குறைபாட்டையும் ஆட்கள் பற்றாக்குறையையும் நீக்கி, இந்த நூலகத்தை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்'' என்று வேண்டுகோள் வைத்தார்.

நூலக நிர்வாகிகளிடம் பேசியபோது, ''நூலகத்தில் பணி இடங்கள் முறையாக நிரப்பப்படுவது இல்லை. உயர் அதிகாரி வீட்டில் வேலை செய்பவர்களின் உறவினர்களையே, தற்காலிகப் பணியாளர்களாக நியமிக்கின்றனர். அவர்கள் அந்த அதிகாரி வீட்டுக்கே வேலை செய்யப் போய்விடுகிறார்கள். மத்திய அரசு இந்த நூலகத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக ஆண்டுதோறும் 50 லட்ச ரூபாய் நிதி ஒதுக்குகிறது. ஊழியர்களின் சம்பளம், இதரச் செலவினங்களுக்கு மாநில அரசு 50 லட்ச ரூபாய் கொடுக்கிறது. இந்த நிதி போதுமானதாக இல்லை. உயர் அதிகாரி களுக்கு இடையே இருக்கும் ஈகோ காரணமாகத்தான் ஆளுமைக் குழுக் கூட்டம் நடக்காமல் தள்ளிப்போகிறது. இதே நிலை நீடித்தால் இந்த நூலகம் உருக்குலைந்து போய்விடும்'' என்று எச்சரித்தனர்.

சரசுவதி மகால் ஆளுமைக் குழு உறுப்பினரும், தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவருமான பாஸ்கரனிடம் தகவல் சொன்னோம். முழுமையாகக் கேட்டுக் கொண்டவர், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கொடுத்திருக்கிறார்.

நூலகம் அதன் மாண்பு கெடாமல் சிறக் கட்டும்!

- சி.சுரேஷ்

படங்கள்: கே.குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism