Published:Updated:

அக்காவுக்கும் மனைவிக்கும் சேர்ந்து செய்த கொடுமை!

கொந்தளிக்கும் குரு ஈஸ்வரி

அக்காவுக்கும் மனைவிக்கும் சேர்ந்து செய்த கொடுமை!

கொந்தளிக்கும் குரு ஈஸ்வரி

Published:Updated:
##~##
அக்காவுக்கும் மனைவிக்கும் சேர்ந்து செய்த கொடுமை!

'சொல்லவே நா கூசும் அளவுக்கு மோசமான கொடுமை ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறார்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்கு (044 - 66808002) தருவைகுளம் பகுதியில் இருந்து ஒரு பெண் குமுறி இருந்தார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிகிச்சை பெற்றுவரும் காளியம்மாள் மற்றும் அவருடைய மகள் குரு ஈஸ்வரி ஆகியோரைச் சந்தித்தோம். எழுந்து உட்காரக்கூட முடியாமல் படுத்த படுக்கையாக குரு ஈஸ்வரி இருக்க, காளியம்மாள் நம்மிடம் பேசினார். ''எட்டு வருஷங்களுக்கு முன்ன என் மகள் குரு ஈஸ்வரியை ராணுவத்தில் வேலைபார்க்கும் என் தம்பி முருகனுக்குக் கல்யாணம் கட்டிக்கொடுத்தோம். இப்போ அவங்களுக்கு ரெண்டு ஆண் குழந்தைங்க. கல்யாணம் முடிச்சதில் இருந்தே குரு ஈஸ்வரியோட அழகு மேல அவனுக்கு ஆத்திரம். அதனால, அவளுக்கு அடிக்கடி மொட்டை போட்டு அலங்கோலப்படுத்தி இருக்கான். நாங்க கேட்டா, 'மாமாவுக்காக கடவுள்கிட்ட வேண்டுதல்’னு சொல்லிடுவா. முருகன் சண்டிகருக்கு வேலைக்குப் போன பிறகு, தருவைகுளத்தில் எங்க அம்மா பூசம்மாளோடு என் மக இருந்தா.  

அக்காவுக்கும் மனைவிக்கும் சேர்ந்து செய்த கொடுமை!

அப்ப நாகர்கோவில்ல வேலைபார்த்துட்டு இருந்த என்னோட இன்னொரு தம்பி சண்முக சுந்தர ராஜா வீட்டுக்கு வந்திருக்கான். அவன் என் மககிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணி இருக்கான். அவனைக் கடுமையாத் திட்டிட்டு, இந்த விஷயத்தை எங்க அம்மாகிட்ட சொல்லி இருக்கா. ஆனா, அவங்க கண்டுக்கலை. அந்த தைரியத்துல மறு நாளும் முயற்சி பண்ணி இருக்கான். 'மாமாகிட்ட சொல்லிடுவேன்’னு சத்தம் போட் டிருக்கா என் மக. உடனே பயந்துபோனவன், 'என்னை உன் பொண்டாட்டி கூப்பிடுறா’னு முருகன்கிட்ட போன் பண்ணி பொய்யாத் தகவல் சொல்லிட்டான். ஏற்கெனவே சந்தேகப் பேர் வழியான முருகன் உடனே ஊருக்குக் கிளம்பிவந்துட்டான்.

அக்காவுக்கும் மனைவிக்கும் சேர்ந்து செய்த கொடுமை!

ரெண்டு பேரும் சேர்ந்து என் புள்ளையை நிர்வாணமாக்கி ஒரு டேபிள்ல படுக்கவெச்சு, கை, கால்களைக் கட்டிப் போட்டு விட்டு மிளகாய் தூள், உப்பு, சாம்பல், சுண்ணாம்பு, மணல் எல்லாத்தையும்

அக்காவுக்கும் மனைவிக்கும் சேர்ந்து செய்த கொடுமை!

சேர்த்து அவளோட உடம்பு முழுசும் அப்பியிருக்காங்க. சொல்லக் கூடாத இடத்திலும் திணிச்சிருக்காங்க. கம்பியைப் பழுக்கவைச்சு சூடும் போட்டு இருக்கானுங்க. இப்படி ஆறு நாளு அந்தக் கொடுமை நடந்திருக்கு.

அதோட எனக்கு போன் போட்டு, 'ஒரு பத்திரத்தில் கையெழுத்துப் போடணும், உடனே வா’னு கூப்பிட்டானுங்க. அதை நம்பி நானும் கிளம்பிப் போனேன். 'நீ கொடுக்கிற செல்லத்தாலதான் அவ இப்படி நடக்குறா’னு சொல்லி, என் பொண்ணுக்கு செஞ்ச அத்தனை கொடுமையையும் எனக்கும் செஞ்சுட்டானுங்க. கூடப் பிறந்த அக்கான்னுகூட அந்த அயோக்கியனுங்க பார்க்கலை. இத்தனையும் என் தாய் கண் முன்னாலதான் நடந்தது. கொடுமை தாங்காம நான் மயங்கிட்டேன். நான் மயக்கம் தெளிஞ்சு பார்த்தப்ப, அங்கே யாரும் இல்லை. கை, கால் கட்டை அவுத்துட்டு ஓடிவந்துட்டேன். யாருக்கும் அந்த நிலையில என்னை அடையாளமே தெரியலை... பைத்தியம்னே நினைச்சுட்டாங்க. அங்கே நின்ன என்னோட தோழி வசந்தாவை பெயரைச்

அக்காவுக்கும் மனைவிக்கும் சேர்ந்து செய்த கொடுமை!

சொல்லி கூப்பிட்டதும்தான் அடையாளம் தெரிஞ்சு காப்பாத்தினாங்க. என் மகள் நிலைமை என்னன்னு தெரியலையேனு கூச்சல் போட்டேன். ஊர்க்காரங்க திரண்டுவந்து வீட்டுக் கதவை உடைச்சுப் பார்த்தாங்க. அங்க என் மகள் உயிருக்குப் போராடிட்டு இருந்தா. நான் மட்டும் தப்பிக்காமல் இருந்தா... எங்க ரெண்டு பேரையும் கொடூரமாக் கொன்னேபோட்டிருப்பானுங்க அந்தப் பாவிங்க'' என்றார் ஆத்திரம் கலந்த அழுகை யோடு.

தட்டுத்தடுமாறிப் பேசினார் குரு ஈஸ்வரி. ''ஆறு நாளு கஞ்சி தண்ணி இல்லாம கிடந்தேன். 'நான் கெட்டவ’னு சொல்லச் சொல்லி அடிச்சாங்க. அடி தாங்க முடியாமச் சொன்னேன். அதை செல்போன்ல வீடியோ எடுத்தானுங்க. இதுக்கெல்லாம் காரணமான என் புருஷன், அவரோட தம்பி, எங்க பாட்டி மூணு பேரையும் தூக்குல போடணும். எம் புள்ளைங்க என்ன ஆனாங்கன்னு தெரியல. அவங்களைக் கண்டுபிடிச்சுத் தரணும்'' என்றார்அழுகையுடன்.

இவர்கள் இருவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை ஆர்.எம்.ஓ. டாக்டர் சைலஸிடம் கேட்டோம். ''அந்த ரெண்டு பேரும் மோசமான நிலையில் கொண்டுவரப்பட்டாங்க. தீவிரமான சிகிச்சைக்குப் பிறகு இப்போது தேறி வருகிறார்கள்'' என்றார்.

வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் தருவைகுளம் எஸ்.ஐ. பிரேமா, ''எட்டுப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து இருக்கிறோம். இவர்களது பாட்டி பூசம்மாளைக் கைது செய்து விட்டோம். அண்ணன், தம்பி இருவரையும் தேடி வருகிறோம்'' என்றார். தலைமறைவாகி இருக்கும் முருகன், சண்முகசுந்தர ராஜா இருவரையும் பற்றி மற்றொரு சகோதரரான கணேசனிடம் கேட்டோம். ''முருகனும் சண்முகசுந்தர ராஜாவும் செய்திருப்பது மிகப் பெரிய தவறு. வேறு என்ன சொல்வது?'' என்றார் வருத்தத் துடன்.  

காட்டுமிராண்டி காலத்தில்தான் இன்னும் இருக்கிறோமா?

- எஸ்.சரவணப்பெருமாள்

படங்கள்: ஏ.சிதம்பரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism