Published:Updated:

விஜயகாந்த்தின் உதவி... ஜானகி கல்லூரிக்கு நோட்டீஸ்...

இரண்டுக்கும் தொடர்பு உண்டா?

விஜயகாந்த்தின் உதவி... ஜானகி கல்லூரிக்கு நோட்டீஸ்...

இரண்டுக்கும் தொடர்பு உண்டா?

Published:Updated:
விஜயகாந்த்தின் உதவி... ஜானகி கல்லூரிக்கு நோட்டீஸ்...
##~##

''ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்புக்கும் பூகம் பத்துக்கும் தொடர்பு உண்டு. உலகில் நடக்கும் வெவ்வேறு சம்பவங்கள் ஒன்றுக்கொன்று தொடர் புடையவை'' - கேயாஸ் தியரியின் இலக்கணம் இது. அரசியலுக்கும் இந்தத் தியரி பொருந் துவதாக கடந்த பத்து நாட்களுக்குள் நடந்த இரு வேறு சம்பவங்களை முடிச்சுப் போட்டு ஹாட் டாபிக் ஒன்று அரசியலில் அலையடிக்கிறது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சம்பவம் ஒன்று: தன்னுடைய பிறந்த நாளை  முன்னிட்டு தே.மு.தி.க. அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் விஜயகாந்த். அப்போது, எம்.ஜி.ஆர். வாய் பேசாதோர் காது கேளாதோர் பள்ளிக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கினார். அந்தப் பள்ளியை நடத்தும் லதா ராஜேந்திரன், நிதியைப் பெற்றுக் கொண்டார். இது நடந்தது ஜூலை 30-ம் தேதி.

சம்பவம் இரண்டு: அடையாறில் சத்யா ஸ்டுடியோ இருந்த இடத்தில் இப்போது எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி நடந்து வருகிறது. இந்தக் கல்லூரிக்குள் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாகப் புகுந்து அங்கே கட்டிவந்த கட்டடத்தை ஆய்வு செய்தனர். கல்லூரியில் கட்டப்பட்டு வந்த கட்டடம், அனுமதி இல்லாமல் கட்டப்படுவதால்,  அந்தப் பணியை நிறுத் தும்படி நோட்டீஸ் கொடுத்தது மாநகராட்சி. இது நடந்தது ஆகஸ்ட் 14-ம் தேதி.

விஜயகாந்த்தின் உதவி... ஜானகி கல்லூரிக்கு நோட்டீஸ்...

முடிச்சு: இந்த இரண்டு சம்பங்களுக்கும்தான் முடிச்சு போடுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ''ஜானகி எம்.ஜி.ஆர். கல்லூரியின் தாளாளராகவும் எம்.ஜி.ஆர் காது கேளாதோர் பள்ளியின் முதல் வராகவும் இருக்கிறார் லதா ராஜேந்திரன். இவர், விஜயகாந்த்திடம் நிதி பெற்றதை அ.தி.மு.க. ரசிக்கவில்லை. அதனால்தான் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது'' என்றார்கள்.

விஜயகாந்த்தின் உதவி... ஜானகி கல்லூரிக்கு நோட்டீஸ்...

பின்னணி: அவர்களே இந்த இரண்டு சம்பங் களுக்குப் பின்னால் நடந்த பழைய சம்பவங் களையும் நினைவுகூர்கிறார்கள். ''எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சிக்காக எம்.ஜி. ஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு 2008-ல் விசிட் அடித்தார் ஜெயலலிதா. அங்கே, எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள்களின் குடும்பத்தினருடன் பேசினார். ராமாவரம் தோட்டத்தில்

விஜயகாந்த்தின் உதவி... ஜானகி கல்லூரிக்கு நோட்டீஸ்...

நடந்துவரும் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் வாய் பேசாதோர் பள்ளியைப் பார்வையிட்டு அங்கே நடந்த நிகழ்ச்சியிலும் ஜெயலலிதா கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் லதா ராஜேந்திரனும் பங்கெடுத்துக் கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில்தான் 'இது எங்களின் இல்லம். எங்களுக்கு இங்கு அனைத்து உரிமையும் உண்டு. இதுகுறித்து யாரும் கருத்துக் கூற வேண்டியது இல்லை. எம்.ஜி.ஆர். நினைத்தபடியே காது கேளாதோர் பள்ளி சிறப்புடன் விளங்குகிறது. எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்திருந்தால், இந்தப் பள்ளியைப் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார். அதற்காக, லதா ராஜேந்திரன் குடும்பத்தாருக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்’ என்று பாராட்டிய ஜெயலலிதா, 'சிலர் தாங்கள்தான் எம்.ஜி.ஆரின் வாரிசு என்று கூறிவருகிறார்கள். இன்ஸ் டன்ட் காபி தயாரிப்பது போல இன்ஸ்டன்ட் தலைவர் உருவாகிவிட முடியாது. எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது. புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாகி விடும். எம்.ஜி.ஆரின் ஒரே வாரிசு நான்தான். அதைத் தேர்தலில் மக்கள் நிரூபிப்பார்கள்’ என்று மறைமுகமாக விஜயகாந்த்தை விளாசினார் ஜெயலலிதா.

எம்.ஜி.ஆர். காது கேளாதோர் வாய் பேசா தோர் பள்ளிக்கு ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்த நாளின்போது 50 ஆயிரம் ரூபாய் நிதியை விஜயகாந்த் வழங்கி வருகிறார். 1992-ம் ஆண்டில் இருந்து இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர்பைத் துண்டிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ராமாவரம் தோட்டத்துக்கே ஜெயலலிதா அப்போது போனதாகச் சொல்வார்கள். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நடந்த தனது பிறந்த நாள் நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். வாய் பேசாதோர் காது கேளாதோர் பள்ளிக்குத் தனது சொந்தப் பணத் தில் இருந்து 10 லட்ச ரூபாய் கொடுத்தார் ஜெயலலிதா. அந்தப் பணத்தை லதா ராஜேந்திரன்தான் பெற்றுக்கொண்டார். அதன்பிறகு அரசியல் சூழல் மாறி, ஜெயலலிதாவும் விஜயகாந்த்தும் கூட்டணி அமைத்தனர். கூட்டணி விரிசலுக்குப் பிறகுதான் நோட்டீஸ் விவகாரம்!'' என்கிறார்கள்.  

உண்மை இதுதானா?

லதா ராஜேந்திரன்: ''ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அனுமதி வாங்கி கட்டடத்தைக் கட்டி முடித்தோம். அதில் ஒரு வகுப்பறை மட்டும் அப்போது கட்ட முடியவில்லை. இப்போது அதற்கு சீலிங் போட ஆரம்பித்த நிலையில்தான் மாநகராட்சி நோட்டீஸ் கொடுத்திருக்கிறது. பிளான் வாங்கினால், அதை மூன்று ஆண்டுகளுக்குள் கட்ட வேண்டும். ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டதால், மீண்டும் புதுப்பித்து அனுமதி வாங்கிய பிறகுதான் கட்ட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள் அதிகாரிகள். கல்லூரிக்கு அருகே டீக்கடை நடத்தும் ஒருவர் கல்லூரி முன் பேனர் வைப்பதற்காக அனுமதி கேட்டு, நாங்கள் தரவில்லை. அவர்தான் மாநகராட்சியிடம் மீடியாவிடமும் சொல்லி கல்லூரி சீல் வைக்கப்பட்டதாக பரபரப்பைக் கிளப்பி இருக்கிறார். விஜயகாந்த்திடம் நிதி வாங்கியது உண்மைதான். ஆனால், ஒவ்வொரு வருடமும் இந்த நிதியை அவர் எங்களுக்குத் கொடுத்து வருகிறார். அதற்கும் மாநகராட்சி நோட்டீஸுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.''

வரதராஜன், மாநகராட்சி மண்டல அலுவலர்: ''பிளான் அனுமதி வாங்கிய பின் மூன்று ஆண்டுகளுக்குள் கட்டடம் கட்ட வேண்டும் என்பது விதிமுறை. அந்த விதிமுறையை கல்லூரி நிர்வாகம் கடைப்பிடிக்கவில்லை. அதற்காக நோட்டீஸ் கொடுத்து இருக்கிறோம். அவர்கள் உரிய விளக்கம் கொடுத்தால் பரிசீலிப்போம்.''

ஜேப்பியார் கல்லூரியில் கட்டடம் கட்டும்போது நடந்த விபத்தில் 10 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்துதான் மாநகராட்சி இந்த முன்எச்சரிக்கை நடவடிக்கையை எடுத்திருக்கிறது என்று ரிப்பன் மாளிகை வட்டாரம் சொல்கிறது.

அரசியல் காரணம் இல்லை என்றால் நல்லது!

- எம்.பரக்கத் அலி

படங்கள்: சு.குமரேசன், ஆ.முத்துகுமார்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism