Published:Updated:

கால்கள் விரைத்துச் சாகும் பசுக்கள்!

ஆந்த்ராக்ஸ் அச்சத்தில் பெரம்பலூர்

கால்கள் விரைத்துச் சாகும் பசுக்கள்!

ஆந்த்ராக்ஸ் அச்சத்தில் பெரம்பலூர்

Published:Updated:
##~##
கால்கள் விரைத்துச் சாகும் பசுக்கள்!

சுக்களின் சாவு பதற வைப்பதாக இருக்கிறது! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெரம்பலூர் மாவட்டம், அகரம் சீகூரை அடுத்துள்ள கீழப் பெரம்பலூர் கிராமத்தில், 5,000-க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகள் உள்ளன. நாள் ஒன்றுக்கு 3,000 லிட்டர் பால் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த ஒரு மாதத்துக்குள் அடுத்தடுத்து 15-க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்து போகவே, அதிர்ந்துபோய் என்ன செய்வது என்று அறியாமல் திகைக்​கிறார்கள் விவசாயிகள். செல்வராஜுடைய கறவை மாடுதான் இந்த மர்ம மரணத்தின் முதல் பலி. இது கடந்த மாதம் 23-ம் தேதி நடந்தது.

நடந்ததை விளக்குகிறார் செல்வராஜ், ''மாடு, கண்ணு போட்டு 10 நாள் ஆச்சுங்க. ஒரு வேளைக்கு 7 லிட்டர் வரைக்கும் பால் கொடுக்கும். அந்த மாடு மேய்ச்சலில் இருந்து வந்ததும், பாலைக் கறந்து பண்ணையில் சேர்த்துட்டு வந்தேன். சாயங்காலம் 7 மணி இருக்கும், மாடு கத்துற சத்தம் கேட்டு ஓடிப்போய்ப் பார்த்தேன். கீழே விழுந்து கிடந்தது. கால் விரைச்சுப்போய், வயிறு உப்பி, வாயில் நுரை தள்ளிக்கிடந்தது. நாங்க எதையாவது செஞ்சி மாட்டைக் காப்பாத்தலாம்னு யோசிப்பதற்குள் மாடு துடிதுடிச்சு செத்துப்போச்சு'' என்றார் வருத்தத்துடன்.

கால்கள் விரைத்துச் சாகும் பசுக்கள்!

இவரின் மாடு இறந்த பிறகு, அடுத்தடுத்த மூன்று தினங்களில் வசந்தா, செல்வி, மல்லிகா ஆகியோரின் மாடுகளும் இறந்தன. பதற்றம் அடைந்த விவசாயிகள் உடனே கால்நடை மருத்துவர்களை அழைத்து வந்து மற்ற மாடுகளுக்குச் சிகிச்சை அளித்தனர். ஆனாலும், மாடுகள் இறப்பைத் தடுக்க முடியவில்லை.

கால்கள் விரைத்துச் சாகும் பசுக்கள்!

கடைசியாகப் பசுவைப் பறிகொடுத்த கெங்காசலம், ''செல்வராஜு டைய மாடு செத்த பிறகு, வரிசையா

கால்கள் விரைத்துச் சாகும் பசுக்கள்!

பசுக்கள் செத்துப் போகவே, கவர்மென்ட் டாக்டர்களுக்குத் தகவல் கொடுத்தோம். ஊருக்கு வந்த கால்நடை மருத்துவர் சரவணன் ஊரில் உள்ள எல்லா மாட்டுக்கும் தடுப்பு ஊசி போட்டார். ஊசி போட்ட ஆறாவது நாளே என்னுடைய மாடு கால் விரைச்சு, வயிறு உப்பிப்போய் இருந்தது. உடனே டாக்டருக்குத் தகவல் கொடுத்தேன். மாட்டைப் பரிசோதித்த டாக்டர், 'மாட்டுக்குத் தடுப்பு ஊசி போட்டா, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கு 24 நாள் வரைகூட ஆகும்’னு சொல்லி, இன்னொரு ஊசி போட்டுட்டுப் போனார். டாக்டர் போன கொஞ்ச நேரத்தில் என் மாடு செத்துப்போச்சு. தொடர்ந்து மாடுகள் உயிர் இறப்பதால், ஊரில் அடுத்து யார் வீட்டில் மாடு சாகுமோ என்று பயந்து கிடக்கிறோம்'' என்றார்.

வார்டு உறுப்பினரான ரெங்கநாதன், ''பிரச்னை பெரிதாவது தெரிந்ததும் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள், மருத்துவர்கள் ஊருக்கு வந்து, விசாரணை நடத்தி, மாடுகளின் ரத்த மாதிரிகளைச் சேகரித்து

கால்கள் விரைத்துச் சாகும் பசுக்கள்!

இருக்கிறார்கள். மாடுகளின் வாயிலும் ஆசனவாயிலும் ரத்தக் கசிவு, உடல் நடுக்கம், கால் விரைத்துப்போவது போன்றவை ஆந்த்ராக்ஸ் நோயின் அறிகுறி என்று சொல்கிறார்கள். ஆந்த் ராக்ஸ் ஒரு கொடூரமான நோய், ஒரு முறை இந்த நோய் வந்தால், கொத்துக்கொத்தாக மாடுகள் பலியாகும். இப்போது தாக்கி இருப்பது ஆந்த்ராக்ஸ் நோய்தானா என்பதைச் சொல்லாமல், கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் உண்மையை மறைக்கப் பார்க்கிறார்கள். இந்த நோயை முதலிலேயே கண்டுபிடித்து பலிகளைத் தடுக்க வேண்டியது மருத்துவ அதிகாரிகளின் கடமை.

பல வருடங்களாகவே எங்கள் ஊரில் கால்நடை மருத்துவ துணை மையம் அமைக்க வேண்டும் என்று கேட்கிறோம். இங்கே துணை மருத்துவ மையம் இருந்திருந்தால், உடனே சிகிச்சை செய்து மாடுகளைக் காப்பாற்றி இருக்க முடியும். ஒவ்வொரு விவசாயியும் 25,000 ரூபாய் மதிப்புள்ள பசுக்களை இழந்து நிற்கிறார்கள். விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார்.

இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்டக் கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குனர் மருத்துவர் செல்வவிநாயகம், ''மாடுகள் இறந்தது குறித்து, யாரும் எங்களுக்கு முறையான தகவல் கொடுக்க வில்லை. கடைசியாக கெங்காசலம் என்பவரது மாடு இறந்த தகவல் கிடைத்த உடனே, திருச்சியில் இருந்து கால்நடை நோய்ப் புலனாய்வுப் பிரிவின் மருத்துவக் குழுவை வரவழைத்தோம். அந்தக் கிராமத்தில் 800 கால்நடைகளுக்குத் தடுப்பு ஊசிகள் போட்டுள்ளோம். மாடுகளின் ரத்த மாதிரி களைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி இருக்கிறோம். அறிக்கை கிடைத்த பிறகுதான் மாடுகளின் இறப்புக்குக் காரணம் தெளிவாகும். இது போன்ற தொற்று நோய்கள் காற்றில் பரவி மற்ற கால் நடைகளைத் தாக்கும் என் பதால் கீழப்பெரம்பலூர் கிராமத்தைச் சுற்றி எட்டு கிலோ மீட்டர் அளவுக்குள் இருக்கும் கால்நடைகளுக்கும் தடுப்பு ஊசிகள் போட்டு இருக்கிறோம்.

அந்தக் கிராமத்தில் துணை மருத்துவ மையம் அமைப்பதற்கும் விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கவும் அரசுக்குப் பரிந்துரை செய்கிறேன்'' என்றார்.

அப்படியே நடக்கட்டும்!

- சி.ஆனந்தகுமார்

படங்கள்: எம்.ராமசாமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism