Published:Updated:

ஊர் ஒண்ணு... பிரசிடென்ட் அஞ்சு பேர்!

அலறும் அய்யம்பட்டி

ஊர் ஒண்ணு... பிரசிடென்ட் அஞ்சு பேர்!

அலறும் அய்யம்பட்டி

Published:Updated:
##~##
ஊர் ஒண்ணு... பிரசிடென்ட் அஞ்சு பேர்!

''எங்க ஊர்ல அஞ்சு பிரசிடென்ட் களை வெச்சுக்கிட்டு நாங்க படுற அவஸ்தை இருக்கே... அய்யய்யய் யய்யோ...'' என்று நடிகர் சந்தானம் மாதிரிப் புலம்பித் தவிக்கிறார்கள், அய்யம்பட்டி கிராம மக்கள்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு ஒன்றியத்தில் இருக்கிறது 3,000 பேரைக்கொண்ட அய்யம்பட்டி. 'குரங்கு கையில் மாட்டின பூமாலை’ கணக்காக ஆதனக்கோட்டை, வடக்கூர் தெற்கு, பாச்சூர், பொய்யுண்டார் கோட்டை, கோனூர் தெக்கூர் என்று ஐந்து பஞ்சாயத்துகளில் இந்த ஊர் பகுதிப் பகுதியாக இணைக்கப்பட்டு உள்ளது. அதனால், இந்தக் கிராம மக்கள் எந்த அடிப்படை வசதிகளையும் பெற முடியாமல், 'சிட்டிசன்’ அத்திப்பட்டி கணக்காக தனித்தீவாக அல்லல்படுகிறார்கள்.

விஷயத்தைக் கேள்விப்பட்டு அய்யம்பட்டிக்கு விசிட் அடித்தோம். அந்த ஊரைச் சேர்ந்த வீரமுத்து, ''எங்க ஊரை முழுசாச் சேர்த்து ஒரே பஞ்சாயத்து ஆக்குங்கன்னு எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்துல இருந்து போராடிக்கிட்டு இருக்கோம். அதுக்குப் பிறகு முதல்வராக வந்த கருணாநிதி, ஜெயலலிதானு எல்லோர்கிட்டேயும் மனு கொடுத்துட்டோம். ஒண்ணும் நடக்கலை. எங்க தொகுதி எம்.எல்.ஏ-க்களா இருந்த தங்கமுத்து, ராமச்சந்திரன், ராஜேந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, இப்போதைய அமைச்சர் வைத்திலிங்கம்னு எல்லார்கிட்டேயும் குமுறியும் எதுவும் நடக்கலை'' என்றார் பரிதாபமாக.

ஊர் ஒண்ணு... பிரசிடென்ட் அஞ்சு பேர்!

அடுத்துப் பேசிய முரு கேசன் என்பவர், ''இந்த அஞ்சு பிரசிடென்ட் பிரச் னையால எந்த அடிப் படை வசதியும் எங்க ஊருக்குக் கிடைக்கல. அரசு தரும் எந்த நலத் திட்டங்களையும் நாங்க வாங்க முடியலை. குடிக்கத் தண்ணீர் வசதிகூட இல்லை. எங்க ஊர்ல இருக்கிற தொடக்கப் பள் ளியில் 122 பிள்ளைங்க படிக்குது. ஆனா, மூணே ஆசிரியர்கள்தான் இருக்காங்க. அந்தப் பள்ளிக்கு நடுநிலைப் பள்ளி ஆகும் அத்தனை தகுதியும் இருந்தும் எந்த பிரசிடென்ட்டும் முன்வந்து முயற்சி எடுக்கலை. எங்க ஊர்ல இருக்கிற ஒரே குளம் புதுக்குளம். அதைத்தான் கால்நடைகள் குடிக்கவும், மனுசங்க குளிக்கவும் பயன்படுத்திட்டு வர்றோம். அதைத் தூர் வாரணும்னு எல்லா பிரசிடென்ட்கிட்டேயும் கேட்டுப் பார்த்துட்டோம். 'அது எங்க லிமிட்ல வரலை’னு எல்லோரும் கைவிரிச்சுட்டாங்க. அதனால, மழைக் காலத்துலகூட அந்தக் குளத்துல தண்ணி தேங்குறது இல்லை.

ஊர் ஒண்ணு... பிரசிடென்ட் அஞ்சு பேர்!

எங்க ஊர்ல நிறைய பேர் பசு மாடு வெச்சு பால் கறந்துதான் பொழப்பு நடத்து றோம். ஆனா, அதுக்கு

ஊர் ஒண்ணு... பிரசிடென்ட் அஞ்சு பேர்!

உதவி பண்ற மாதிரி பால் சொசைட்டி கிடையாது. நாலு கிலோ மீட்டர் போய் ஆதனைக்கோட்டையிலதான் பாலைக் கொடுத்துட்டு வர்றோம். அதைவிடக் கொடுமை, லோன் வாங்க பேங்குக்குப் போனா, 'அய்யம்பட்டினு ஊரே மேப்ல இல்லையே? உங்களுக்கு எப்படி லோன் தர முடியும்?’னு கைவிரிக்கிறாங்க'' என்றார் விரக்தியாக.

கருப்பையன் என்பவர், ''வி.ஏ.ஓ-வும் அஞ்சு பேர்தான். வெள்ள நிவாரணம் உள்ளிட்ட அரசு சலுகைகள் கேட்டா, 'எங்க லிமிட்ல வரலை’னு சொல்லி அந்தப் பணத்தை ஏப்பம் விடுறாங்க. எங்க ஊரை தனிப் பஞ்சாயத்து ஆக்குங்கன்னு 500 மனுக்களுக்கு மேல போட்டு இருப்போம். 15 கலெக்டர், 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகளைப் பாத்துட்டோம். உண்ணாவிரதம், மறியல், ரேஷன் கார்டைத் திருப்பித் தர்றதுன்னு எல்லாப் போராட் டங்களையும் நடத்தியாச்சு. ஆனா, ஒரு துரும்பும் அசையலை. எங்கள்

ஊர் ஒண்ணு... பிரசிடென்ட் அஞ்சு பேர்!

கோரிக்கை ஒண்ணே ஒண்ணுதான். 'எங்க ஊரைத் தனிப் பஞ்சாயத்து ஆக்கணும். இல்லாட்டி எங்க ஊர் மொத்தத்தையும் ஏதாவது ஒரு பஞ்சாயத்தின் கீழ் இணைக்கணும். இல்லைன்னா இனி வரும் ஒவ்வொரு தேர்தலையும் புறக்கணிப்போம்'' என்றார். ''எங்க ஊர் தனிப் பஞ்சாயத்து ஆகக் கூடாதுன்னு அஞ்சு பிரசிடென்ட்களுமே திட்டம் போட்டு வேலை செய்கிறார்கள்'' என்று புகார் சொன்னார், ஊரின் முக்கியஸ்தரான ராமலிங்கம்.

ஐந்து பிரசிடென்ட்களில் ஒருவ ரான ஆதனக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகத்திடம், ''அய்யம்பட்டி தனிப்பஞ்சா யத்து ஆவதற்கு முட்டுக்கட்டைப் போடுகிறீர்களாமே?'' என்றோம்.

''அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லைங்க. எனக்கு வர்ற சொற்ப நிதியை வெச்சுக்கிட்டு என் பஞ்சாயத்தின் கீழ் வரும் அந்த ஊர்ல உள்ள சொற்ப வீடுகளுக்கு என்னால் என்ன பண்ண முடியும்? நானே அந்த ஊர் தனிப்பஞ்சாயத்து ஆனா நல்லதுன்னுதான் நினைக்கிறேன்'' என்றார்.

தஞ்சை மாவட்டக் கலெக்டர் பாஸ்கரனின் கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு சென்றோம். நாம் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டவர், ''இது சம்பந்தமாக அதிகாரிகளை விசாரிக்கச் சொல்கிறேன். அந்த ஊர் வளர்ச்சிக்கு தேவையானதைச் செய்வோம்'' என்று நம்பிக்கை வார்த்தைகளில் உறுதி கொடுத்தார்.

பார்க்கலாம்!

- சி.சத்தியகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism