Published:Updated:

அங்கம்மாள் காலனி ராமானந்த சுவாமிக்குச் சொந்தமா?

சேலத்தில் அதிரடித் திருப்பம்

அங்கம்மாள் காலனி ராமானந்த சுவாமிக்குச் சொந்தமா?

சேலத்தில் அதிரடித் திருப்பம்

Published:Updated:
##~##
அங்கம்மாள் காலனி ராமானந்த சுவாமிக்குச் சொந்தமா?

'அங்கம்மாள் காலனி இருக்கும் இடம் ராமானந்த சுவா மிக்குச் சொந்தமானது. அதை அங்கம்மாள் காலனி மக்கள் ஆக்கிரமிப்பு செய்துவிட்டார்கள். காவல் துறை மீட்டுத் தரவேண்டும்’ என்று, பி.ஜே.பி-யின் மாநிலப் பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் பகீர் புகார் கிளப்பவே, மீண்டும் ஒரு திருப்பம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை குண்டர் தடுப்புச் சட்டத்தின்படி கைது செய்யக் காரணமான இடம் சேலம் அங்கம்மாள் காலனி. அந்த இடம் குறித்து இப்போது புது சர்ச்சை கிளம்பி இருக்கிறது.

சேலம் மாநகரப் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துவிட்டு வந்த ஆடிட்டர் ரமேஷை சந்தித்துப் பேசினோம். ''அங்கம்மாள் காலனி முழுவதுமே ஏ.என்.எஸ். என்ற நகைக்கடை அதிபரின் குடும்பச் சொத்து. அந்த இடத்தில் 8.7 ஏக்கர் நிலம் இருந்தது. அதில் இருந்து அவர்களிடம் வேலை பார்த்த மூன்று குடும்பங்களுக்கு 6,750 சதுர அடி நிலத்தை தானமாகக் கொடுத்தனர். 10 ஆயிரம் சதுர அடி நிலத்தை அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பாலவெங்கட்ராம செட்டியார் என்பவருக்கு ஒதுக்கினர். ஆனால், அவர் சன்னியாசம் வாங்கிக்கொண்டு சாந்தா ஆஸ்ரமத்தில் ராமானந்த சுவாமியாக மாறிவிட்டார். அவர் இறந்த பிறகு அவருக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அவர் குடும்பத்தார் மண்டபம் கட்டி, நந்தவனம் அமைத்து தினமும் பூஜை செய்து வந்தனர்.

அங்கம்மாள் காலனி ராமானந்த சுவாமிக்குச் சொந்தமா?

அந்த இடத்தைத்தான் வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளர் கவுசிக பூபதி, சர்வே எண்ணை மாற்றிப்

அங்கம்மாள் காலனி ராமானந்த சுவாமிக்குச் சொந்தமா?

பதிவு செய்துகொண்டார். அப்போது இது சம்பந்த மாக நானே வீரபாண்டி ஆறுமுகத்திடம் பேசினேன். ஆனால் அவர், 'அதெல்லாம் சரியாத்தான் இருக்கு’ என்று அனுப்பி விட்டார். அப்போது கமிஷனராக இருந்த கோபாலகிருஷ்ணனிடம் புகார் கொடுத்தோம். அப்போது, தி.மு.க. ஆட்சியில் இருந்த தால் எங்கள் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதற்கான ஆதாரங்கள் எல்லாமே எங்களிடம் இருக்கிறது. ஒருவர் சன்னியாசம் வாங்கிக் கொண்டாலே அவர்கள் பொதுவானவர்கள். அவரை குருவாகவும் வழிகாட்டியாகவும் யார் வேண்டுமானாலும் ஏற்றுக்கொண்டு தரிசிக்கலாம். அவருக்குச் சொந்தமான சொத்தில் யார் வேண்டும் என்றாலும் சமாதி அமைத்து வழிபாடு செய்யலாம். இது பொதுச்சொத்து. அதனால், முதல்வர் ஜெய லலிதா இந்த விஷயத்தில் தலையிட்டு, அங்கம்மாள் காலனியை மீட்டுக் கொடுத்து, ராமானந்த சுவாமியை வழிபாடு செய்ய உதவ வேண்டும்'' என்று சொன்னார்.

அங்கம்மாள் காலனிக்கு நிலம் கொடுத்த ஏன்.என்.எஸ். நகைக்கடை உரிமையாளரான ஸ்ரீராமிடம் பேசினோம். ''1942-ல் பதிவு செய்யப்பட்ட ரிஜிஸ்டர் டாக்குமென்ட்டில் அங்கம்மாள் காலனியில் குடியிருப்பவர்களுக்கு 6,750 சதுர அடி மட்டும்தான் கொடுக்கப்பட்டது.

அங்கம்மாள் காலனி ராமானந்த சுவாமிக்குச் சொந்தமா?

மீதமுள்ள 10 ஆயிரம் சதுர அடியில் எங்க தாத்தா ராமானந்த சுவாமிகளுக்கு மண்டபம் இருந்தது. நாங்கள் தொடர்ந்து ஏரிக்கரை மீது இரட்டை மாட்டு வண்டியில் போய் பூஜைகள் செய்து வந்தோம். வீரபாண்டி ஆறுமுகம் ஆக்கிரமிப்பு செய்த பிறகுதான் போக முடியவில்லை. ராமானந்த சுவாமிகளுக்குச் சொந்தமான அந்த இடத்தை மீட்டு மண்டபம் கட்டி சிறுவர் பூங்கா அமைக்கத் திட்டமிட்டு இருக்கிறோம்'' என்றார்.

அங்கம்மாள் காலனி குடியிருப்புவாசியான கணேசன், ''எனக்குத் தெரிந்து அங்கம்மாள் காலனியில் மண்டபமோ, நந்தவனமோ எதுவும் கிடையாது. நான் சின்னப் பையனாக இருந்த நேரத்தில் இங்கே ஒரு சமாதி இருந்தது. இந்தப் பகுதி ஏரியாகவும், புதராகவும் இருந்ததால் இங்கு வருவதற்கே பயப்படுவார்கள். அந்த சமாதி அழிந்து ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டது. அதனால்தான் அந்த இடத்தில் நாங்கள் வீடு கட்டி குடி வந்தோம். கடவுள் பெயரைச் சொல்லி எங்களை இப்போது விரட் டப் பார்க்கிறார்கள். இப்போது, தேவைஇல்லா மல் ஆடிட்டர் ரமேஷ் உள்ளே நுழைந்து புகார் கொடுத்து இருக்கிறார். தி.மு.க. ஆட்சியில் ரமேஷ§ம் பல கட்டப் பஞ்சாயத்துகளை செய் தவர்தான். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்களும் கமிஷன ரிடம்  மனு கொடுத்துள்ளோம்'' என்றார் கோபமாக.

சேலம் போலீஸ் கமிஷனர் மாஹாலியிடம் பேசியபோது, ''இரண்டு தரப்பிலும் புகார் கொடுத்து இருக்கிறார்கள். சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படாமல் எங்களால் பாதுகாப்பு மட்டும்தான் கொடுக்க முடியும். இது சிவில் பிரச்னை என்ப தால், அவர்கள் நீதிமன்றத்தைதான் நாட வேண்டும். அந்த இடம் யாருக்குச் சொந்தமானது என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய முடியும்'' என்றார் தெளிவாக.

முடிந்து விட்டதாக நினைத்த விவகாரம் மீண்டும் புகைகிறது!

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: எம்.விஜயகுமார்          

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism