Published:Updated:

கூடங்குளத்தில் கறுப்பு தினம்!

யுரேனியம் அனுமதிக்கு எதிர்ப்பு

கூடங்குளத்தில் கறுப்பு தினம்!

யுரேனியம் அனுமதிக்கு எதிர்ப்பு

Published:Updated:
##~##
கூடங்குளத்தில் கறுப்பு தினம்!

ணு உலைக்கு எதிரான போராட்டம் ஒரு வருடத்தை எட்டிய நிலையில், இடிந்தகரை மக்கள் சுதந்திர தினத்தைக் கறுப்பு தினமாக அனுசரித்துத் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இதனால் போராட்டக் குழுவினர் மீதான வழக்குகளின் எண்ணிக்கையில் ஒன்றை அதிகப்படுத்தி இருக்கிறது காவல் துறை. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்தகரை கிராமத்தில் நடந்துவரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் கடந்த 16-ம் தேதியுடன் ஒரு வருடத்தை எட்டியது. ஓரு பக்கம் போராட்டம் நடந்துவந்தபோதிலும், அணு உலையை விரைவில் திறப்பதற்கான பணிகளில் இந்திய அணு சக்திக் கழகம் தீவிரம் காட்டியதால், கூடங்குளம் முதல் அணு உலையில் யுரேனியத்தை நிரப்ப அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி கிடைத்துவிட்டது. இதனால் அணு மின் நிலைய அதிகாரிகள் அதற்கான பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கினர்.

கூடங்குளத்தில் கறுப்பு தினம்!

இந்த விவகாரம் போராடுபவர்களை டென்ஷன் ஆக்கவே, கூடங்குளம் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டதுடன் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. ஏற்கெனவே, அணு உலையில் இருந்து

கூடங்குளத்தில் கறுப்பு தினம்!

மூன்று கி.மீ தூரத்துக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்த நிலையில், புதிய சூழலைக் கவனத்தில்கொண்டு அதனை 7 கி.மீ. தூரமாக அதிகரித்து உத்தரவிட்டார், மாவட்ட கலெக்டர் செல்வராஜ். அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டுவிடாமல் தடுக்க, கூடுதலாக 12 கம்பெனி போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களான சுப.உதயகுமாரன், புஷ்பராயன் ஆகியோரிடம் பேசினோம். ''நாலைந்து மாதங்களுக்கு முன்பு ரஷ்யா சென்ற பிரதமர், 'இரண்டு வாரத்தில் அணு உலை செயல்படும்’னு சொன்னார். அதற்கான வாய்ப்பே இல்லை என்பது தெரிந்தும் அப்படி ஒரு தவறான தகவலைச் சொன்னார்.  மத்திய அமைச்சர் நாராயணசாமி எந்த இடத்தில் மைக் கிடைச்சாலும், '15 நாட்களில் கூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடங்கும்’னு சொல்லிவருகிறார். இப்போது அணு உலைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அதில் இறுதித் தீர்ப்பு வர இருக்கும் சூழலில், யுரேனியம் நிரப்ப அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி கொடுத்திருப்பது ஜனநாயக விரோதம். இதனை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்று நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர முடிவு செய்துள்ளோம்.

ஜனநாயகத்தில் எங்கள் உரிமைகள் மறுக்கப்படுவதால் எங்கள் சுதந்திரம் முழுமையை அடையவில்லை என்பதாகவே உணர்கிறோம். அதனால் சுதந்திர தினத்தைக் கறுப்பு தினமாக அனுசரித்தோம். எங்களுக்கான சுதந்திரம் பறிக்கப்படுவதால் பாடை கட்டி எதிர்ப்பைப் பதிவு செஞ்சிருக்கோம். அணு உலையை அகற்றும் வரை எங்கள் போராட்டம் ஓயாது'' என்றார்கள் காட்டமாக.

இடிந்தகரையில் ஆகஸ்ட் 15-ம் தேதி கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் ஜனநாயகத்தைப் பாடை யாகக் கட்டி, ஒப்பாரிவைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் எரித்தனர். வீடுகளில்

கூடங்குளத்தில் கறுப்பு தினம்!

கறுப்புக் கொடியை ஏற்றி இருந்தனர். இந்தப் போராட்​டம் பற்றிக் கேள்விப்பட்ட போலீஸார் போராட்டக் குழுவைச் சேர்ந்த சுப.உதயகுமாரன், புஷ்பராயன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது தேசியக் கொடியை அவமதித்ததாக வழக்குப் பதிவு செய்தனர்.

கூடங்குளம் நிலைய இயக்குநர் சுந்தரிடம் பேசினோம். ''அணு உலையில் இன்னும் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்து சில கட்டுப்பாடுகளை அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையம் விதித்து இருக்கிறது. அந்தக் கட்டுப்பாடுகளை நிறைவேற்றிய பின்னரே எரிபொருளை நிரப்பலாம் என்று தெரிவித்து இருப்பதால், அதற்கான வேலைகளைச் செய்துவருகிறோம். ஆணைய அதிகாரிகள் திருப்தி ஏற்பட்ட பின்னரே யுரேனியத்தை நிரப்ப ஒப்புதல் கொடுப்பார்கள்.  

அணு உலையில் மின் உற்பத்தியின்போது ஒரு செயின் ரியாக்ஷன் நடக்கும். அது தடையின்றி நடக்க ஏதுவாக இருக்கிறதா என்பதை எல்லாம் அணு சக்தி ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் கவனமாகக் கண்காணிப்பார்கள். எரிபொருள் மூலமாக ஏற்படும் அழுத்தத்தைத் தாங்கும் சக்தி அணு உலைக்கு இருக்கிறதா என்பதையும் ஆய்வுசெய்த பிறகே மின் உற்பத்திக்கு அனுமதி கிடைக்கும். அதனால் குடியரசு தினத்துக்குள் மின் உற்பத்தி தொடங்கும் என நம்புகிறோம்.

மின் உற்பத்தியைத் தொடங்கும்போதே முழு அளவான ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தையும் உற்பத்தி செய்துவிட முடியாது. சிறிய அளவில் தொடங்கி, ஒவ்வொரு கட்டமாக அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து ஒப்புதல் பெற்ற பிறகே, அதிகரிக்க முடியும்'' என்று விளக்கினார்.

அணு உலையில் யுரேனியம் நிரப்ப அனுமதி கிடைத்து இருப்பதால், கூடங்குளம் அடுத்த கட்டத்துக்கு நாள் நெருங்கிவிட்டது என்றே தெரிகிறது.

- ஆண்டனிராஜ்,

படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism