Published:Updated:

ரோட்டைக் காணோம்... பூங்காவைக் காணோம்!

நிஜமாகிப்போன வடிவேலு காமெடி

பிரீமியம் ஸ்டோரி
##~##
ரோட்டைக் காணோம்... பூங்காவைக் காணோம்!

திரைப்படம் ஒன்றில் 'என்னோட கிணத் தைக் காணோம் சார். கண்டுபிடிச்சுக் கொடுங்க’ என்று போலீஸில் புகார் கொடுப்பார் நடிகர் வடிவேலு. இந்தக் காமெடி இப்போது நிஜமாகவே நடந்திருக்கிறது. 'எங்க பகுதி யில இருந்த ரோட்டையும் பூங்காவையும் காணோம் சார்’ என்று, சென்னை போலீஸ் கமிஷனர் திரி பாதியிடம் புகார் கொடுத்து, அதிர்ச்சியைக் கிளப்பி இருக்கிறார்கள் காஞ்சிபுரம் மாவட்டம் பனையூர் குப்பத் தைச் சேர்ந்த மீனவ மக்கள். 

கிழக்குக் கடற்கரைச் சாலையில் வி.ஜி.பி. பொழுது போக்குப் பூங்காவுக்குச் சற்றுத் தொலைவில் உள்ளது பனையூர் கிராமம். சுமார் 400 குடும்பங்கள் வசிக்கும் இந்தக் குப்பத்தில் மீன் பிடித்தல் மட்டுமே பிரதான தொழில். இந்தக் குப்பத்துக்கு அருகில் உள்ள இடங்களை சுமார் 20 வருடங்களுக்கு முன் வி.ஜி.பி. நிறுவனம் பிளாட் போட்டு விற்றுள்ளது. அப்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 840 மீட்டர் நீளத்துக்கு 60 அடி சாலையும் சுமார் 4,700 சதுர அடி பூங்காவையும் தானமாகக் கொடுத்தது வி.ஜி.பி. நிறுவனம். இதனுடைய இன்றைய மதிப்பு 20 கோடி ரூபாய்க்கு மேல். பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடம் முழுவதையும் ஆக்கிரமித்தவர்கள், சாலைக்காக ஒதுக்கப்பட்ட இடத்திலும் 221 மீட்டர் ஆக்கிரமித்து உள் ளனர். இதனால், குறுகிய சாலையை அமைத்து, அதன் வழியாகச் சென்று வருகின்றனர் மக்கள். அந்தப்பாதை வழியாகச் செல்வது சிரமமாக இருக்கவே, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் உண்மையை அறிந்த மக்கள் போராட் டத்தில் குதித்துள்ளனர்.

ரோட்டைக் காணோம்... பூங்காவைக் காணோம்!

கிராம மக்களிடம் பேசினோம். ''காலங்காலமா அந்தப் பாதை வழியாத்தான் மயானத்துக்குப் போய்க்கிட்டு இருந்தோம். வி.ஜி.பி. நிறுவனம் அந்த இடத்தை ப்ளாட் போட்டு விற்கும்போது 60 அடி அகலத்துக்கு ரோட்டுக்கான இடத்தை ஒதுக்கி செம்மண் ரோடு போட்டாங்க. அரசுக்கு அந்த இடத்தையும் பூங்காவுக்காக கோயிலுக்குப் பக்கத்துல கொஞ்சம் இடத்தையும் எழுதிக் கொடுத்தாங்க. அந்த ரோட்டை எப்பவுமே நிரந்தரமா பயன்படுத்தலாம்னு சந்தோஷப்பட்டோம். ஆனா, சில வருடங்களில் அந்த ரோட்டை பக்கத்து பிளாட்காரர்கள் ஆக்கிரமிச்சுட்டாங்க. காம்பவுண்ட் கட்டியதால், எங்களால் அந்த ரோட்டைப் பயன்படுத்த முடியவில்லை. இப்பவும் ஆக்கிரமிப்பாளர்களின் காம்பவுண்டுக்குள் அந்த ரோட்டைப் பார்க்க முடியும்.  

ரோட்டைக் காணோம்... பூங்காவைக் காணோம்!

அதேமாதிரி பூங்காவுக்கு ஒதுக்கிய இடத்திலும் வீடுகள் முளைத்தன. நாங்களும் விவரம் தெரியாம இருந்துட்டோம். இறந்தவங்களை மயானத்துக்குக் கொண்டுபோறதுக்கு வழியே இல்லை. அதனால, புறம்போக்கு நிலத்தில் சின்ன ரோடு போட்டு பயன்படுத்த ஆரம்பிச்சோம். இப்பத்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமா எல்லா விவரங்களையும் திரட்டி, மூணு மாசத்துக்கு முன்னால காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தோம். எந்த நடவடிக்கையும் எடுக்கலை. ரெண்டு மாசத்துக்கு

ரோட்டைக் காணோம்... பூங்காவைக் காணோம்!

முன்னால சென்னை மேயர் சைதை துரைசாமிகிட்ட மனு கொடுத்தோம். மறுநாள், சோழிங்கநல்லூர் மண்டல அலுவலகத்தில் இருந்து கூப்பிட்டு, விவரங்கள் கேட்டாங்க. அதுக்குப் பிறகு, அவங்களும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல்போக, ஒரு மாசத்துக்கு முன்னால, காணாமல்போன இடத்தைக் கண்டுபிடித்துத் தரும்படி போஸ்டர் ஒட்டினோம். அதுக்குப் பிறகுதான் யார் யார் எவ்வளவு நிலங்களை அபகரிப்பு செஞ்சிருக்காங்க என்பதும் எவ்வளவு இடம் ஆக்கிரமிக்கப்பட்டது என்றும் லே-அவுட் போட்டுக் கொடுத்தாங்க'' என்றனர் ஆதங்கத்துடன்.

தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்கத்தின் தலைவரான ஜெ.கோசுமணி, ''நில உடைமைப் பதிவு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்த நிலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனால் அந்த இடத்தில் குடியிருந்து வருவதற்கான ஏதாவது ஓர் ஆவணத்தைக் காட்டினாலே, அந்த இடத்தைத் தங்கள் பெயரில் பதிவு செய்து கொள்ளலாம். அதன்படி போலியான ஆவணத்தைக் காட்டி பதிவு அலு வலகத்தில் உள்ள சிலரைக் கைக்குள் போட்டுக்கொண்டு மோசடி நடந்து இருக்கிறது. மேலும், இரண்டு கிரவுண்ட் அளவுக்கு மைதானம் போன்ற பொது இடத் தையும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வி.ஜி.பி. நிறுவனம் வழங்கி இருந்தது. அதையும் ஆக்கிரமிக்கும் வேலை நடக்கிறது''என்றார்.

தங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை பற்றிப் பேசிய தென்னிந்திய மீனவர் நலச் சங்கத்தின் தலைவர் கு.பாரதி, ''மீண்டும் ஒருமுறை காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளோம். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சென்னையைச் சுற்றியுள்ள மீனவ மக்களை ஒன்றுதிரட்டி மண்டல அலுவலகத்தின் முன் மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம்'' என்றார்.

சோழிங்கநல்லூர் தாசில்தார் கோவிந்தராஜ், 'ரோடும் பூங்காவும் ஆக்கிர மிக்கப்பட்டு இருப்பது ஆவணங்களின்படி உறுதி செய்யப்பட்டுள்ளது. யார் யார் எவ்வளவு இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருக் கிறார்கள் என்ற விவரத்தைத் தயார்செய்து விட்டோம். மேற்கொண்டு அவர்கள் பற்றிய முழு விவரங்களையும் சேகரித்து வருகிறோம். இது, மாநகராட்சிக்குச் சொந்த மான இடம் என்பதால் அவர்களிடமும் தகவல் தெரிவித்துள்ளோம். விரை வில் நியாயம் கிடைக்கும்'' என்றார்.

மண்ணின் மைந்தர்களுக்கு வழிவிடுங்கள்.  

- சி.காவேரி மாணிக்கம்

படங்கள்: ஜெ. வேங்கடராஜ் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு