ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

ஸ்டாலின் தான் அடுத்த தலைவர்!

வேலூரில் பிரகடனம் செய்த வாகை!

##~##
ஸ்டாலின் தான் அடுத்த தலைவர்!

வாகை சந்திரசேகரை படங்களில் பார்க்கமுடிய வில்லை. ஆனால், மனிதர் மேடை களில் பின்னி எடுக்கிறார்! 

தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட டெசோ மாநாடு பற்றிய விளக்கக் கூட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கும் நிலையில், வேலூர் மாவட்டம் சார்பாக கடந்த 21-ம் தேதி நடத்தப்பட்டது. மாவட்டச் செயலாளர் காந்தி, முன்னாள் மேயர் கார்த்திகேயன், தி.மு.க. பேச்சாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வாகை சந்திரசேகரின் பேச்சில் டெசோ விளக்கத்தைவிட மற்றவைதான் அதிகம். ''இந்த ஓர் ஆண்டுக்குள் அம்மையார் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் எப்படி ஜெயித்தோம் என்றே தெரியாமல் இன்னும் அந்த அம்மையார் இருக்கிறார். ஆனால் உண்மை என்ன தெரியுமா? கடந்த தேர்தலில் அ.தி.மு.க. தோற்றுப்போயிருந்தால், இவர் கட்சியை விட்டுவிட்டு ஓய்வு எடுக்கப் போயிருப்பார். இதுதான் உண்மை. ஆனால், தி.மு.க. சந்திக் காத தோல்வியும் இல்லை... வெற்றியும் இல்லை. பலரும் என்னைப் பார்த்து, 'உங்களுடைய வயதுடைய நடிகர்கள் எல்லாம் தலையில் விக் வைத்துக்கொண்டு நடமாடுகிறார்கள். நீங்கள் மட்டும் விக் இல்லாமல் இருக்கிறீர்களே?’ என்று கேட்கிறார்கள். எனக்கு சினிமா என்பது தொழில். சினிமாவில் நடிப்பது மட்டும்தான் எனக்குப் பிடிக்கும். வாழ்க்கையில் நடிப்பது பிடிக்காது. நான் கலைஞரின் அன்புத்தம்பி. அவருடைய பாதையைப் பின்பற்றி நடந்து வருகிறேன். அவரைப் பற்றி யார் அவதூறாகப் பேசினாலும் எனக்குப் பிடிக்காது.

ஸ்டாலின் தான் அடுத்த தலைவர்!

ஈழத்துக்காக கலைஞர் 56 வருடங்களாகப் போராடிக் கொண்டு இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? கடந்த ஆட்சியில் கலைஞரின் உண்ணாவிரதத்தால் இலங் கையில் போர் நிறுத்தப் பட்டது.

ஸ்டாலின் தான் அடுத்த தலைவர்!

பல லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டன. இப்படி, தன்னையே தமிழுக்காகவும், தமிழரின் நலனுக்காகவும் அர்ப் பணித்தவர் கலைஞர். டெசோ மாநாட்டுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தரவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், பின்னால் நின்று பேசுவது கண் டிக்கத்தக்கது. வைகோவுக்கு மைக் கிடைத்தால், தொண்டை கிழியக் கத்த மட்டும்தான் தெரியும். வரலாறு தெரியுமா? இலங்கைத் தமிழருக்காக ஏதாவது செய்து இருப்பாரா? ஒன்றுமே கிடையாது. சும்மா போராடுகிறேன், போராடுகிறேன் என்றால் மட்டும் போதாது. எங்கள் கலைஞரைப் போல பாடுபட வேண்டும். பழ.நெடுமாறன், சீமான் இருவரும் நல்ல நடிகர்கள். வைகோ  மிகச்சிறந்த நடிகர். எனக்கு சிறந்த நடிகர் விருதை தமிழ் சினிமாவில் வழங்கினர். ஆனால், என்னைக் கேட்டால், இவர்கள் மூன்று பேரைத்தான் சிறந்த நடிகர்களாக சிபாரிசு செய்து இருப்பேன். அந்த அளவு இலங்கைத் தமிழர்கள் மீது பாசம் உள்ளவர்களாகத் தங்களை மேடைதோறும் காட்டிக் கொள்கிறார்கள். இனி நடிக்காதீர்கள். எல்லாம் கபட நாடகம். இவர்களால் ஒன்றுமே சாதிக்க முடியவில்லை.

ஆனால், நமது கலைஞர் ஈழத் தமிழருக்காக பல நல்ல திட்டங்களைச் சாதித்துக்கொண்டு இருப்பதைப் பார்த்து இவருக்கு வெறுப்பு. நம்மால் முடியாதது... கலைஞரால் முடிகிறதே என்ற வெறுப்பு. இந்த டெசோ மாநாட் டை உலகமே வியந்து பார்க்கிற அளவுக்கு வெற்றிகரமாக நமது கலைஞர் நடத்தியதைப் பார்த்து பொறாமையில் உள்ளனர். இவர்கள் என்னதான் கூச்சல் போட்டுக் கத்தினாலும் மக் களிடம் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைக் கேட்டால், அது 'டெசோ’ என்றுதான் சொல்வார்கள். நமது தலைவர் மூலம்தான் ஈழத் தமிழர்களுக்கு நல்ல வாழ்வு கிடைக்கப்போகிறது. இந்த மாநாட்டைப் பார்த்து இலங்கையில் ராஜபக்ஷே பயத்தில் உறைந்துள்ளார். இது எங்களுக்கு மட்டும்தான் தெரியும்'' என்றவர் அடுத்து ஸ்டாலின் புகழில் இறங்கினார்.

''தளபதி ஸ்டாலின் எங்கு சென்றாலும் கூட்டம் அதிகமாகக் கூடுகிறது. ஏன் தெரியுமா? அவர் அழகாக இருக்கிறார் என்பது மட்டுமல்ல, தி.மு.க-வின் அடுத்த தலைவர் அவர்தான் என்பதால். மக்கள் அவரிடம் பாசமாகப் பழகுகிறார்கள். அவரும் பாச மாகக் குறைகளைக் கேட்கிறார். தமிழ் நாட்டில் பெண்கள், குழந் தைகள் என எல்லோரும் தளபதியிடம் பாசமாக இருப் பதை நானே நேரில் பார்த்து மெய்சிலிர்த்தேன். அவர்தான் அடுத்த தலைவர்'' என்று பேசி ஓய்ந்தார்.

''இவரு ஏன் விக் வைக்கலைங் கிற பொதுஅறிவுக் கேள்விக்கு விடை கிடைச்சிருச்சு. அது போதும்பா...'' என்ற கலகலப்புடன் கலைந்தனர் உடன்பிறப்புகள்.

- கே.ஏ.சசிகுமார்

படம்: ச.வெங்கடேசன்