ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

பிச்சை கேட்கும் யானைகள்!

கொதிக்கும் பாகன்கள்!

##~##
பிச்சை கேட்கும் யானைகள்!

மீண்டும் யானை மணியோசை கேட்க இருக்கிறது! 

வருகிற நவம்பர் மாதம் நடக்கவுள்ள முதுமலை புத்துணர்வு முகாமுக்காக தமிழ்நாட்டுத் திருக்கோயில் யானைகள் குதூகலத்தோடு தயாராகின்றன. 'யானைகளை மட்டும் கவனிச்சாப் போதுமா? எங்களையும் கொஞ்சம் கவனிங்கம்மா!’ என்று முதல்வரை நோக்கிக் குரல் கொடுக்கிறார்கள் யானைப் பாகன்கள். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த தமிழ்நாடு முழுக்க இருக்கும் 84 பாகன்கள் இணைந்து 'திருக்கோயில் யானைப் பாகர்கள் நலச் சங்கம்’ ஒன்றை திருச்சியில் ஆரம்பித்து இருக்கிறார்கள்.

சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஜெம்புநாதனிடம் பேசினோம். ''யானைகள் மீது அரசு காட்டும் அக்கறையில் கொஞ்சம்கூட எங்கள் மீது காட்டுவது இல்லை. தமிழ்நாட்டில் அதிக வருமானம் வரக்கூடிய பழநி, திருவண்ணாமலை கோயில் பாகன்களைக் கூட பணி நிரந்தரம் செய்யவில்லை. பல

பிச்சை கேட்கும் யானைகள்!

கோயில்களில் யானைப் பாகன்களுக்கு சம்பளம் 1,000 ரூபாய்​தான். கோயில்களில் வேலை பார்க்கும் ஊழியர் களிலேயே குறைந்த சம்பளம் வாங்குவது நாங்கள் மட்டும்தான்.

முதுமலை முகாமுக்கு யானைகளோட சேர்த்து எங்​களையும் 41 நாளுக்கு அங்கே அழைத்துப்​ ​போகிறார்கள். இரவு பகலா நாங்க​தான் யானைகளுடன் காட்டில் இருக்கிறோம். ஆனால், எங்களுக்குப் பயணப் படியோ வேறு எந்தத் தொகையோ தருவது இல்லை. இடையில் புத்தாண்டு, தைப்பொங்கல் போன்ற பண்டிகைகள் வரும்போது அதிகாரிகள் எல்லாம் எஸ்கேப் ஆயிடுவாங்க. நாங்க மட்டும் அனாதைகளைப் போல காட்டுக்குள்

பிச்சை கேட்கும் யானைகள்!

இருக்கணும். எங்களுக்குக் குடும்பம் இருப்பதையே மறந்துடுறாங்க. வனத்துறையில் வேலை பார்க்கும் யானைப் பாகன்களுக்கு நல்ல சம்பளம், ஓய்வூதியம் தர்றாங்க. அவங்களைப் போல எங்களுக்கும் தர வேண்டும்'' என்றார்.

மாநிலப் பொருளாளரான சிவ.ஸ்ரீதரன்,''பாகன்களை கோயில் அதிகாரிகள் மதிக்கிறதே இல்லை. கோயில்ல டிக்கெட் கிழிக்கிற வேலை, காவல் காக்கிற வேலை செய்யச் சொல்றாங்க. இப்போ, புதுசா ஒரு திட்டம் கொண்டு வந்திருக்காங்க. அதாவது, யானைக்குப் பக்கத்தில் உண்டியல் வச்சிருக்காங்க. இனி காசை அதில்தான் போடணுமாம். யானையை வச்சுப் பிச்சை எடுக்கிற மாதிரி அவமானமா இருக்குது. முது மலைக்குப் போறப்ப நல்லபடியா விசாரிச்சு எங்களோட தேவைகளை எல்லாம் கேட்டுக்கிறாங்க. ஆனா, அதுக்குப்பிறகு எங்களைக்கண்டுக்​​கறதே இல்லை'' என்றார்காட்டமாக.

அறநிலையத் துறை அமைச்சரான எம்.எஸ்.எம்.ஆனந்தனிடம் பேசி​னோம். ''யானைப் பாகன்கள் இதுவரை நீங்கள் சொல்லும் எந்த பிரச்னையையும் என் கவனத்துக்குக் கொண்டு வரவில்லை. ஒருவேளை அதிகாரிகளிடம் மட்டும் சொன்னார்களோ என்னவோ? என்னிடம் மனு கொடுக்கச் சொல்லுங்கள். முதல்வர் அம்மாவின் கவனத்துக்குக் கொண்டுசென்று, அதை நிறைவேற்ற முயற்சிக்கிறேன். அதே சமயம் பாகன்களின் சம்பளம், பணி நிரந்தரம் உள்ளிட்ட விஷயங்கள் ஏற்கெனவே பரிசீலனையில் இருக் கிறது'' என்றார்.

பாகன்களின் பிரச்னை தீரட்டும்!

- ஆ.அலெக்ஸ் பாண்டியன்

படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்