ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

ஏழைக்கு ஒரு சட்டம்... பணக்காரனுக்கு ஒரு சட்டமா?''

சிவகாசியில் தீக்குளித்த ஆட்டோ டிரைவர்!

##~##
ஏழைக்கு ஒரு சட்டம்... பணக்காரனுக்கு ஒரு சட்டமா?''

ரு தீக்குளிப்புச் சம்பவம் பல்வேறு அதிர்ச்சிகளை வெளியில் கொண்டு வந்துள்ளது! 

சிவகாசி, சிறுகுளம் கண்மாயில் ஆக்கிரமிப்பு அகற்றப் படுவதை எதிர்த்து ஆட்டோ டிரைவர் கணேசன் சமீபத்தில் தீக் குளித்து இறந்தார். இந்த விவகாரத்தை மையமாக வைத்து கலவர மேகங்கள் சூழ்ந்து உள்ளன. அதனை அடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு போன்ற வன்முறை சம்பவங்கள் தலை தூக்கவே... பீதியில் இருக்கின்றனர் மக்கள்.

சிவகாசியில் சிறுகுளம் கண்மாயைச் சுற்றி கடந்த 40 ஆண்டுகளாக 300-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. அனைவருமே தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் பணியாற்றும் கூலித் தொழிலாளர்கள். அந்த வீடுகளுக்கு மின்சார இணைப்பு, குடிநீர் மற்றும் சாலை வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளது. 'நாங்கள் குடியிருக்கும் இடத்துக்கு பட்டா தரவேண்டும்’ என்று அந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தினார்கள். அதனால் கடந்த 2006-ம் ஆண்டு அரசு, புறம்போக்கு நிலத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டி குடியிருக்கும் அவர்களுக்கு பட்டா வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பட்டா வழங்கும் வேலை ஜரூராக நடந்தது. அதன் பிறகுதான் ஆரம்பமானது விவகாரம்.

ஏழைக்கு ஒரு சட்டம்... பணக்காரனுக்கு ஒரு சட்டமா?''

இந்த சம்பவம் குறித்துப் பேசும் நடுநிலையாளர்கள், ''சிவகாசியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் 'வரி செலுத்துவோர் சங்கம்’ என்று ஓர் அமைப்பை நடத்தி வருகிறார்கள். அவர்கள், 'ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கக்கூடாது’ என்று உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றனர். அதோடு, 'கண்மாய் போன்ற நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற 19.10.2011-ல் உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையே அந்தத் தொழிலதிபர்களுக்கு செக் வைக்கும் விதமாக, சிறுகுளம் கண்மாய் மற்றும் அதைச் சுற்றி ஆக்கிரமித்துள்ள ஒன்பது தொழிலதிபர்களின் கட்டடங்கள் பற்றிய விவரங்களைப் பட்டியலிட்டு, அவற்றையும் அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.

ஏழைக்கு ஒரு சட்டம்... பணக்காரனுக்கு ஒரு சட்டமா?''

இப்படி இரு தரப்புமே மாறி மாறி மல்லுக்கு நிற்க... பிரச்னை சூடு பிடித்தது. உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் சிறுகுளம் கண்மாய் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என்று சொல்லி மாவட்ட நிர்வாகம் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. மாவட்ட நிர்வாகத்துக்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், ஆகஸ்ட் 22-ம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்துதான் கடந்த 18-ம் தேதி ஆக்கிரமிப்புகளை அகற்ற ஜே.சி.பி. இயந்திரங்களோடு அதிகாரிகள் களம் இறங்கினார்கள்.

இதனால் ஆக்கிரமிப்புப் பகுதியில் வசிப்போர் ஆத்திரமடைந்து, 'சிறுகுளம் கண்மாயில் தொழிலதிபர்

ஏழைக்கு ஒரு சட்டம்... பணக்காரனுக்கு ஒரு சட்டமா?''

கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களை அகற்றிய பிறகு எங்கள் வீட்டை இடியுங்கள்’ என்று சொல் லவே பதற்றம் ஏற்பட்டது. தடியடி நடத்திய போலீ ஸார் ஆட்டோ டிரைவர் கணேசன் வீட்டை இடிக்கத் தயாரானார்கள். சரசரவென வீட்டு மாடி மீது ஏறிய கணேசன், பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டு கீழே விழுந்து பலியாகி விட்டார்.

தீக்குளிப்பு விஷயம் பரவியதும் சிவகாசியில் கலவர மேகங்கள் சூழத்தொடங்கின. இது சட்டம் ஒழுங்குப் பிரச்னையைக் கிளப்புவது  போலத்  தெரியவே, மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்பு பணிகளை நிறுத்தி வைத்தது. இந்த நிலையில் கடந்த 22-ம் தேதி திருத்தங்கல் ரோட்டில் உள்ள ஒரு தொழிலதிபரின் திருமண மண்டபத்தில் பெட் ரோல் குண்டு வீசப்பட்டது. திடீர் திடீரென கற்கள் எறியப்படுகின்றன. அதனால் கலவரம் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் எங்கள் மக்கள்'' என்றார்கள்.

சிறுகுளம் கண்மாய் அருகில் வசிக்கும், அண்ணா காலனி குடியிருப்போர் நலச் சங்கச் செயலாளர் சொர்ணையா பாண்டியனிடம் பேசினோம். ''நாங்க இங்கே இருந்தா தொழிற்சாலைக்கு இடைஞ்சல்னு நினைச்சு, சில பட்டாசுத் தொழிலதிபர்கள் ஒன்று சேர்ந்து எங்களைக் காலி செய்யப் பார்க்குறாங்க. ஆனா அவங்க, சிறுகுளம் கண்மாய்க்குள்ளேயே 16 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கல்யாண மண்டபமே கட்டி இருக்காங்க. அதுபோல் பெல் ஹோட்டல் எதிரே இருக்கும் ஓடையையும் ஆக்கிரமிச்சு இருக்காங்க. நம்ம நாட்டுல ஏழைக்கு ஒரு சட்டம்... பணக்காரனுக்கு ஒரு சட்டமா? எல்லோருக்கும் ஒரே மாதிரி நியாயம் கிடைக்கணும்'' என்றார் ஆதங்கத்துடன்.

சிவகாசி வரி செலுத்துவோர் சங்கத் தலைவர் ராமரத்தினத்திடம் பேசினோம். ''எனக்கு முன்னால் இந்தப் பதவியில் இருந்தவங்கதான் இந்த வழக்கைப் போட்டாங்க'' என்று மட்டும் கூறினார். சங்கத்தின் பொருளாளர் அபிரூபன், ''இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அது பற்றி எங்களால் பேச முடியாது'' என்றார்.

மாவட்ட கலெக்டர் ஹரிஹரனிடம் பேசினோம். ''நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் நடவடிக்கை எடுக்க முயற்சித்தோம். சிறுகுளம் கண்மாயில் தொழிலதிபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள கட்டடங்களுக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்து, அவற்றையும் இடிப்பது தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறோம். சிவகாசியில் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படாதபடி நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்'' என்றார்.

கலவர மேகங்கள் கலையட்டும். எல்லோர் மீதும் நியாயமான நடவடிக்கை மட்டும் இருக்கட்டும்!

- எம்.கார்த்தி, படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

 ''நிர்வாகத்தில் தலையிடவில்லை''

கடந்த 19.8.12 தேதியிட்ட ஜூ.வி. இதழில், 'சுடுகாட்டுல ஊர்ச்சந்தை வைக்கலாமா’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டு இருந்தோம். அந்தக் கட்டுரை குறித்து ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ஊராட்சித் தலைவர் காளீஸ்வரியின் கணவர் கே.ஆர்.விஸ்வநாதன் நமக்கு எழுதி இருக்கும் கடிதத்தில், 'ஊராட்சி நிர்வாகத்தில் நான் தலையிடுவது இல்லை. அதே போன்று டிரஸ்ட் வைத்துக்கொண்டு நான் ஏகப்பட்ட மோசடி செய்வதாகச் சொல்லி இருப்பதும் உண்மை கிடையாது. கீழக்கரை சாயபு ஒருவரின் சொத்து குறித்து வெளியான தகவலும் உண்மை கிடையாது. மேற்படி சொத்துக்கள் சம்பந்தமாக ஆமீனா பீவி என்பவர் மீது நானும், என் மீது அவரும் தாக்கல் செய்து இருந்த சிவில் வழக்குகள், எங்களுக்குள் ஏற்பட்ட சமரசத்தின் காரணமாக ராமேஸ்வரம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு சமரசத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்து இருக்கிறார்.