ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

''அதுக்குப் பிறகு சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டாங்க!''

வேலூர் தில்லாலங்கடி

##~##
''அதுக்குப் பிறகு சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டாங்க!''

'ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?’ என்ற அளவுக்குப் புதுப்புது வகையில் ஏமாற்றுகிறார் கள். எத்தனை பேர் ஏமாந்தாலும் நாங்கள் உஷாராக மாட்டோம் என்று வழக்கம்போல் வலையில் விழுகிறார்கள் பொதுமக்கள். இப்போது, வேலூரில் அம்பலமாகி இருக்கிறது ஒரு புது மோசடி. 

'உதவும் இதயங்கள்’ என்ற அமைப்பை வேலூர் வீரக்கோவில் தெருவில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்திவருகிறார் நந்தகுமார். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்குக் கடன்உதவி வழங்கப்படும் என்று தமிழகத்தில் பல இடங்களில் கிளை நிறுவனங்களையும் தொடங்கி வருகிறார்.

கடந்த 13-ம் தேதி, இவரது அலுவலகத்தை சென்னை மற்றும் வேலூரைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீஸார், நந்தகுமார் உட்பட நான்கு பேரை வேலூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அள்ளிக்கொண்டு போனார்கள்.

''அதுக்குப் பிறகு சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டாங்க!''

ஏமாந்து நின்ற ஒரு பெண்ணிடம் பேசினோம். ''என் பேரு சாந்தி. சென்னை முகலிவாக்கத்தில் குடியிருக்கேன். நாங்க  25 பேர் சேர்ந்து மகளிர் சுயஉதவிக் குழு நடத்திட்டு இருக்கிறோம். லட்சுமி, கலானு ரெண்டு பேரு எங்களை வந்து சந்திச்சுப் பேசினாங்க. 'வேலூர்ல இருக்கும் உதவும் இதயங்கள் என்ற அமைப்பு மூலமா உங்களை மாதிரி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் ஏற்பாடு செஞ்சு

தர்றாங்க. நீங்களும் சேர்ந்துக்கோங்க. உங்க வாழ்க்கை பிரகாசமா மாறிடும்’னு ஆசை காட்டினாங்க. உடனே, நாங்களும் லோன் ஆர்வத்தோடு அங்கே போனோம்.

'உதவும் இதயங்கள்’னு எழுதின அட்டை யில் ஒவ்வொருத்தரின் பெயரையும் எழு தினாங்க. 'இது உங்களோட அடையாள அட்டை. இதைப்போல ஒரு அட்டை எங்க கிட்டேயும் இருக்கும். உங்களுக்கு 1 லட்சம் ரூபாய் கடன் வேணும்னா 3,000 ரூபாயும், இரண்டு லட்சம் லோன் வேணும்னா 6,000 ரூபாயும், மூணு லட்சம் லோன் வேணும்னா 15,000 ரூபாயும் டெபாசிட் கட்டுங்க’ன்னு சொன்னாங்க. பேங்க்ல பேசி உங்களுக்கு ஒரு வாரத்திலேயே லோனுக்கு ஏற்பாடு செஞ்சு கொடுத்துடுவோம்’னு சொன்னாங்க. நாங்களும் அதை நம்பி ஆளாளுக்குப் பணத்தைப் போட்டு மொத்தமா 75,000 ரூபாய் கட்டினோம்.

''அதுக்குப் பிறகு சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டாங்க!''

அதுக்கு அப்புறம் அவங்ககிட்டே இருந்து எந்தப் பதிலும் வரவே இல்லை. தொடர்ந்து போன் செய்து

''அதுக்குப் பிறகு சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டாங்க!''

பார்த்தோம், எடுக்கவே இல்லை. செல்போனையும் ஆஃப் பண்ணிட்டாங்க. அதனால்தான்  கிளம்பி வந்துட்டோம். இங்க வந்து கேட்டா, எந்தப் பதிலும் சொல்ல மாட்டேங்கிறாங்க. எங்களுக்கு கடன் தர வேணாம். நாங்க கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்தா போதுங்க!'' என்று கண் கலங்கினார்.

பாகாயத்தைச் சேர்ந்த பூங்கொடி, ''எங்க மகளிர் சுய உதவிக் குழு மூலமா 45,000 ரூபாய் வசூல் பண்ணிக் கட்டிருக்கேன். இப்படி மோசடி செஞ்சுட்டானுங்களே பாவிங்க. நான் பணம் கட்டியது எங்க வீட்டுலகூட யாருக்கும் தெரியாது. மெழுகுவத்தி வியாபாரம் செய்யலாம்னுதான் லோன் வாங்கப் பணம் கொடுத்தேன். அதுக்குள்ள இப்படி ஆகிப்போச்சே...'' என்று தலைமேல் கை வைத்து தேம்பித் தேம்பி அழுதார்.

மோசடி செய்த நந்தகுமார் உட்பட நான்கு பேரைக் கைது செய்து ரிமாண்ட் செய்திருக்கிறது போலீஸ்.

வழக்கை விசாரித்து வரும் தெற்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணிடம் பேசினோம். ''உதவும் இதயங்கள் என்ற அமைப்பைத் தொடங்கி, மக்களை ஏமாற்றி வந்திருக்கிறார் நந்தகுமார். மற்ற அனைவருமே நந்தகுமாருக்கு பணம் வசூல் செய்து தரும் புரோக்கர்களாக செயல்பட்டிருக்கிறார்கள். 'அப்ரோ’ நிறுவனத்தின் கீழ்தான் எங்கள் அமைப்பு செயல்பட்டு வருகிறது என்று சொல்லி வந்திருக்கிறார் நந்தகுமார். அப்ரோ நிறுவனத்தின் மீது புகார் வந்த பிறகுதான் இந்த மக்களும் உஷாராகி நந்தகுமார் அலுவலகத் துக்கு வந்திருக்கிறார்கள். இந்த மோசடிக் கும்பலின் பின்னணியில் இன்னும் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று விசாரித்து வருகிறோம். யார் எதைச் சொன்னாலும் நம்பிவிடும் மக்கள் இருக்கும் வரை, இதுபோன்ற ஆசாமிகளும் உருவாகிக் கொண்டேதான் இருப்பார்கள். இதுவரை புகார் கொடுத்தவர்களை வைத்துப் பார்க்கும்போது எப்படியும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்திருக்கும் என்று தெரிகிறது. ஏமாந் தவர்களின் பட்டியல் இன்னும் நீளுமா என்பது போகப்போகத்தான் தெரியும்'' என்று சொன்னார்.

உதவும் இதயங்கள் தரப்பில் பதில் சொல்ல அந்த அலுவலகத்தில் யாரும் இல்லை. இதயங்கள் உதவக்கூட வேண்டாம், உபத்திரவம் கொடுக்காமல் இருக்கலாமே!

- கே.ஏ.சசிகுமார்

           படங்கள்: கா.முரளி