ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

புரோக்கர்கள் பிடியில் அண்ணாமலையார்!

திருவண்ணாமலை திகுதிகு

##~##
புரோக்கர்கள் பிடியில் அண்ணாமலையார்!

'போன வாரம் நாங்க குடும்பத்தோட திருவண்ணாமலை கோயிலுக்குப் போயிருந்தோம். சாமியைத் தரிசனம் செய்றது பெரிய பாடாப்போச்சு. கோயில் முழுக்க புரோக்கர்களோட பிடியில்தான் இருக்குது. நீங்க விசாரிச்சு எழுதுங்க’ - விழுப்புரத்தைச் சேர்ந்த வாசகர் ஒருவர் நமது ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66808002) புகாரைப் பதிவு செய்திருந்தார். 

அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்துக்குக் காத்திருந்த பக்தர்களிடம் பேச்சு கொடுத்தோம். ''சாமி பார்க்கக் கூட்டிட்டுப் போறதாச் சொல்லி நிறைய புரோக்கர்கள் வந்து கேட்கிறாங்க. வரிசை யில நாங்க மணிக்கணக்காக் காத்துக்கிட்டு இருக்கோம். ஆனா, அந்த புரோக்கர்கள் எந்த வரி சையுமே இல்லாம பலரையும் சர்வசாதாரணமா மூலஸ்தானத்துக்குக் கூட்டிட்டுப் போயி, சாமி பார்க்கவெச்சுக் கூட்டிட்டு வராங்க. வெளிநாட்டுக்காரங்க எல்லோருமே இந்தப் புரோக் கர்கள்கூடத்தான் போறாங்க. நீங்களே கொஞ்ச நேரம் நின்னு பாருங்க. உங்களையும் கூப்பிட வரு வாங்க'' என்றனர்.

புரோக்கர்கள் பிடியில் அண்ணாமலையார்!

நாமும் சற்று நேரம் பக்தர்களோடு வரிசையில் காத்திருந்தோம். ''சாமியை நேரப் பார்க்கணுமா? 500

புரோக்கர்கள் பிடியில் அண்ணாமலையார்!

ரூபா சார். பக்கத்தில் போய்ப் பார்க்கலாம். நீங்க ஆசைப்படுற மாதிரி கண் குளிர ரொம்ப நேரம் தரிசனம் பண்ணலாம். என்கூட வந்தீங்கன்னா நேரா அழைச்சுட்டுப் போறேன்'' - கொஞ்சமும் தயக்கமே இல்லாமல் வந்து பேரம் பேசினார் ஒருவர்.

நாம் தயங்குவதைப் பார்த்தவர், ''சார் எவ்வளவு நேரம் இப்படி வெட்டியா நின்னுட்டு இருக்கப் போறீங்க. வந்தோமா சாமியைப் பார்தோமானு இருக்கணும். அப்பத்தான் சாமியோட சக்தி நமக்குக் கிடைக்கும். நீங்க ஒரு ஆள் தானா... குடும்பத்தோட வந்திருக்கீங்களா?'' என்று கடகடவெனப் பேசினார்.

''நீங்க யார்? கோயில்ல உங்களை இதுக்காக நியமிச்சு இருக்காங்களா?'' என்று கேட்டதும், நம்மைப் பார்த்து முறைத்தபடி பேசாமல் நகர்ந்து விட்டார்.

புரோக்கர்களை எப்படி கோயில் நிர்வாகம் அனுமதிக்கிறது? கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர் ஒருவரிடம் விசாரித்தோம். ''புரோக் கர்களை உள்ளேவிட வேண்டாம்னு நாங் களும் தலைதலையா அடிச்சுக்குறோம். ஆனா, யாரும் கேட்க மாட்டேங்கிறாங்க. அவங்க வசூல் பண்ற பணத்தில் உள்ளே இருக்கும் ஊழியர்கள் சிலருக்கும் பங்கு போகுது. கோயில் ஆபீஸ்ல இருக்கும் அதிகாரிங்க சிலருக்குத் தேவையான வேலைகளை இந்த ஆளுங்க செஞ்சு கொடுக்கிறாங்க. அதனால, யாரும் கண்டுக்க மாட்டேங்கிறாங்க. இவங்களை எல்லாம் அந்த அண்ணா மலையார்தான் கேட்கணும்'' என்றார் வேதனையோடு.

விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில இணைச் செயலாளர் சக்திவேல் நம்மிடம், ''அண்ணாமலையார்

புரோக்கர்கள் பிடியில் அண்ணாமலையார்!

கோயிலில் சுற்றும் புரோக்கர்கள், உள்ளூர் முக்கியஸ்தர்களின் கடிதங்களை வாங்கி அதைக் கோயிலில் கொடுத்து வி.ஐ.பி. பாஸ் வாங்கி வச்சுக்கிறாங்க. அந்த பாஸை பக்தர்களிடம் கொடுத்துப் பணம் பார்க்கிறாங்க. முன்பெல்லாம் பௌர்ணமி நாட்களிலும், தீபத் திருவிழா நாட்களிலும்தான் இவங்களோட ஆதிக்கம் இருக்கும். ஆனால் இப்போது, எல்லா நாட்களுமே கோயில்ல வந்து உட்காந்துக்கிறாங்க. கேட்டால், எஸ்.பி-க்கு வேண்டியவன், டி.எஸ்.பி-க்கு வேண்டியவன்னு கதை சொல்றாங்க.

கோயில் நிர்வாகம் நினைச்சா, இவங்களை அப்புறப்படுத்தலாம். எனக்குத் தெரிஞ்சு 15 புரோக்கர்கள் கோயில் வளா கத்துக்குள் இருக்காங்க. யார் யார்னு என்னால் லிஸ்ட் கொடுக்கவே முடியும். இல்லைன்னு கோயில் நிர்வாகத்தால் மறுக்க முடியுமா?'' என்று கொந்தளித்தார்.

அண்ணாமலையார் கோயில் இணை ஆணையாளர் பரஞ்சோதியிடம் இதுபற்றிப் பேசினோம். ''கோயிலில் புரோக்கர்கள் இருப்பதாக எனக்கும் புகார்கள் வந்தன. அவர்களைக் கண்டுபிடித்து வெளியில் விரட்டி இருக்கிறேன். இப்போது புரோக்கர்கள் தொல்லை கிடையாது. சக்திவேல் லிஸ்ட் தருவதாகச் சொல்லும் நபர்கள் எல்லாம் கோயில் வளாகத்துக்குள் இருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. அவர்கள் எல்லாம் யார்? எப்படிக் கோயிலுக்குள் வந்தனர் என்று உடனே விசாரித்து, தேவையான நடவடிக்கை எடுக்கிறேன். அண்ணாமலையார் எல்லோருக்கும் பொது வானவர்தான். அவரின் பெயரைச் சொல்லி ஏமாற்றுவதை ஒருபோதும் அனுமதிக்கவே முடியாது'' என்றவர், ''சக்திவேலிடம் கேட்டு அந்த லிஸ்ட்டை வாங்கிக் கொடுங்கள்'' என்றார். உடனே, அந்த லிஸ்ட்டை இணை ஆணையாளர் பரஞ்சோதியிடம் கொடுத்து விட்டோம்.

அண்ணாமலையார் தரிசனம் ஆயிரம் நன்மைகள் தரும் என்பார்கள். அந்த தரிசனத்தில் புரோக்கர்கள் நுழைந்து விடாமல் காக்க வேண்டியது நிர்வாகத்தின் கடமை. இனியாவது புரோக்கர்களின் ஆதிக்கம் முற்றிலும் தடுக்கப்படட்டும்!

- கோ.செந்தில்குமார்

படங்கள்: பா.கந்தகுமார்