அடிப்படை வசதிகள் இன்மை, நிர்வாகச் சீர்கேடு போன்ற பிரச்னைகளால், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது, காஞ்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை. இந்த அவலத்தின் உச்சகட்டமாக, நர்சிங் பயிற்சி மாணவிகளே இன்னதென்று அறிய முடியாத நோய் அறிகுறிகளுடன் கடந்த வாரம் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு உள்ளனர்.

கடந்த 13-ம் தேதி, வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் காரணமாக இரண்டு மாணவிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அடுத்தடுத்து சில மாணவிகளும் இதே காரணத் துக்காக மருத்துவமனையில் சேர... ஒரே வாரத் தில் இந்த எண்ணிக்கை 12 ஆனது. கடந்த 19-ம் தேதி, மேலும் 10 மாணவிகளும் அட்மிட் ஆகவே, மருத்துவமனை வளாகம் முழுவதும் அதிர்ச்சி தொற்றிக்கொண்டது. அவர்களுக்கு வந்திருப்பது சாதாரண டைபாய்டு காய்ச்சல் என்று நிர்வாகம் தெரிவித்தாலும், மாணவிகள் பீதி விலகாமல்தான் இருக்கிறார்கள்.

நம்மிடம் பேசிய சீனியர் நர்ஸ் ஒருவர், ''மருத்துவமனை வளாகத்திலேயே அமைந்துள்ள இந்தக் கல்லூரியில் 230 மாணவிகள் டிப்ளமோ இன் நர்சிங் படிக்கிறார்கள். இவர்களில் 150 பேர் கல்லூரியின் முதல்தளத்தில் உள்ள விடுதியில் தங்கி இருக்கிறார்கள். இரண்டாம் தளம் உபயோகமற்ற பொருட்களை வைக்கும் குடோனாகப் பயன்படுகிறது. விடுதியின் 17 அறை களில் ஒன்பது அறைகள்

பயன்பாட்டுக்கு ஏற்றவை அல்ல என்று மூடி வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள எட்டு அறைகளில் ஒரு அறைக்கு 15 முதல் 20 மாணவிகள் வரை தங்கி உள்ளனர். முறையான குடிநீர் இல்லை. விடுதியின் கழிவறைகள் 'பேருந்து நிலையக் கழிப்பிடங்களே மேல்’ என்று சொல்ல வைக்கும் அளவுக்கு மோசமான பராமரிப்புடன் உள்ளது. அறைகளின் மேற்கூரை எப்போது வேண்டு மானாலும் பெயர்ந்துவிழும் என்ற நிலை. இது போதாதென்று கட்டடத்தைச் சுற்றி முள்புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. இப்படி எந்த அடிப்படை வசதியுமே இல்லாமல் பரிதாபமாக பல் இளிக்கிறது விடுதி.

விடுதியை ஒட்டியே மார்ச்சுவரி இருப்பதால் பிண வாடையுடனும் மனதில் பயத்துடனும்தான் மாணவிகள் இரவைக் கழிக்கிறார்கள். போதாக் குறைக்கு, விபத்து மற்றும் உயிர் இழப்பு ஏற்படும் நேரங்களில் மனிதர்களின் ஓலம், இவர்களுக்கு மிரட்சியை ஏற்படுத்துகிறது. வளாகத்தை எந்த நேரமும் நாய்கள் சுற்றித் திரியும். மொத்தத்தில் பெண்கள் விடுதியா... பேய்கள் விடுதியா என பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு எல்லாம் பகீர் ரகம்.

கல்லூரிக்கு 14 விரிவுரையாளர்கள் இருக்கிறார் கள். ஆனால், மாணவிகளின் நலனில் யாரும் அக்கறை காட்டுவது இல்லை. இந்த மோசமான சூழலில் படிக்க விரும்பாமல் மாணவிகள் எத்தனையோ தடவை, போராட்டங்களை நடத்தியும் பிரயோஜனம் இல்லை. போராடும் நேரத்தில் பதறி ஓடி வரும் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் 'விரைவில் சரி செய்யப்படும்’ என உறுதி அளிப்பார்கள். அதன்பிறகு, கண்டுகொள்வதே இல்லை. கல்லூரி மற்றும் விடுதி மருத்துவக் கல்வித் துறையின் கீழ் வருவதால் இது அவர்களின் கடமை என மருத்துவப் பணிகள் இயக்குனரகம் ஒதுங்கி நிற்கிறது. மருத்துவக் கல்வித் துறையோ, கட்டடம் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமானது என்று, அடிப்படை வசதி ஏற்படுத்தித் தர தயங்குகிறது. இவர்களின் எல்லைப் பிரச்னைதான் மாணவிகள் மருத்துவமனையில் அட்மிட் ஆகும் அளவுக்குக் கொண்டுபோய் விட்டது'' என்றார் கவலைபடர்ந்த முகத்துடன்.

நர்சிங் கல்லூரி முதல்வரான டாக்டர் இளங்கோ விடம் பேசினோம். ''மாணவிகளுக்கு சாதாரணக் காய்ச்சல்தான் ஏற்பட்டுள்ளது. விரைவில் குணம் அடைந்து விடுவார்கள். நர்சிங் விடுதியின் இப்போதைய நிலைக்குக் காரணம் அது இரண்டு துறைகளின் கீழ் வருவதுதான். மராமத்துப் பணிகளை யார் செய்வது என்ற குழப் பத்தால் கடந்த ஆண்டு இதற்கென ஒதுக்கப்பட்ட 11 லட்ச ரூபாய் திருப்பி அனுப்பப்பட்டு விட்டது. மார்ச்சுவரியை யாருக்கும் இடையூறு இல்லாத வேறு இடத்துக்கு மாற்றும் திட்டம் உள்ளது. 49 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அதற்குத் திட்டவரைவு அனுப்பப்பட்டு உள்ளது. விரைவில் மாணவிகளின் அனைத்துப் பிரச்னைகளும் தீரும்'' என்றார்.

மாவட்ட ஆட்சியர் சித்திரசேனனிடம் பேசி னோம். ''நான் இங்கு பொறுப்புக்கு வந்ததுமே முதல் புகார் மருத்துவமனை பற்றிதான் வந்தது. சுகாதாரம் இல்லாத சூழல் காரணமாக மாணவிகள் பாதிக்கப்பட்டதாகச் சொன் னார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விரைவில், அங்கு சென்று ஆய்வு செய்யவும் திட்டமிட்டு இருக்கிறேன். அடுத்தடுத்து, மருத்துவ மனையை சீரமைக்க அத்தனை முயற் சிகளையும் தொடங்குவேன்'' என்றார் நம்பிக்கையான குரலில்.

இது, பேச்சாக இல்லாமல் செயலாகவும் இருக்கட்டும்!

- எஸ்.கிருபாகரன்

படங்கள்: வீ.ஆனந்தஜோதி