வன்னியர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு கேட்டு 25 ஆண்டுகளுக்கு முன், ராமதாஸ் போராடியபோது, தமிழகமே ஸ்தம்பித்தது. இப்போது, மீண்டும் அதே ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்!

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் மேடைஏறினார் ராமதாஸ். ''25 ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தை ஸ்தம்பிக்க வைக்கும் அளவுக்குப் போராட்டம் நடந்தது. வன்னியர்களை உலகுக்கு அறிமுகப்படுத்திய, அதிரவைத்த, ஆச்சர்யப்பட வைத்த போராட்டம் அது. வன்னியர்களின் சக்தி என்ன என்பதை உலக மக்களுக்குப் புரிய வைத்தது, அந்தப் போராட்டம். ஏழு நாள் தொடர் சாலைமறியல் போராட்டம் நடந்த நேரத்தில் தமிழகம் முழுவதும் எங்கும் வாகனம் ஓடவில்லை. அப்போது, எம்.ஜி.ஆர். தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்திலே 21 பேரை காக்கைக் குருவிகளைப் போல் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.

நாம் 20 சதவிகிதம் தனியாகக் கேட்டோம். ஆனால், கருணாநிதி 107 சாதியினருடன் நம்மையும் சேர்த்து வஞ்சகமாக இடஒதுக்கீடு வழங்கினார். அதில், நமக்குக் கிடைத்தது ஏழு விழுக்காடுகள்தான். உழைத்து

உழைத்து ஒடுக்கப்பட்டிருக்கும் நாம் அதிகாரத்திலே, கல்வியிலே, வேலை வாய்ப்பில் இன்னமும் கடைசியில்தான் இருக்கிறோம். அதனால்தான் மீண்டும் இந்தப் போராட்டத்தைத் தொடங்கி இருக்கிறோம். தமிழ்நாட்டில் ஏழு கோடி தமிழர்களில் வன்னியர்களின் பலம் இரண்டரை கோடி. அதன்படி பார்த்தால் நமக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும். நாம் 20 சதவிகிதம்தான் கேட்கிறோம். நம் மக்களை ஓட்டுப் போடுகிற சாதியாக, குடை பிடிக்கிற சாதியாக, கோஷம் போடுகிற சாதியாக, இலவசங்களுக்குக் கையேந்துகிற சாதியாகவே வைத்திருக்கிறார்கள். டாஸ்மாக் கடையைத் திறந்து குடிகார சாதியாகவும் மாற்றினார்களே தவிர நமக்குக் கல்வியைக் கொடுத்தார்களா? வேலையைக் கொடுத்தார்களா? சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள 60 நீதிபதிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் 10 பேர்தான் நீதிபதிகளாக இருக் கிறார்கள். முதலியார்கள் ஆறு பேர் இருக்கிறார்கள். மற்ற சாதி யினர் எல்லாம் ஐந்து பேர், நான்கு பேர் இருக்கிறார்கள். நமக்குக் கிடைத்திருப்பது ஒன்றே ஒன்றுதான்.

வன்னிய மக்களுக்காக நான் இதுவரை 10 முறை சிறை சென்றிருக்கிறேன். இன்றுவரை நியாயம் கிடைக்கவில்லை. இந் தப் போராட்டம் ஆட்சியைக் கலைப்பதற்காக அல்ல. தி.மு.க., அ.தி.மு.க-வை வீட்டுக்கு எப்படி அனுப்புவது என்பது எங்களுக்குத் தெரிந்து விட்டது. அந்தக் காரியம் 2016-ல் நடைபெறப்போகிறது. அதற்கு முன்னால் தனி இட ஒதுக்கீடு கேட்டு வேண்டுகோள் வைக்கிறோம். ஆட்சியாளர்களுக்குச் சொல்கிறோம். இது எங்களது கடைசி அறவழிப் போராட்டம். தனி இடஒதுக்கீடு கிடைக்கவில்லை என்றால், அடுத்த ஆண்டு இதே நாளில் தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும். மூன்று லட்சம் இளைஞர்கள் ஜெயிலுக்குப் போகிற சிறை நிரப்பும் போராட்டமாக அது இருக்கும். எங்கள் அனைவரையும் சிறையில் அடைப்பதற்கு இப்போதே சிறையைத் தயார் செய்து கொள்ளுங்கள்'' என்று எச்சரித்தார்.

போளூரில் ராமதாஸ் என்றால், அரியலூர் மற்றும் பெரம்பலூரில் நடந்த போராட்டங்களில் கலந்து கொண்டார் வன்னியர் சங்கத் தலைவரான காடுவெட்டி குரு. பழனி கோயிலில் போடப்பட்ட மொட்டை, கறுப்புக் குல்லா, கூலிங்கிளாஸ் என்று வித்தியாசமான கெட்டப்பில் வந்து இருந்தார் குரு.

''பெரியாரின் வாரிசுகளாக சொல்லிக்கொள்ளும் திராவிடத் தலைவர்களான எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் எங்கள் கோரிக்கையான தனி இடஒதுக்கீட்டை மறுக்கிறார்கள். நாம் அறிவு சார்ந்த சமூகமாக மாறிவிடக்கூடாது எனவும் குடிகாரர்களாக வாழவேண்டும் என்றும் திட்டமிட்டே இட ஒதுக்கீட்டை மறுத்து வருகிறார்கள்.

இந்தப் போராட்டத்தில் 21 பேரை பலிகொடுத்து இருக்கிறோம். லட்சக்கணக்கான இளைஞர்கள் சிறைக்குச் சென்று வழக்குகளைச் சந்தித்தனர். அதன்பிறகு, மற்ற பல சாதிகளுக்கும் சேர்ந்து இட ஒதுக்கீட்டைக் கொடுத்து கலைஞர் எங்களுக்குத் துரோகம் இழைத்தார். 32 வருடங்கள் அமைதியாகப் போராடி விட்டோம். இப்போது முதல்வராக இருக்கும் ஜெயலலிதா, எங்களுக்கான இடஒதுக்கீட்டை உடனே வழங்க வேண்டும். மறுத்தால், வடஇந்தியாவில் குர்ஜார் இன மக்கள் நடத்திய போராட்டத்தைப் போல பெரும் போராட்டத்தை நடத்த வேண்டி இருக்கும். இன்னும் எத்தனை பேரை பலி கொடுத்தாலும் இட ஒதுக்கீட்டை பெறாமல் இருக்க மாட்டோம். நாங்கள் வாழ்வதற்காக எத்தகைய வன்முறையையும் கையில் எடுப்போம். நாங்கள் வாழ வழியில்லை என்றால்... தமிழகத்தில் யாரும் அமைதியாக ஆள முடியாது'' என்று கொதித்தார்.

என்ன செய்யப்போகிறது அரசு?

- கோ.செந்தில்குமார், சி.ஆனந்தகுமார்

படங்கள்: பா.கந்தகுமார், எம்.ராமசாமி