கரூரைக் கலக்கிவிட்டது சூதாட்ட கிளப் ரெய்டு!

கடந்த 2001-ம் ஆண்டு, கரூரைச் சுற்றி யுள்ள பல இடங்களில் சீட்டு விளையாடும் கிளப்கள் இருந்தன. உள்ளூர் அரசியல்வாதிகள், போலீஸ் ஆசியோடு அவை எல்லாமே அமோகமாக நடந்தன. விவகாரம், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்குப் போனது. உடனே, கரூர் மாவட்டச் செயலாளர் கு.வடிவேலை கட்சியை விட்டே நீக்கினார். காவல்துறை அதிகாரிகளையும் சஸ்பெண்ட் செய்தார். அப்போது, மளமளவென மூடப்பட்ட கரூர் கிளப்கள், சமீபத்தில் மீண்டும் முளைக்கத் தொடங்கியுள்ளன.

'மனமகிழ் மன்றம்’ என்ற பெயரில் சில மாதங்களாக சூதாட்டம், மது, விபசாரம் போன்றவை இங்கே இரவு, பகல் பாராமல் களை கட்டியது. இந்நிலையில், கடந்த 16-ம் தேதி இரவு போலீஸ் நடத்திய அதிரடி ரெய்டில், சூதாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. உள்ளிட்ட பல கட்சிகளின் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 53 பேர் சிக்கினர்.

கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன் அருகே அமைந்திருக் கும் ஜூபிளி லிட்டரரி அசோசியேஷனில்தான் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது. 125 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த கிளப்பில் ஆளும் கட்சிப் பிர முகர்கள், தொழில் அதிபர்கள், அரசு அதிகாரிகள் என பலரும் உறுப்பினர்கள். எந்த விளையாட்டுக்கும் பணம் பந்தயம் கட்டக்கூடாது என்பதே அரசு நிபந் தனை. ஆனால், இந்த நிபந்தனை காற்றில் பறந்து போனதுதான் ரெய்டுக்குக் காரணம்.

ரெய்டை வெற்றிகரமாக நடத்திய கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் முகேஷ் ஜெயக்குமாரிடம் பேசினோம். ''சில நாட்களாக அரசியல் பிரமுகர்களின் மனைவிகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், அந்த கிளப்புக்குச் செல்லும் தங்கள் கணவரை, உறவினரை மீட்டுத் தரச் சொல்லி மனுக்கொடுத்தனர். அதேசமயம், கிளப் அமைந்திருக்கும் பகுதி மக்களும் புகார் செய்தனர். கிளப்புக்கு வெளியே ரோட்டை மறிக்கும் அளவுக்கு கார்கள் நிற்பதையும், உள்ளே சம்பந்தமே இல்லாமல் நிறையப் பெண்கள் சென்று வருவதையும் கவனித்தோம். 20 நாட்களுக்கு முன்பே, கிளப் நிர்வாகிகளை எச்சரித்தோம். அவர்கள் மாறியதாகத் தெரியவில்லை. அதனால், கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு எஸ்.பி. சந்தோஷ் குமார், டி.எஸ்.பி. மனோகரன் உத்தரவின் பேரில் அந்த கிளப்பை முற்றுகையிட்டோம். கீழ்தளத்தில் செஸ், கேரம் விளையாடிக்கொண்டு இருந்தவர்களை விசாரிக்கவில்லை. மேல்தளத்தில் மது அருந்தியபடி வெட்டாட்டச் சீட்டு ஆடிக்கொண்டிருந்த 53 பேரை கையும் களவுமாகப் பிடித்தோம். அதில், கிளப் செயலாளர் குணசேகரன், தி.மு.க-வைச் சேர்ந்த தாந்தோணி ஒன்றியச் செயலாளர் எம்.ரகுநாதன், உப்பிடமங்கலம் பேரூராட்சி அ.தி.மு.க. செயலாளர் தங்கராஜ், வி.ஏ.ஓ. காமராஜ், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் கந்தசாமி, பிச்சைமுத்து, வி.ஏ.ஓ. கந்தசாமி உட்பட கரூரைச் சேர்ந்த தொழிலதிபர்கள் பலரும் அடக்கம். சூதாட்டத்துக்குப் பயன்படுத்திய 2 லட்சத்து 26 ஆயிரத்து 380 ரூபாயையும் கைப்பற்றினோம்.

கைது செய்தவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவின் பேரில் கரூர் கிளைச்சிறையில் அடைத்துவிட்டோம். ஒருநாள் சிறையில் இருந்த அவர்கள் நிபந்தனை ஜாமீனில் வந்து விட்டனர். இதுபோல, சட்டவிரோதச் செயல்களில் யார் ஈடுபட்டாலும் பொதுமக்கள் எப்போது வேண்டுமாலும் எங்களுக்குப் புகார் தரலாம். நடவடிக்கை எடுக்கக் காத்திருக்கிறோம்'' என்றார்.

ஜாமீனில் வந்தவர்களுக்கு மாலை, மரியாதை, தாரை தப்பட்டையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டதாம். இதில், அனைத்துக் கட்சிகளின் மாவட்டப் பிரமுகர்களும் கலந்து கொண்டார்களாம். அன்று மாலை, கரூரில் இருக்கும் பிரபலமான ஹோட்டலில் கூடிப் பேசியவர்கள், 'நம்மை கைது செய்த இன்ஸ்பெக்டரை டிரான்ஸ்ஃபர் செய்ய வேண்டும். அதற்கு அனைத்துக் கட்சியினரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும்’ என சபதம் போட்டார்களாம்.

ரெய்டு குறித்து கிளப் நிர்வாகிகளிடம் கருத்துக் கேட்க முயன்றோம். ஆனால், அவர்கள் தரப்பில் பதில் சொல்ல யாரும் தயாராக இல்லை.

ரெய்டில் சிக்கி சிறைக்குச் சென்று வந்த தி.மு.க-வைச் சேர்ந்த தாந்தோணி ஒன்றியச் செய லாளர் எம்.ரகுநாதனிடம் பேசினோம். ''அந்த கிளப் 125 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. கரூரில் இருக்கும் வி.ஐ.பி-கள் 750 பேர் உறுப்பினர்களாக இருக்கிறோம். எங்கள் ஓய்வு நேரத்தைக் கழிக்கவே அங்கு செல்கிறோம். அன்றைய தினம் நாங்கள் யாரும் பணம் வைத்து சீட்டாடவில்லை. ரம்மிதான் விளையாடிக்கொண்டு இருந்தோம். ஆனால், வெட் டாட்டம் விளையாடியதாக வழக்குப் பதிவு செய்து இருக்கிறார்கள். மொத்தத்தில் இந்த ரெய்டே தேவை இல்லாதது. மீடியாக்களிடம் ஹீரோவாக காட்டிக்கொள்ளவும், ஏதோ உள் நோக்கத்துடனும்தான் இந்த ரெய்டை நடத்தி இருக்கிறார்'' என்று கொதித்தார்.

இதற்கிடையில், அ.தி.மு.க-வின் முக்கியப் பிரமுகர் ஒருவர் நடத்தும் கிளப் பற்றியும் மேலிடத்துக்குத் தகவல் போய் இருக்கிறதாம். அந்த கிளப் மீதும் நடவடிக்கை பாயுமா?

- ஞா.அண்ணாமலை ராஜா