'கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதையாக ஒரு காரியத்தைச் செய்திருக்கிறார், அமைச்சர் எடப்பாடி பழனிசாமி’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்குத் (044-66808002) தகவல் வரவே விசாரித்தோம்.

சேலம் மாவட்டம், ஜலகண்டபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் ஒன்றுசேர்ந்து நிதி திரட்டி, தாங்கள் படித்த பள்ளிக்குப் புதிய கட்டடம் கட்டி முடித்தனர். ஆனால் அதை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு நிதியில் இருந்து கட்டியது போல திறப்பு விழா நடத்தவே, நொந்து போய் இருக்கிறார்கள் ஏரியா மக்கள்.

இதுபற்றி, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சித்தையன், ''நான் 1994-ம் ஆண்டு ஜலகண்டபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தேன். பள்ளியில் போதிய கட்டட வசதி இல்லாததால், குழந் தைகள் மரத்தடியில் படித்தனர். இந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் காசி, வணங்காமுடி, செல்வராஜ், வெங்கடேசன் உள்ளிட்ட சிலர் என்னைப் பார்க்க வந்த நேரத்தில் 'நீங்கள் எல்லோரும் சேர்ந்து நம்ம பள்ளிக்கு ஒரு புதிய கட்டடம் கட்டித் தாருங்கள்’ என்று கேட்டேன். அவர்களும் மகிழ்ச்சியாக சம்மதித்தனர்.

முன்னாள் மாணவர்களைத் தேடிச்சென்று சிறுக சிறுகப் பணத்தைச் சேர்த்து 120 அடி நீளம், 40 அடி அகலத்தில் 25 லட்சம் செலவில் ஆடிட்டோரியம் கட்டினார்கள். அது, கட்டி முடிக்கப்படும் நிலையில், பணப்பற்றாக்குறையால், வேலையைத் தொடர முடியவில்லை. அதன்பிறகு, ஜலகண்டபுரம் ரோட்டரி சங்கத்தினர் ஏழு லட்ச ரூபாய் செலவு செய்து மறுசீரமைப்பு செய்து கட்டடத்தை முடித்தனர். ஆனால், நெடுஞ்சாலைத் துறை அமைச்சரோ அவர்கள் யாரையும் அழைக்காமல் தன்னுடைய நிதியில் இருந்து கட்டியது போல அந்தக் கட்டடத்துக்கு திறப்பு விழா நடத்தி இருக்கிறார். இது, அநாகரிகமான செயல். சேவை மனப்பான்மை உடையவர்களை நோகடிக்கும் செயல்'' என்றார்.

முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் காசி, ''தான் படித்த பள்ளி என்ற பாசத்தில் பணத்தை வாரிக் கொடுத்த முன்னாள் மாணவர்களையும், எங்களுக்கு மிகுந்த உதவி செய்த ரோட்டரி சங்கத்தினரையும் அழைத்து ஒரு விழா நடத்தி ஆடிட்டோரியத்தின் சாவியை முதன்மைக் கல்வி அதிகாரியிடம் கொடுக்கலாம் என்று, திட்டமிட்டு இருந்தோம். ஆனால், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாங்க கட்டிய கட்டடத்தை அரசு கட்டிய கட்டடம் போல விழா நடத்தி, திறந்து வைத்திருக்கிறார். அதோடு, சுவற்றில் பதித்த கல்வெட்டில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா ஆசியோடு என்றும், திட்ட மதிப்பு 50 லட்ச ரூபாய் என்றும் பொறித்து இருக்கிறார்கள். இது, எவ்வளவு பெரிய அநியாயம். அரசுப்பணம் இந்த விஷயத்தில் மோசடி செய்யப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. இதற்குக் காரணமாக செயல்பட்டவர் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினரும் பெற்றோர் கழக ஆசிரியர் கழகத் தலைவருமான கந்தசாமிதான். அவர்தான் 'சாவி கொடுங்கள். கட்டடத்தை பார்த்து விட்டுத் தருகிறோம்’ என்று, தந்திரமாக சாவியை வாங்கிச் சென்றார். இந்த

சம்பவத்துக்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லை என்றால், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம்'' என்றார் கொந்தளிப்பாக.

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கந்தசாமி யிடம் பேசினோம். ''ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்த சரவணன், பாபு, அரசு ஆகியோர்தான் என்னிடம் சாவியைக் கொடுத்தனர். 'எங்களால் திறப்பு விழா நடத்த முடியுமா என்று தெரியவில்லை. அதனால், நீங்களே அமைச்சரை வைத்து திறப்பு விழா நடத்திக் கொள்ளுங்கள்’ என்றார். அதனால்தான், அமைச்சர் இந்தப் பகுதிக்கு வந்தபோது இதை திறந்து வைக்கச் சொன்னோம். அவர்கள் சாவி கொடுத்த பிறகு, அது எங்கள் சொத்து'' என்றார்.

ஜலகண்டபுரம் ரோட்டரி கிளப்பைச் சேர்ந்தவர் களோ, ''அவர்களாக வந்துதான் எங்களிடம் சாவியை வாங்கிச் சென்றனர். எங்களிடமும், முன்னாள் மாணவர்களிடமும் சொல்லாமல் திறப்பு விழா நடத்தி விட்டு நாங்களே கொடுத்ததுபோல் பொய் சொல்கிறார்கள்'' என்கின்றனர்.

இதுபற்றி பேச நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பலமுறை தொடர்பு கொண்டும், ''அமைச்சர்கிட்ட பேச முடியாது. என்ன பிரச்னையா இருந்தாலும் சொல்லுங்க. நானே விளக்கம் தரேன். எனக்கு அந்த அதிகா ரத்தை அமைச்சர் கொடுத்திருக்காரு'' என்று சொன்னார் அவரது உதவியாளர் கிரிதரன். நாம் விசயத்தைச் சொன்னதும், ''இதெல்லாம் ஒரு பிரச்னையாங்க.. அரசு விழா நடந்த போது அங்கே ஒரு கல்வெட்டு இருந்துச்சு. அதைத் திறந்து வைக்கச் சொன்னாங்க. அமைச்சரும் திறந்துட்டாரு. அதுக்கு பின்னாடி இவ்வளவு பெரிய பிரச்னை இருக்கும்னு அவருக்குத் தெரியாதுன்னு எழுதிக்கோங்க.'' என்றார் அலட்டிக் கொள்ளாமல்.

பத்திரிகையாளர்களையே நெருங்க விடாமல் அமைச்சரின் உதவியாளர்கள் தடை போடுகிறார்கள் என்றால், பொது மக்கள் எப்படி தங்களின் குறைகளை அமைச்சரிடம் முறையிடுவது?

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: க.தனசேகரன்