Published:Updated:

தலைமுடியை இழுத்து... துடைப்பத்தால் அடித்து!

எடப்பாடி இளைஞர் காங்கிரஸ் ரணகளம்

பிரீமியம் ஸ்டோரி
##~##
தலைமுடியை இழுத்து... துடைப்பத்தால் அடித்து!

ளைஞர் காங்கிரஸ் நிர்வாகி களுக்கான தேர்தல் இந்த மாதத்தில் நடக்க இருக்கிறது. தேர்தலுக்கு முன் நடக்கும் குடுமிப்பிடிச் சண்டைகள் காங்கிரஸ் கலாசாரத்தைக் கரெக்ட்டாகச் சொல் கின்றன. 

இளைஞர் காங்கிரஸின் எடப்பாடி சட்டமன்றத் தொகுதி முன்னாள் பொறுப்பாளர் தங்கம் பேசும்போது, ''சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம்தான் என் ஊர். எங்க அப்பா, அம்மாவுக்கு அரசியல் என்றால் என்னவென்றே தெரியாது. நான் யாருடைய பின்புலமும் இல்லாமல் காங்கிரஸ் கட்சியில் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறேன்(?). சின்ன வயதில் இருந்தே காங்கிரஸ் மீது தீவிரப் பற்றுகொண்டு, வாசன் மாநிலத் தலைவராக இருந்தபோது, அவரின் ஆதரவாளராக 10 ஆண்டுகளுக்கு முன்பே கட்சியில் சேர்ந்து விட்டேன். அப்போது எனக்கு 21 வயது.

அப்போது முதல் கட்சிக்காக அல்லும் பகலும் அயராது உழைத்தேன். அதனால், 2005-ல் சேலம் மாவட்ட சேவாதள அமைப்பாளராகப் பொறுப்பு கிடைத்தது. அப்போது, கோவையில் இருந்து

தலைமுடியை இழுத்து... துடைப்பத்தால் அடித்து!

சென்னைக்கு கோவை செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற 30 நாள் நடைபயணத்தில் கலந்து கொண்டேன். 2008-ல் விருதுநகர் காமராஜர் இல் லத்தில் இருந்து சென்னை காமராஜர் நினைவு இல்லம் வரை 15 நாட்கள் சைக்கிள் பயணத்தில் கலந்துகொண்ட ஒரே பெண் நான்தான். 2011-ல் கன்னியாகுமரி முதல் சென்னை காமராஜர் அரங்கம் வரை 54 நாட்கள் நடைபயணம் சென்றேன். சேவாதளம் மாநிலப்  பயிற்சி முகாமில் தேர்வு பெற்று, டெல்லியில் 12 நாட்கள் பயிற்சி பெற் றேன்.

இந்தப் பயிற்சி முடித்ததும் எனக்கு சேவாதள மாநில அமைப்புச் செயலாளர் பதவி கிடைத்தது. சேவாதள மாநிலத் தலைவர் கோவை செல்வராஜ், திடீரென சிதம்பரம் ஆதரவாளராக மாறியதால்... வாசன் ஆதரவாளரான நான் என் பதவியைத் தூக்கி எறிந்தேன். அதன்பிறகு, 2009-ல் நடந்த இளைஞர் காங்கிரஸில் சட்டமன்றப் பொறுப்பாளர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். கடந்த முறை, இளைஞர் காங்கிரஸ் நாடாளுமன்றப் பொறுப்பாளர் பதவிக்குப் போட்டியிட்டபோது, என் வளர்ச்சியைப் பிடிக்காத மாநில முன்னாள் பொதுச்செயலாளர் சுசீந்தரகுமார், 'நீ போட்டியிடக் கூடாது’ என்று தடுத்தார். நானும் விலகிக்கொண்டு மாநிலச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்டேன். அந்தப் பதவிக்குக் கட்சியிலேயே இல்லாத அவரின் உறவுக்காரப் பெண்ணை போட்டியிட வைத்து, இல்லாததும் பொல்லாததும் சொல்லி என்னைத் தோற்கடித்தார்.

இரண்டரை ஆண்டுகள் கழித்து மீண்டும் இளைஞர் காங்கிரஸ் மாநிலச் செயலாளர் பதவிக்கு இந்த மாதம் 26, 27, 28 நாட்களில் தேர்தல் நடை பெறுகிறது. இந்தத் தேர்தலுக்கு நான் விண்ணப்பித்து இருக்கிறேன். இந்த முறையும் அவரது உறவுக்காரப் பெண்ணை நிறுத்தி இருக்கிறார். நான் போட்டி யிட்டால் வெற்றி

தலைமுடியை இழுத்து... துடைப்பத்தால் அடித்து!

பெற்றுவிடுவேன் என்று பயந்து, என்னை விலகச் சொல்லி மிரட்டிக்கொண்டே இருந்தார். இந்தநிலையில், கடந்த 19-ம் தேதி புதன்கிழமை காலை 6 மணிக்கு கொங்கணாபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே நான் நடத்திவரும் வாசன் கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனத்துக்கு சுசீந்தரகுமார் தன் ஆதரவாளர்களோடு வந்தார்.

தனியாக இருந்த என் தலைமுடியைப் பிடித்து இழுத்து 'தேர்தலில் போட்டியிடுவியா, போட்டியிடுவியா?’ என்று கேட்டு அடித்து உதைத்தார். ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாமல் பக்கத்தில் இருந்த துடைப்பக் கட்டையை எடுத்து நானும் அவரை வெளுத்துட்டேன். அதுக்குப்பிறகு, எடப்பாடி போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் புகார் கொடுத்தேன். அன்றைக்கு நான் தப்பிக்கா விட்டால், என்னைக் கொலை செய்து இருப்பார். காங்கிரஸ் கட்சியில் உழைக்க மட்டும் தொண்டர்கள் வேண்டும். பதவிக்கு தன் வாரி சுகள்தான் வரவேண்டும் என நினைப்பது சரியா? இப்படி இருந்தால் பொதுமக்கள் யார் கட்சியில் சேருவார்கள். அதனால், இந்த சுசீந்தரகுமாரைக் கட்சியை விட்டு நீக்கவேண்டும். என்னை அடித்ததற்காக அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்'' என்றார்.

இதுபற்றி பேசிய சுசீந்தரகுமார், ''அந்தப் பெண், வாசன் ஆதரவாளர் என்பதே தவறு. அவர் தங்கபாலு ஆதரவாளர். வாசன் ஆதரவாளர்களான மோகன் குமாரமங்கலம் நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர் பதவிக்கும், யுவராஜா மாநிலத் தலைவர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள். தங்கபாலு ஆதரவாளரான விஜயவர்மா நாடாளுமன்றத் தொகுதிப் பொறுப்பாளர் பதவிக்கும், விஜய் இளஞ்செழியன் மாநிலத் தலைவருக்கும் போட்டியிடுகின்றனர். இதில், வாசனுக்கு ஆதரவாக 1,800-க்கு மேற்பட்டோர் இருக்கின்றனர். தங்கபாலுவுக்கு ஆதரவாக 748 பேர்தான் இருக்கிறார்கள். இதனால், தங்கபாலுவின் ஆதரவாளர்கள் படுதோல்வி அடைவார்கள். இதனால், இங்கு குழப்பம் விளைவிப்பதும் வேவு பார்த்து தங்கபாலுக்கு உளவு சொல்வதும்தான் இந்தப் பெண்ணின் வேலை. தங்கபாலு காசு கொடுத்து உளவாளியாக அனுப்பி இருக்கிறார். தங்கபாலுதான் இந்தப் பெண்ணை இயக்குகிறார். 18-ம் தேதி இரவு 11 மணிக்கு இந்தப் பெண் எனக்கு போன் செய்து, 'கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டினார். 'நாசமாப் போயிடுவே, உருப்படாம போயிடுவே’ என்று சாபம் விட்டாள். அதனால்தான் 19-ம் தேதி காலை அவரது சென்டருக்குப் போய் அடி பின்னி எடுத்தேன். அவளும் பதிலுக்கு விளக்குமாற்றால் அடித்தாள். இரண்டு பேரும் அடித்துக்கொண்டதால் சரிக்கு சரியாகப் போய்விட்டது. பிறகு எதற்கு போலீஸில் புகார் செய்ய வேண்டும்? பத்திரிகைக்கு பேட்டி கொடுக்க வேண்டும்? கட்சிக்கு உள்ளே நடக்கும் ரகசியத்தைக் வெளியில் சொன்னதால், இவரைத்தான் கட்சியைவிட்டு நீக்க வேண்டும்'' என்றார் சீரியஸாக.

காங்கிரஸ் கலாசாரத்தில் நல்ல வளர்ச்சிதான்.  

- வீ.கே.ரமேஷ், படங்கள்: க.தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு