'அரசாங்கம் கொடுக்கிற விலை இல்லா வேட்டி, சேலைகளைத் தராம இழுத்தடிக்கிறாங்க...’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66808002) பதிவானது ஒரு புகார்.

பழைய மகாபலிபுரம் சாலை மேட்டுக்குப்பத்தில் அமைந்துள்ள வி.ஏ.ஓ. அலுவலகத்துக்குப் புறப் பட்டோம். செப்டம்பர் 25-ம் தேதி பிற்பகலில் நாம் சென்றபோது, அலுவலகத்துக்குப் பூட்டு போடப் பட்டு இருந்தது. அலுவலர்கள், அருகில் இருந்த டீக்கடையில் இருந்தனர். அலுவலக சுவரில் இருந்த அறிவிப்புப் பலகையில் 'புடவை, வேட்டி வழங் குதல் முடிவடைந்தது’ என்ற வாசகம்..

கையில் ரேஷன் கார்டுடன் வேட்டி, சேலை வாங்க அலுவலகத்துக்கு முன் சிலர் காத்திருக்க... அவர்களிடம் விசாரித்தோம்.

பாலாஜி நகரைச் சேர்ந்த குணசேகரன், ''பொங்கலுக்குக் கொடுக்கவேண்டிய இலவச வேட்டி, சேலையை இப்போதான் கொடுக்கிறாங்க. அதையும் இப்ப வா, அப்ப வானு அலைக்கழிக்கிறாங்க. அவங்க சொன்ன தேதியிலதான் வந்தேன். இப்போ, புடவை, வேட்டி இல்லைனு கையை விரிச்சிட்டாங்க. மூணு நாளா அலைஞ்சு வேலைக்குப் போகாததுதான் மிச்சம். அரசாங்கம் கொடுக்கிறதைத் தர்றதுக்கு என்னங்க... இலவச வேட்டி சேலைகளை வெளி யில வித்துடுறாங்களோ என்னவோ?'' என்று அங்கலாய்த்தார்.

ராஜீவ் நகரைச் சேர்ந்த சாரதா, ''நான் போன வியா ழக்கிழமை வந்தேன். என்னோட கார்டில் புடவை வழங்கப்பட்டதுக்கான சீல் மட்டும் குத்திட்டு, உங்களுக்கு 25-ம் தேதின்னு சொல்லிட்டாங்க. சீல் குத்திட்டாங்கனு சொன்னதும், அதுக்கு மேல பேனாவால அடிச்சிட்டு, நீ அன்னைக்கு வந்து வாங்கிக்கலாம்னு சொன்னாங்க. இப்ப வந்தா, எல்லாம் முடிஞ்சிபோச்சுனு சொல்லிட்டாங்க. எனக்கு வேட்டி, சேலை கிடைக்காதா?'' என்றார் பரிதாபமாக.

''இந்த இலவச வேட்டி, சேலையை, கடந்த திங்கள் கிழமையில (17-ம் தேதி) இருந்து கொடுத் துட்டு இருக்காங்க. எந்தெந்த ஏரியாவுக்கு எப்போனு அந்தந்த ஏரியா ரேஷன் கடையில் நோட்டீஸ் ஒட்டி இருக்காங்க. ஆனா, நோட்டீஸில் கூறி இருந்தபடி வேட்டி, சேலை தரலைங்க. கண்ணகி நகர், பி.டி.சி.

குவாட்டர்ஸ், குமரன் குடில், ஒக்கியம்பேட்டை, கஸ்தூரிபாய் நகர் பகுதியிலும் வேட்டி, சேலை வாங்காம இருக் காங்க. இன்னைக்கு தருவதாச் சொல்லி காலையில 50 பேருக்கு மேல வந்து காத்திருந் துட்டு போயிட்டாங்க. நாங்க மதியத்துக்கு மேலதான் வந்தோம். வி.ஏ.ஓ. வெளியூர் போயி ருக்காராம். ஆபீஸ்ல கேட்டா, 'போர்டுல எழுதிப் போட்டிருக்கு, பார்த்துக்கோங்க’னு அசால்ட்டா சொல்லிட்டு, ஆபீஸைப் பூட்டிட்டு பக்கத்துல இருக்குற டீக்கடையில போய் உட்கார்ந்துட்டாங்க. இவங்களுக்கு மக்கள் பணியாளர்கள்னு நினைப்பே இல்லை'' என்று புலம்பினர்.

அந்தப் பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர் பாஸ்கரனிடம் பேசினோம். ''புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தரும் விலையில்லா பொருட்கள் கண்டிப்பாக மக்களிடம் சென்றடைய வேண்டும். வேட்டி, சேலை கிடைக்கவில்லை என்று எனக்கும் மக்கள் போன் செய்தனர். அவர்களுக்கு விரைவில் கிடைக்க வி.ஏ.ஓ-விடம் பேசி இருக்கிறேன்'' என்றார்.

டீக்கடை அருகில் நின்றிருந்த கிராம உதவியாளர் முரளியிடம் பேசினோம். ''சரக்கு இருந்த வரை கொடுத்தாச்சு. இப்போ இல்லை. வி.ஏ.ஓ. காஞ்சிபுரம் வரை போயிருக்காங்க. அவரிடம் தகவல் சொல்லியாச்சு'' என்றார்.

வி.ஏ.ஓ. குமரேசனிடம் பேசினோம். ''ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் இப்போது மொத்தம் 17 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ளன. கடந்த ஆண்டுகளில் 16 ஆயிரம் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை கொடுக்கப்பட்டிருந்தது. அந்த எண்ணிக்கையிலேயே இந்த ஆண்டும் வேட்டி, சேலை தரப்பட்டதால், கூடுதலான ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்க முடியவில்லை. இதுகுறித்து தாசில்தாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனே நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

மீண்டும் நம்மை தொடர்புகொண்ட வி.ஏ.ஓ. குமரேசன், ''தாசில்தாரிடம் பேசிவிட்டேன். விடுபட்டவர்களுக்கான வேட்டி, சேலையை சப்ளை செய்யச் சொல்லிவிட்டார். நாளை காலை வழங்கப்பட்டு விடும். அந்த மக்களை நாளை வந்து வாங்கும்படி நீங்கள்கூட சொல்லிவிடுங்கள். அறிவிப்பு பலகையிலும் எழுதச் சொல்கிறேன். கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் மேலாக ஞாயிற்றுக் கிழமையிலும் பணியாற்றி வேட்டி, சேலை வழங்கி இருக்கிறோம். மக்களுக்கு அரசு தரும் பொருட்களை விநியோகிப்பதுதான் எங்களின் முதல்வேலை. அதில் இருந்து தவறவே மாட்டோம்'' என்றார்.

வி.ஏ.ஓ. சொன்னபடியே அடுத்த நாள் அனைவருக்கும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்பட்டு விட்டது. மீண்டும் ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் நம்மைத் தொடர்புகொண்டு, 'ஜூ.வி-யில் சொன் னோம். உடனே வேட்டி, சேலை கிடைச் சிடுச்சு. ரொம்ப நன்றி’ என்று பதிவு செய்திருந்தனர் மக்கள்.

நல்லது நடந்தால் போதுமே!

- மு.செய்யது முகம்மது ஆசாத்