திருவண்ணாமலை நகராட்சியில் நிறைவேறி இருக் கும் அதிரடித் தீர்மானங்களால், பொதுமக்களும் வியாபாரிகளும் ஆடிப்போயிருக்கிறார்கள்!

நம்மிடம் பேசிய வழக்கறிஞரும் லாட்ஜ் உரிமையாளருமான பன்னீர்செல்வம், ''அண்ணா மலையார் கோயிலை ஒட்டியுள்ள சாலைகளில் தடுப்பு வேலி அமைத்துப் போக்குவரத்துக்குத் தடை விதித்து இருக்கிறார்கள். அதனால், இந்தப் பகுதியில் குடியிருப்போர் அநியாயமாகப் பாதிக்கப் பட்டுள்ளனர். வெளியூரில் இருந்து வரும் பக்தர்களை இறக்கிவிடும் பஸ், வேன் போன்ற வாகனங்களை டிரைவர்கள் எங்கே கொண்டு போய் நிறுத்த முடியும்? அதற்கு ஏதாவது மாற்று ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்களா? என்ன செய்யப்போகிறோம் என்று இங்கே இருக்கும் குடியிருப்பு வாசிகளையோ, வணிக நிறுவனங்களையோ, இந்தப் பகுதி கவுன்சிலர்களையோ கலந்து ஆலோசித்து முடிவை எடுத்தார்களா? சுவாமி தரிசனம் செய்துவிட்டு பக்தர்கள் தங்களது பேருந்து வரும் வரை எங்கே காத்து நிற்பார்கள்? அவர்கள் வெயில், மழையில் பாதிக்கப்படாமல் ஒதுங்கி நிற்க ஏதாவது இடம் இருக்கிறதா?

இங்கு குடியிருப்பவர்களின் வாகனங்களுக்கு மட்டும் 'பாஸ்’ வழங்கப்போவதாகச் சொல்கிறார்கள். அப்படியே 'பாஸ்’ கொடுத்தாலும் குடியிருப்புவாசிகள் அவசரத்துக்கு யாருடைய வாகனத்தையாவது எடுத்துவந்தால், எப்படி அனுமதிப்பார்கள். ஒவ்வொரு முறையும் பாஸ் காட்டிக்கொண்டு இருக்க முடியுமா?

போக்குவரத்து நெரிசலைத் தடுக்கவும் கோயில் மதில் சுவரை ஒட்டி பக்தர்கள் அசுத்தம் செய்வதைத் தடுக்கவும்தான் வேலி போடுகிறோம் என்கிறார்கள். அதற்குப் பதிலாக, எல்லா வெளியூர்

பேருந்துகளையும் டவுனுக்கு வெளியில் நிறுத்தி விட லாம். திருப்பதியைப் போல பக்தர்களை அங்கே இருந்து சிறப்புப் பேருந்துகளை வைத்து கோயிலுக்கு அழைத்து வரலாமே? நிறையக் கழிவறைகளைக் கட்டி பராமரித்தால், எதற்காக பக்தர்கள் அசுத்தம் செய்யப்போகிறார்கள்? இப்படி ஆக்கப்பூர்வமாக எந்தக் காரியத்தையுமே செய்யாமல், வேலி போடுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது'' என்றார்.

நகரமன்ற முன்னாள் தலைவர் ஸ்ரீதரன், ''திரு வண்ணாமலையின் மக்கள்தொகை சுமார் ஒரு லட்சத்து 33 ஆயிரம். வீட்டு வரியாக அரை ஆண்டுக்கு மட்டும் சுமார் மூன்று கோடி ரூபாய் வருமானம் வருகிறது. தொழில்வரி 85 லட்சம். அரசுநிதியாக சுகாதாரப் பணிக்காக சுமார் 25 லட்சம் ரூபாய் வருகிறது. நகராட்சியில் 140 தொழிலாளர்களை வைத்துக் கொண்டு, இவ்வளவு வருவாய் வந்தும் குப்பைகளை எடுப்பதற்காக ஏன் சேவை வரி விதிக்க வேண்டும்? சேவை வரி வசூலித்துத்தான் குப்பைகளை அகற்றப் போவதாகச் சொல்வது மோசடி வேலை.

தடுப்புவேலி அமைப்பதற்காக இப்போது தீர்மானம் போட்டுள்ளனர். இந்தக் கோயிலைச் சுற்றி வசிப்பவர்கள் தொல்பொருள் துறையிடம் இருந்து, இந்தக் கோயிலை மீட்பதற்காகப் பெரும்பாடுபட் டவர்கள். அவர்களுக்குத் தொல்லை கொடுக்கும் வகையில் தடுப்புவேலி அமைப்பது தேவைஇல்லாத ஒன்று. மதுரையை உதாரணம் காட்டுகிறார்கள். அது, முழுக்க முழுக்க வணிகப்பகுதி. ஆனால் இங்கே

90 சதவிகிதம் குடியிருப்புப் பகுதிதான். இவர்கள் செயல்பாடு காரணமாக ஒருவர் அவசரத் துக்கு மருத்துவமனைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விடும். அதுவும் இல்லாமல் இந்தக் கோயிலை தொல்பொருள் துறை எடுப்பதற்கு வசதியாகத்தான், நகராட்சி இதுபோல தீர்மானம் போட்டு வேலை செய்கிறதோ என்று அச்சப்படத் தோன்றுகிறது'' என்றார் காரமாக.

தொகுதி எம்.எல்.ஏ-வான தி.மு.க-வை சேர்ந்த எ.வ.வேலுவிடம் பேசினோம். ''டீசல், மின் கட்டணம், பால் விலை எல்லாமே உயர்ந்து விட்ட நிலையில் வியாபாரிகளின் தலையில் மேலும் சுமையாகவே சேவை வரியை சுமத்துகிறார்கள். இதைக்கண்டித்து தி.மு.க-வினர் வெளிநடப்பு செய்து இருக்கிறார்கள். கோயிலைச் சுற்றித்தான் சாலை அமைப்பே இருக்கிறது. பொதுமக்கள் கோயிலை ஒட்டியுள்ள சாலையைத்தான் பயன் படுத்துகிறார்கள். அதை, வேலி அமைத்துத் தடுத்து விட்டால், பொதுமக்களுக்கு இன்னும் இடையூறாகத்தான் இருக்குமே தவிர உதவியாக இருக்காது. பயன்பாட்டுக்கே வராத இடுகாடு அமைக்கும் திட்டத்துக்குப் பராமரிப்பு செலவு என்று சில லட்சங்களுக்குத் தீர்மானம் போட்டுள்ளனர். மக்கள் நலனுக்கு விரோதமாகச் செயல்படும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து 4-ம்தேதி போராட்டம் நடத்த உள்ளோம்'' என்றார்.

நகர மன்றத் தலைவர் பாலசந்தர், ''கோயிலைச் சுற்றி 1,000 வீடுகள் இருப்பதாக தி.மு.க-வினர் சொல்கிறார்கள். அது உண்மை அல்ல. உதாரணத்துக்குச் சொல்வது என்றால், வடஒத்தவாடை தெருவில் இரண்டு வீடுகள் மட்டுமே இருக்கின்றன. மீதி எல்லாமே லாட்ஜ், கடைகள் தான். நாங்கள் கொண்டுவந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் எ.வ.வேலுவின் ஆதரவாளர்கள் மட்டும்தான்'' என்றார்.

வடஒத்தவாடை தெருவில் உண்மையில் இரண்டு வீடுகள் தான் இருக்கிறதா? நாம் விசாரித்த வகையில், வடஒத்தவாடை தெருவில் 362 வாக்காளர்கள் இருக்கிறார்கள். அந்தத் தெருவில் மட்டும் கடந்த தேர்தலில் 300 ஓட்டுகளுக்கு மேல் விழுந்தி ருக்கிறது.

என்னதான் கணக்குப் போடுகிறதோ நகராட்சி?

- கோ.செந்தில்குமார்

படங்கள்: பா.கந்தகுமார்